கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

பாலஸ்தீன நாட்டின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதை போன்று, இந்தியா நடந்து கொள்கிறது

காஷ்மீர் மாநிலத்தில் ஒரு அங்குலம் கூட விட்டுத்தர மாட்டோம் என பாகிஸ்தான் மக்கள் கட்சிதலைவர் பிலாவல் பூட்டோ தெரிவித்துள்ளார்.
இது குறி்த்து அவர் கூறியிருப்பதாவது,
காஷ்மீர் விவகாரத்தை பொறுத்த வரையில் , குஜராத் மாநிலத்தில் மோடியால் பாதிக்கப்பட்டவர்கள் அமைதியாய் இருப்பதை போல் இருக்க முடியாது எனவும், காஷ்மீர் மாநிலத்தை பாகிஸ்தானின் ஒரு பகுதி தான் . எனவே காஷ்மீரின் ஒரு அங்குலப்பகுதியை கூட யாருக்கும் விட்டுத் தர முடியாது என கூறியுள்ளார். 

மேலும் தனது டுவிட்டர் இணையத்தில் பாகிஸ்தான் விவகாரத்தில் பாலஸ்தீன நாட்டின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதை போன்று இந்தியா நடந்து கொண்டு வருவது போல் தெரிகிறது. குஜராத் மாநிலத்தில் மோடியால் பாதிக்கப்பட்டவர்கள் போன்று அமைதியாக இருக்க மாட்டோம். பாகிஸ்தானால் தகுந்த பதிலடி தர முடியும் என்பதை மோடி உணர வேண்டும் என தெரிவித்துள்ளார்.
jaffnamuslim 

0 comments:

Post a Comment