பசிலை கண்டித்தாரா மஹிந்த..?
அமைச்சர் பசில் ராஜபக்சவை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் நால்வர் குறித்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அவர் பசிலை தனது கண்காணிப்பு வலயத்தின் கீழ் கொண்டுவந்துள்ளார்.
சிறிலங்கா சுதந்தரக்கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார,ஊடக அமைச்சின் செயலாளர் சரித்த கெரத், தம்மிக்க திசநாயக்க மற்றும் ஜகத் வெல்லவத்த ஆகியோரின் செயற்பாடுகள் குறித்து ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அரசாங்கத்தின் தற்போதைய நிலைமையை கருத்தில் கொள்ளாமல், மக்கள் மத்தியில் அதற்கான ஆதரவை அதிகரிக்க முயலாமல் குறிப்பிட்ட குழு பசில் ஊடாக அடுத்த தேர்தலுக்கு அழுத்தம் கொடுக்கின்றது,என அவர்கள் ஜனாதிபதிக்கு சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஜனாதிபதி தோற்பதையும்,அதன் பின்னர் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவராக பசில் வருவதையுமே குறிப்பிட்ட குழு விரும்புவதாகவும் சிறிலங்கா சுதந்தரக்கட்சியின் மூத்த தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனை ஆராய்ந்த பின்னர் தான் நாட்டில் இல்லாத வேளை குறிப்பிட்ட குழுவால் கொழும்பு 7 இல் திறக்கப்பட்ட தேர்தல் தலைமை அலுவலகத்தை அலரி மாளிகைக்கு மாற்றுவதற்க்கு உத்தரவிட்டுள்ள ஜனாதிபதி, தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்கான இணைத்தலைவராக பசிலுடன் சேர்ந்து செயற்படுவதற்கு நாமல் ராஜபக்சவை நியமித்துள்ளார்.
இதேவேளை தேர்தல் ஜனவரி 7 ம் திகதி நிச்சயமாக நடைபெறும் என ராய்ட்டரிற்க்கு தெரிவித்ததற்காக பசிலை ஜனாதிபதி கண்டித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து இறுதி முடிவை எடுப்பது தானே என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
jaffnamuslim
0 comments:
Post a Comment