கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

ஹிஜ்ரி ஆண்டு - ஒரு பார்வை

ஒவ்வொரு சமுதாயத்திற்கும் அடையாளமாக நாட்காட்டிகள் உள்ளன. அச்சமுதாயங்கள் பெருமைப் படக்கூடிய பல அர்த்தங்கள் அந்த நாட்காட்டிகளில் அடங்கியுள்ளன. மூஸா (அலை) அவர்களின் காலத்தை மதித்து அவர்களின் நபித்துவக் காலத்தில் இருந்து தமது நிகழ்வுகளுக்கு தேதியிட யூதர்கள் ஆரம்பித்ததும், ஈஸா (அலை) அவர்களின் பிறப்பைக் கண்ணியப்படுத்தி அதிலிருந்து தேதியிட கிருத்தவர்கள் ஆரம்பித்ததும் இதனால்தான். இவ்வாறு ஒவ்வொரு சமூகமும் தனது கொள்கை கோட்பாடுகளுடனும் நாகரீகத்துடனும் தொடர்புபடக் கூடிய அம்சங்களை கொண்டு, தமது நாட்காட்டிகளை நிர்ணயித்தனர்.
ஒரு சமூகம் பிற சமூகத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டு அதன் தாக்கத்தில் உள்ளாகும் போது ஆக்கிரமித்த சமூகங்களின் நாட்காட்டிகளை பின்பற்றியது வரலாறு கூறும் உண்மை. நாட்காட்டிகளின் இவ்வாறான முக்கியத்துவத்தை உணர்ந்து முஸ்லிம்கள் ஹிஜ்ரீ காலண்டரைப் பின்பற்றுவது அவசியமாகின்றது. ஹிஜ்ரி நாட்காட்டியை பின்பற்றுவது இஸ்லாமிய ஆளுமையின் சிறப்பு அடையாளமாகும்.
இந்த விஷயத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொண்ட இஸ்லாத்தின் எதிரிகள் ஹிஜ்ரா நாட்காட்டியை விட்டும் முஸ்லிம்களை திசை திருப்பி கிருத்துவ நாட்காட்டியைப் திணிப்பதற்கு முயற்சி செய்தனர். அவர்களின் தொடர் முயற்சியால் பெரும்பாலான இஸ்லாமிய நாடுகளில் இதில் வெற்றி கண்டனர். மேற்குலகின் மீதுள்ள கண்மூடித்தனமான மோகத்தால் சவூதி அரேபியா தவிர அனைத்து இஸ்லாமிய நாடுகளும் தங்களின் ஹிஜ்ரா காலண்டர் நடைமுறையை இழந்தன. கிருத்துவக் காலண்டரையே தங்கள் அரசின் அதிகாரப்பூர்வ நாட்காட்டியாக அறிவித்தன.
சவூதி அரேபியா மட்டும் ஹிஜ்ரீ நாட்காட்டியை பயன்படுத்திக் கொண்டிருப்பதுடன், அவ்வாறு செயல்படவேண்டும் என்பதை அந்நாட்டின் அரசியல் சாசனச் சட்டத்தின் இரண்டாவது பகுதியில் சட்டமியற்றியுள்ளது.
ஹிஜ்ரா காலண்டர் என்பது பெரும்பாலான முஸ்லிம்களிடம் அன்னியமாகி விட்டது. ஹிஜ்ரா காலண்டரை பின்பற்றுமாறும் கிருத்துவக் காலண்டரை புறக்கணிக்குமாறும் முஸ்லிம்களுக் கிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது முஸ்லிம் அறிஞர்களின் கடமையாகும். மார்க்க அறிஞர்களும் முஸ்லிம் சமுதாயத் தலைவர்களும் ஹிஜ்ரா காலண்டர் தொடர்பாக பொடுபோக்காக இருப்பது வேதனைக்குரிய விஷயம்தான்.

facebook

0 comments:

Post a Comment