திஹாரிய பி்ரதேசத்தில் குளிக்கச் சென்ற மாணவன் ஆற்றில் மூழ்கி மரணம்
திஹாரிய தூல்மலைப் பிரதேசத்திலுள்ள ஆற்றில் இன்று 14 வயது மாணவன் ஒரவன் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று பகல் 11 மணியளவில் தனது குடும்ப அங்கத்தவா்கள் சிலருடன் ஆற்றில் குளிக்கச் சென்ற கொழும்புப் பிரதேசத்தைச் சோ்ந்த சிறுவன் குளித்துக் கொண்டிருக்கும்போது நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளாா். இறந்த சிறுவனின் பிரேதத்தை கடற்படை வீரா்கள் தேடிக் கொண்டிருக்கின்றனா். இச்செய்தியைப் பதிவிடும் தற்போதைய நேரமான 9.45 மணிவரை பிரேதம் கிடைக்கப்பெறவில்லை என அறியக் கிடைத்தது.
0 comments:
Post a Comment