கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

சன்னாவில் Houthi Militia-விற்கு எதிராக அல்-காயிதாவின் சிலீப்பர் செல்கள்...!!

நேற்றைய தினம் யெமனின் தலைநகர் சன்னாவின் isytisyhadiyah எனும் பகுதியில் நடைபெற்ற குண்டு தாக்குதலில் 45 பேர் பலியாகியுள்ளனர். இதில் பெருமளவிலானவர்கள் Houthi  இராணுவத்தினர். மற்றையவர்கள் அவர்களுடன் இணைந்து இயங்கிய ஏனைய ஷியா குழுக்கள். இன்னும் இரு தாக்குதல்கள் கிழக்கு மாகாணமான Hadramout-ல் அமைந்துள்ள இரண்டு இராணுவ தளங்கள் மீது நிகழ்த்தப்பட்டுள்ளது. இதனை செய்தவர்கள் யெமனில் இயங்கும் அல்-காயிதாவின் அராபிய தீபகற்பத்திற்கான அமைப்பின் (AQAP) போராளிகள். 

முதலாவது  தாக்குதலானது சன்னாவின் மத்தியில் அமைந்துள்ள Tahrir Square-ல் நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்த இடம் ஷியாக்களின் பூரண கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. குண்டு வெடித்ததன் பின்னர் அங்கு 20 வெற்றுடலங்கள் சிதைந்த நிலையிலும், எரிந்த நிலையிலும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. உடலில் வெடிகுண்டுகளை இணைத்து வந்து ஒரு நபர் ஹுதி ஷியா இராணுவ தலைவர்கள் கூடியிருந்த இடத்தின் அருகில் வைத்து டெடனேட் செய்ததனால் பல ஹுதி மிலீஷியாக்கள் ஸ்தலத்தில் இறந்துள்ளனர். ஒரு இராணுவ ஆலோசனை கூட்டத்திற்காக வருகை தந்திருந்த அதிகாரிகளே இதில் பலியாகியுள்ளனர். 


Hadramout இராணுவ சோதனைச்சாவடியில் அடுத்த குண்டு வெடித்தது. இங்கேயும் ஒரு மனித வெடிகுண்டுத் தாக்குதலே நிகழ்த்தப்பட்டுள்ளது. குண்டு வெடித்த சில நிமிடங்களில் அங்கு இறந்த நிலையில் 10 Houthi ஷியாக்களின் உடல்கள் இனங்காணப்பட்டுள்ளன. 

இந்த தாக்குதல்களை Houthi ஷியா இராணுவ தலைமை எதிர்பார்க்கவில்லை. அபூஜாவில் வைத்து அல்-காயிதாவின் கதையை முடிக்கவே அவர்கள் தயாராகி வந்தனர். அதற்குள் முந்திக்கொண்டுள்ளது அல்-காயிதா. ஸன்னாவின் சிலீப்பர் செல்கள் இயங்க ஆரம்பித்துள்ளன. தன்டரிங், லைட்டினிங் என கிடைக்கும் சந்தர்ப்பங்களிற்கு வாகான தாக்குதல்களை அவர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இதற்கு முன்னரும் கடந்த இரு வாரங்களாக உபரியான பல லைட்னிங்களை Houthi மிலீஷியாக்கள் எதிர்கொண்டு வந்திருந்தன. அதில் அவர்கள் கணிசமான இழப்புக்களையும் கண்டிருந்தனர். 

யெமனில் உள்ள சுன்னி முஸ்லிம்களிற்கு வேறு எந்த ஒப்சனும் இல்லை. Houthi ஷியாக்களின் தாக்குதல்களை ஆயுதங்கள் மூலம் எதிர்கொண்டு தங்களை தற்காப்பதை தவிர. இந்நிலையில் அவர்களிற்காக இராணுவ உதவிகளை வழங்க எந்த அரபு தேசங்களும் தயார் இல்லை. காஸாவை இஸ்ரேல் தாக்கியழித்த போது எப்படி இந்த அரபு தேசங்கள் மௌனம் காத்தனவோ அது போலவே இப்போதும் சன்னாவின் அஹ்லுல் சுன்னாவை பின் பற்றும் முஸ்லிம்களை ஷியாக்கள் கொல்லும் போதும் மௌனர் காக்கின்றனர். இந்நிலையில் இவர்களிற்கு உதவியாக களம் இறங்கியுள்ளது A.Q.A.P.யாகும்.


திடீரென எழுச்சிபெற்ற Houthi யெமனின் ஷியா படையணியினர் சடுதியாக தலைநகர் சன்னாவை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். இவர்களின் இந்த இராணுவ நகர்வை மேற்கு நாடுகள் தடுக்கவும் இல்லை கண்டிக்கவும் இல்லை. அரபு நாடுகள் யெமனிய அரசிற்கு உதவ தங்கள் படைகளை அனுப்பவும் இல்லை. முஸ்லிம் தேசங்களின் தலைமையை எடுக்க துடிக்கும் துருக்கி தேசமும் ஒன்றும் செய்யவில்லை. ஆனால் ஈராக்கில் ஐ.எஸ். போராளிகள் அன்பாரை கைப்பற்றிய போது அவர்களை அழிக்க ஒரு நேர்கோட்டினுள் எல்லா தேசங்களும் அணிவகுத்தன. இது தான் சர்வதேச அரசியல் ஒழுங்கு. 
YEMEN-UNREST-BLAST : News Photo
யெமனின் தலைநகரினுள் புகுந்த Houthi மிலீஷியாக்கள், முதலில் செய்த வேலை என்ன தெரியுமா?. சுன்னி உலமாக்களை வேட்டையாடியது. அவர்களது நூல்களை பற்ற வைத்தது. அவர்களின் சொத்துக்களையும் சுகங்களையும் சூறையாடியது. வேற்று நாட்டு ஷியா தலைமைகளினாலும், அதன் உளவமைப்பினாலும் வழங்கப்பட்ட பட்டியலை வைத்துக்கொண்டு இஸ்லாமிய செயற்பாட்டாளர்களை கொலை செய்தது. இவர்களின் இந்த நடிவடிக்கைகள் எல்லா ஊடகங்களினாலும் இருட்டடிப்பு செய்யப்பட்டன. ஏன், யெமனின் சன்னாவில் வசிக்கும் பலரிற்கும் தெரியாது, சன்னாவினுள் மிலிஷியாக்கள் என்ன செய்கின்றன?, என்ன செய்யப் போகின்றன? என்பது.

யெமன் இஸ்லாமிய வரலாற்றில் பதியப்பட்ட தேசம். பெருமானார் முஹம்மத் ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம் அவர்கள் யெமன் பற்றி நிறைய அறிவிப்புக்களை வெளியிட்டுள்ளார்கள். அந்த வகையில் அதனை இலகுவாக ஷெய்டி ஷியாக்களின் கரங்களில் விழ எந்த முஸ்லிமும் விரும்பமாட்டான். 
khaibartalam

0 comments:

Post a Comment