முஸ்லிம் காங்கிரஸின் ஒரு தரப்பினருக்கு ஜனாதிபதியை சந்திக்க அனுமதியில்லை..!
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை சந்திப்பதற்கு முஸ்லிம் காங்கிரஸின் ஒரு தரப்பினர் மேற்கொண்ட முயற்சிக்கு இதுவரை வெற்றி கிடைக்கவில்லையென ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு நம்பகரமான வட்டாரங்களிலிருந்து அறிய வருகிறது.
தலைவர் ரவூப் ஹக்கீமுடன் முரண்பட்டுள்ள ஒரு தரப்பினர் (எம்.பி.க்கள்) இலங்கை முஸ்லிம்களின் தற்போதைய நெருக்கடிகள் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன் கலந்துரையாட விரும்பி அதற்காக அனுமதி கோரியுள்ளனர்.
எனினும் இதுவரை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடமிருந்து அதற்கான அனுமதி எதுவும் முஸ்லிம் காங்கிரஸினருக்கு (ஒரு தரப்பினர் -எம்.பி.க்கள்) கிடைக்கவில்லை எனவும், இதனால் அவர்கள் விசனமடைந்திருப்பதாகவும் மேலும் அறியக்கிடைக்கிறது
jaffnamuslim
0 comments:
Post a Comment