எல்லையில் I.S. பேய் வருமா என எதிர்பார்த்த சவுதி அரசிற்கு ஷியா பூதம் வந்து நிற்பது எதிர்பாராத திருப்பமே..!!
இதை படிப்பதற்கு முன் ஒரு அரசியல் சமன்பாடு பற்றி பார்ப்பது உசிதமாகும். அமெரிக்கா சவுதி அரேபியாவின் நேசநாடு. அது போலவே இஸ்ரேலிற்கும் நேசநாடு. ஈரானிற்கு எதிரான நாடு. சரி ஏன் அமெரிக்கா ஈரானை எதிர்க்கிறது? அழிக்க நினைக்கிறது?. ஈரானின் அதீத இராணுவ வளற்ச்சி, ஏவுகனை தொழில்நுட்பம், அனு ஆயுத உற்பத்தி என சில விடைகளை முன்வைக்கலாம். உண்மைதான். அப்படியானால் பிரான்ஸ், பிரிட்டன் போன்ற தேசங்களிலும் இவை உள்ளனவே. அவர்களை ஏன் அமெரிக்க அழிக்க முற்படவில்லை?. இந்த கேள்விக்கான பதிலை இப்படி சொல்லலாம். ஈரான் ஜெரூஸலத்தை கைப்பற்றி முஸ்லிம் உலகை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர விரும்பும் நாடு. அவ்வகையில் அது இஸ்ரேலின் எதிரி தேசம். இஸ்ரேலை எதிர்ப்பதனால் அமெரிக்கா ஈரானை எதிர்க்கிறது. மற்றப்படி ஒன்றும் இல்லை. நானை ஈரானுடன் சேர்ந்து சவுதிக்கு எதிராகவும் அது இயங்கும்.
மன்னர் ஷா காலத்தில் அமெரிக்க முதலாளித்துவ கொள்கையிலேயே ஈரானிய அரசு பயணித்தது. இமாம் அயாத்துல்லாஹ் ரூஹுல்லாஹ் கொமெய்னியின் புரட்ச்சி வெற்றி பெற்ற பின் ஈரானிய குடியரசு கும்மில் உள்ள முல்லாக்களின் கட்டுப்பாட்டில் வந்தது. அவர்கள் ஸியோனிஸத்தை எதிர்த்தார்கள். லெபனானிலும், சிரியாவிலும் இஸ்ரேலிய எதிர்ப்பு இராணுவ குழுக்களை உருவாக்கினார்கள். பலஸ்தீனத்தின் காஸா வரை அவர்களது அரசியல் விரிந்தது. இதனால் இஸ்ரேலை அழிக்கும் அவர்களது சிந்தனைகளிற்கு எதிராக அமெரிக்கா செயற்பட ஆரம்பித்தது. அயாத்துல்லாஹ் கொமெய்னியின் சீடர்கள் ஈரானின் ஆட்சியாளர்களாக மாறிய போது அவர்கள் சர்வதேச இராஜதந்திரரீதியிலும் அமெரிக்காவை எதிர்த்தார்கள். அமெரிக்கா ஈரானையல்ல அதன் ஆட்சியாளர்களின் கொள்கைகளையே எதிர்க்கிறது. இஸ்ரேலிய நலன்களிற்காக.
நாளை இஸ்ரேல் எதிர்ப்பு நிலைப்பாட்டில் இருந்து விலகி நிற்குமானால் ஈரான், அமெரி்க்கா அதன் உற்ற நண்பனாக மாறி விடும். சவுதி அரேபியாவை கூட ஈரானிய நலன்களிற்காக எதிர்த்து செயற்படும். இந்த சுயநல அரசியல் பொறிமுறையை உணர்ந்தவர்களாக நாம் கீழே செல்வோம்...
1962 செப்டம்பரில் யெமனில் நடந்த புரட்சியில் ஷியாக்களின் ஆட்சி வீழ்த்தப்பட்டு குடியரசு ஆட்சி உருவாக்கப்பட்டது. அன்றைய தினத்தில் இருந்து ஸெய்தி ஷியாக்கள் யெமனிய அரசியலில் இருந்தும் நிர்வாகத்தில் இருந்தும் பெரிதும் ஓரம்கட்டப்பட்டு வந்தனர். 1990-களில் ஸெய்தி ஷியாக்கள் ஹுதி இராணுவ அமைப்பை நிறுவி அதனை கவனமாக வளர்த்து வந்தனர். யெமனில் ஷியாக்கள் தலையெடுக்காத வகையில் அந்நாட்டு பொருளாதாரத்திற்கு உதவுவதன் ஊடாக சுவுதி அரேபியா அந்நாட்டு அரசு மீது நெருக்கடிளையும், அழுத்தங்களையும் பிரயோகித்து வந்தது. முன்னால் யெமனிய ஜனாதிபதி சாலேஹ் ஸெய்தி ஷியாக்களின் இராணவ அமைப்பிற்கு எதிராக தாக்குதல்களை மேற்கொண்டு அதன் தலைவர்கள் சிலரை கொன்றொழித்திருந்தார். இதற்கு பின்புலத்தில் சவுதி அரேபிய இராஜ தந்திரம் வேலை செய்திருந்தது.
யெமனினுள் ஸலபி, இஹ்வானிய தஃவா நடைபெற சவுதி அரேபிய அரசு நிதயுதவியளித்திரு்நதது. ஆனால் சமகாலத்தில் இன்னொரு தஃவாவும் வேலை செய்தது. அது ஷியா தஃவா. கும்மில் இருந்து அயாத்துல்லாக்கள் பலர் யெமன் சென்று தரித்திருந்து அங்குள்ள இளைஞர்களை புரட்ச்சி மனோபாவத்திற்கு கொண்டு சென்றிருந்தனர். ஒரு இராணுவ புரட்சிக்கான அனைத்து தயாரிப்புக்களையும் அவர்கள் செய்திருந்தனர். லெபனானில் ஹிஸ்புல்லாக்களை உருவாக்கி அவர்களிற்கு ஆதரவான மக்கள் தளத்தை உருவாக்கிய அதே புரஜக்ட் அது.
சவுதி அரேபியாவின் ஜீஸான் என்பது யெமனிற்கான நெடிய எல்லை. சவுதியின் கிழக்கு மாகாணமான ஹிஜாஸில் ஏற்கனவே ஷியாக்களின் இராணுவ இயந்திரம் மெல்ல மெல்ல அசம்பிளாகி வரும் வேளையில் இப்போது யெமனின் ஆட்சியை ஈரானின் அன் ஓபிசியல் மிலிட்டரியான ஹுதி இராணுவம் தன் வசப்படுத்தியுள்ளது. ஸன்னாவை கைப்பற்றிய ஷியாக்களின் தாக்குதல்களில் ஹிஸ்புல்லாஹ் தளபதிகள் இணைந்திருந்தமை இப்போது வெளியாகியுள்ள செய்தி. அவர்களின் வழிநடத்தல், கட்டுப்பாட்டிலேயே அந்த இராணுவ ஆக்கிரமிப்பு ஸன்னா மீது நிகழ்த்தப்பட்டது. இந்த நிகழ்வை அமெரிக்கா எதிர்க்கவில்லை. மெல்ல மௌனம் காத்து பார்த்து வருகிறது.
I.S.I.S. தன் தேசத்தினுள் நுழையுமா? என்ற அச்சத்தில் பல பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வைத்துள்ள சவுதி அரேபியா எல்லையில் ஷியாக்களின் இராணுவம் வந்த நிற்பதை கண்டு மிரண்டு போயுள்ளது. யெமனிய ஹுதி ஷியாக்கள் தம்மாஜை துவம்சம் செய்த போது வாளாவிருந்த தேசம் சவுதி அரேபியா. தாருல் ஹதீஸ் கலைக்கூடத்தை அழிக்க கும்மின் முல்லாக்கள் ஏவிவிட்ட இராணுவ பூதமே இந்த ஹுதிகள். இப்போதும் அபூஜாவில் உள்ள அல்-காயிதா ஆதரவு போராளிகளை இவர்களை வைத்தே அழித்து விடலாம். பின்னர் ஷியாக்களிற்கு முடிவு கட்டலாம் என ரியாத்தின் அரண்மனை கணக்கு போடுமானால் விளைவு விபரீதகரமானதாக அமையும். ஏனென்றால் ஹிஜாஸில் ஷியாக்களின் இராணுவ சக்கரம் மெல்ல மெல்ல சுழல ஆரம்பித்துள்ள காலத்தில் தான் இவை நிகழ்கின்றன.

0 comments:
Post a Comment