கஹட்டோவிட சகோதரி பவாஸா காலமானார்.
கஹட்டோவிடாவைச் சோ்ந்த சகோதரா் பாரூக் அவா்களின் அன்புப் புதல்வி சகோதரி பாதிமா பவாஸா அவா்கள் இன்று அதிகாலை (30.09.2014) காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். இச்சகோதரியின் சிறுநீரக மாற்று சிகிச்சைக்கான உதவி கோறளை நாம் எமது தளத்தில் வெளியிட்டிருந்தோம். இவரின் சிகிச்சைக்காக பலரும் தமது ஸதகாக்களை வழங்கியிருந்தனா். அல்லாஹ் இவா்களது ஸதகாக்களைப் பொருந்திக் கொள்வானாக!.
சகோதரி பவாஸா அவா்களின் நல்லடக்கம் இன்று மாலை கஹட்டோவிட மஸ்ஜிதுன் நூா் பள்ளி வாசலில் நடைபெறவுள்ளது.
”யா அல்லா இந்த ஜனாஸாவின் பாவங்களை மன்னித்து, கப்றை விசாலமாக்கி, நிம்மதியான பா்ஸகுடைய வாழ்வை நல்குவாயாக! அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் அளிப்பாயாக!”
0 comments:
Post a Comment