என்னிடம் ஒரு லட்சத்து 90 ஆயிரம் ரூபா மாத்திரமே இருந்தது - ஹரின் பெர்ணான்டோ
சஷீந்திர ராஜபக்ஷ ஊவா மாகாணத்தின் வெற்று முதலமைச்சர் எனவும் மக்களின் உண்மையான முதலமைச்சர் தான் எனவும் தேர்தலில் அதிகக் கூடிய வாக்கு விதத்தை பெற்ற தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் இன்று 24-09-2014 நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறினார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ருவான் விஜேவர்தன தேசிய இளைஞர் முன்னணியின் தலைவர பதவியில் இருந்து விலகி அந்த பொறுப்பை என்னை ஏற்றுக்கொள்ள சொன்ன போதிலும் நான் அதனை ஏற்க போவதில்லை.
மீண்டும் அந்த பதவியில் ருவான் விஜேவர்தனவை நியமிக்குமாறு நான் யோசனை முன்வைக்கின்றேன்.
இதனை விட மிகப் பெரிய பொறுப்பை ஊவா மக்கள் எனக்கு வழங்கியுள்ளனர்.
நான் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகி வெளியில் வரும் போது என்னிடம் ஒரு லட்சத்து 90 ஆயிரம் ரூபா மாத்திரமே இருந்தது.
இதனை யாரும் நம்ப மாட்டார்கள். ஆனால் எனக்கருகில் இருந்தவர்களுக்கு இது தெரியும்.
எங்கள் வீட்டில் 6 வாகனங்கள் இருந்தன. எனினும் நான் பஸ்ஸிலேயே பாடசாலைக்கு சென்று வருவேன்.
இம்முறை நான் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதை எனது தந்தை விரும்பவில்லை.
இதனால், தேர்தலில் அவரின் உதவி கிடைக்கவில்லை. தனியாக தேர்தலில் நின்று வெல்ல முடியும் என்று தந்தைக்கு காட்ட வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.
தேர்தலில் முற்றாக நான் செலவிடவில்லை. எனது உறவினர்கள், நண்பர்கள் மற்றும் நான் அறியாத பலர் எனக்கு உதவிகளை செய்தனர்.
எனக்கு உதவி செய்த பலர் நான் அறியாதவர்கள். நான் சோற்று பொதிகளையோ, சாராய போத்தல்களையோ விநியோகிக்கவில்லை.
அவ்வாறு நான் செய்தேன் என்பதை நிரூபித்தால், மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் எனவும் ஹரின் பெர்ணான்டோ குறிப்பிட்டார்.
jaffnamuslim
0 comments:
Post a Comment