இலங்கை, இஸ்ரேலுக்கு இடையேயான இருதரப்பு வர்த்தக நடவடிக்கைகள் அதிகரிப்பு
இலங்கை மற்றும் இஸ்ரேலுக்கு இடையேயான இரு தரப்பு வர்த்தக நடவடிக்கைகள் பாரிய அளவில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2007ஆம் ஆண்டு இலங்கை மற்றும் இஸ்ரேலுக்கு இடையே கைச்சாத்தான வர்த்தக உடன்படிக்கையினை அடுத்து, வர்த்தக நடவடிக்கைகள் 178 சத வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இஸ்ரேலில் நடைபெற்ற வர்த்தக மாநாடொன்றில் சுமார் 40 இலங்கை வர்த்தக பிரதிநிதிகள் பங்குகொண்டு பெரும் நன்மை அடைந்துள்ளதாக இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதுவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற, இஸ்ரேல் இலங்கைக்கு இடையே இடம்பெறும் வர்த்தக நடவடிக்கைகள் தொடர்பான தெளிவு படுத்தும் கூட்டத்திலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
jaffnamuslim
0 comments:
Post a Comment