பிரிட்டனிலிருந்து ஸ்காட்லாந்து தனி நாடாக பிரியுமா...? : வாக்கெடுப்பு முடிந்தது முடிவுகள் விரைவில்!
பிரிட்டனில் இருந்து ஸ்கொட்லாந்து பிரியுமா என்பதை தீர்மானிக்கும் கருத்து வாக்கெடுப்பு இன்று நடைபெறுகிறது.
இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்கொட்லாந்து, அயர்லாந்து ஆகியவற்றை இணைத்து 1707ல் (கிரேட்) பிரிட்டன் அமைக்கப்பட்டது. அதிலிருந்து கடந்த 1922ல் அயர்லாந்து பிரிந்து, தனி நாடானது.
அதேபோன்று, ஸ்கொட்லாந்தையும் தனி நாடாக பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக எழுந்து வந்தது. இது குறித்து கருத்து வாக்கெடுப்பு நடத்த கடந்த டிசம்பர் 2013ல் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத், ஒப்புதல் வழங்கினார்.
இதையடுத்து, கருத்து வாக்கெடுப்பு தொடர்பாக பிரசாரங்கள் செய்யப்பட்டன. ஸ்காட்லாந்தை பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன், பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன் உள்ளிட்டோர் பிரசாரம் செய்தனர்.
இப்போது பிரிந்தால், இனி எப்போதும் இணைய முடியாது என ஸ்கொட்லாந்து மக்களுக்கு பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன் வேண்டுகோள் விடுத்தார். மற்றொரு பக்கம், ஸ்கொட்லாந்தை பிரிப்பதற்கு ஆதரவளிக்கக் கோரி, பிரமாண்ட பேரணிகளும், பிரச்சாரங்களும் நடத்தப்பட்டன.
இந்நிலையில், வாக்கெடுப்பு இன்று நடைபெறவுள்ளது. சுமார் 42 லட்சம் மக்கள் வாக்களிக்க உள்ளனர். காலை 7 மணியிலிருந்து இரவு 10 மணி வரை வாக்கெடுப்பு நடைபெறும்.
முடிவுகள் குறித்து நாளை காலையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். கருத்து வாக்கெடுப்பில் ஆம் அல்லது இல்லை என்ற இரண்டில், ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். ஆம் என்பது ஸ்கொட்லாந்தை பிரிப்பதற்கு ஆதரவு என்று பொருள்.
இல்லை என்பது, ஸ்கொட்லாந்தை பிரிக்க ஆதரவு இல்லை என்று பொருள்படும். பிரிக்க முடிவு செய்யப்பட்டால்...
* கருத்து வாக்கெடுப்புக்கு சட்ட அதிகாரம் கிடையாது. எனவே மார்ச் 2016க்கு பின்னர்தான் ஸ்கொட்லாந்தை பிரிப்பதற்கான பணிகள் தொடங்கும்.
* யூரோ நாணயத்தை ஸ்கொட்லாந்து பயன்படுத்த முடியாது.
* பவுண்ட் ஸ்டெர்லிங் நாணயத்தை, இங்கிலாந்து வங்கியின் உதவியுடன் ஸ்கொட்லாந்து பயன்படுத்த விரும்புகிறது. இதனை பிரிட்டன் எதிர்க்கிறது.
* இராணுவத்தை பங்கீடு செய்வது, எல்லை விவகாரங்களில் சிக்கல்கள் ஏற்படும்.
* பொருளாதார ரீதியிலும் பல்வேறு நெருக்கடிகளை ஸ்கொட்லாந்து எதிர்கொள்ளலாம்.
0 comments:
Post a Comment