கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

தம்புள்ளை பள்ளி நிருவாகியை விசாரிக்க வந்த போலி C I D

தம்புள்ளை பள்ளிவாயல் மீது குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு இருவாரங்கள் கடந்த நிலையில் குறித்த தக்குதல் சம்பவ சீ சீ டீவி ஆதரம் இருந்தும் சம்பவத்துடன் தொடர்புடய குற்றவாளிகள் எவறும் கைது செய்யப்படவில்லை.

கடந்த சில வாரம் தம்புள்ளை பள்ளிவாயலுக்கு இனம்தெரியாத நபர் ஒருவர் ஜும்மாதொழுகைக்கு வந்த சம்பவம் இடம்பெற்றது பின்னர் குறித்த எப்பாவல பிரதேசத்தை சேர்ந்த குறித்த நபர் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் என பொலிஸார் விசாரணைகளின் பின்னர் தெரிவித்திருந்தனர்.

குறித்த பள்ளிவாயல் விவகார சர்ச்சை தொடரும் நிலையில் குறித்த தம்புள்ளை பள்ளிவாயல் விவகாரத்தில் துணிச்சலாக செயற்படுபவரும்  முன்னதாக தம்புள்ளை ரஜமஹா விகாரை விகாராதிபதியுடன் நேரடியாக தர்கத்தில் ஈடுபட்டவரும் நகர அபிவிருத்தி அதிகார சபை தம்புள்ளை  பள்ளிவாயல் மற்றும் பிரதேச மக்களை அப்புறபடுத்த முயற்ச்சி செய்த போது 10 நாட்கள் உண்னாவிரதம் இருந்தவருமான பள்ளிநிருவாக சபை ஊறுப்பினர் எஸ் வை எம் சலீம்டீன் அவர்களை பெரும்பான்மை இனத்தை சேர்ந்த இருவர் சீ ஐ டீ யில் இருந்து வந்திருப்பதாக அவர் ஊரில் இல்லாத சந்தர்பத்தில் விசாரித்து சென்றுள்ளனர்.

இது தொடர்பாக தம்புள்ளை பொலிஸாரிடம் முறையிட்டபோது அங்கிருந்து எவரையும் அனுப்பவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த சம்பவம் தொடர்பாக முறைப்பாடு செய்ய  நன்பகல் 2.15 சென்ற அவரின் முறைப்பாடு 5.30 மணிக்கு பொலிஸாருடன் சிறு வாய்தர்க்கம் செய்ய பின்னரே பதிவு செய்யப்பட்டுள்ளது.

உயிரே சென்றாலும் பள்ளிவாயலை அகற்றவிடமாட்டேன் என தம்புள்ள பள்ளிவாயலை அகற்ற மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு தடையாக இருக்கும் தம்புள்ளை பள்ளிவாயல் நிருவாக சபை உறுப்பினர் சலீம் டீன் அவர்களுக்கு பெரும் அச்சுறுத்தல் நிலவுகிறது.

0 comments:

Post a Comment