கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

விபத்தில் உயிர் தப்பினார் உபேக்ஷா சுவர்ணமாலி எம்.பி

நாடாளுமன்ற உறுப்பினர் உபேக்ஷா சுவர்ணமாலி பயணித்த வாகனம் மீரிகம வியாங்கொடை பிரதேசத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

போகொல்லாகம சந்தியில் வைத்து முச்சக்கரவண்டி ஒன்றுடன் ஞாயிற்றுக்கிழமை மாலை, உபேக்ஷா சுவர்ணமாலி பயணித்த ஜீப் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தின் போது, நாடாளுமன்ற உறுப்பினர் உயிர்தப்பியதுடன் விபத்தில் காயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி, வத்துபிட்டிவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஜீப் வண்டியின் சாரதியை கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் மேலும் கூறினர்.

0 comments:

Post a Comment