தனிநாடாக சுதந்திரமடைவதை நிராகரித்தது ஸ்கொட்லாந்து : பெருமூச்சுவிடும் பிரித்தானியா!
பிரித்தானியாவிலிருந்து பிரிந்து தனிநாடாக சுதந்திரமடைவதை ஸ்கொட்லாந்து மக்கள் நிராகரித்துள்ளனர்.
நேற்று இதற்காக நடைபெற்ற வரலாற்று வாக்கெடுப்பு முடிவுகள் இன்று காலை தொடக்கம் வெளியாகி வருகின்றன. இதுவரை வெளியாகியுள்ள 26 கவுன்சில்களுக்கான முடிவில் 54% வீதமான மக்கள் பிரித்தானியாவுடன் இணைந்திருப்பதே ஸ்காட்லாந்தின் வளர்ச்சிக்கு நல்லது என ஆமோதித்துள்ளனர்.
ஆம், இல்லை இரு பதில்களுக்கும் இடையிலான வித்தியாச விகிதம் எதிர்பார்த்ததை விட மூன்று புள்ளிகள் அதிகமாக உள்ளன. ஸ்கொட்லாந்தின் இயங்கு நிலை முதன்மை அமைச்சரும், ஸ்கொட்லாந்து சுதந்திர நாடாக பிரிவதற்கான பிரச்சாரத்தை தீவிரமாக முன்னெடுத்தவருமான நிகோலா ஸ்டார்ஜியொன், இம்முஇடிவுகள் தமக்கு ஆழ்ந்த தனிப்பட்ட மற்றும் அரசியல் ஏமாற்றத்தை தந்துள்ளதாக கவலை வெளியிட்டுள்ளார்.
ஸ்கொட்லாந்து தனிநாடாக பிரிந்து சுதந்திரமடைவதை ஏன் அந்நாட்டு மக்களே நிராகரித்துள்ளனர்.
0 comments:
Post a Comment