இலங்கையில் தங்கத்தின் விலை குறைவடைந்தது..!
இலங்கையில் கடந்த ஒருவருட காலத்தில் மிகக் குறைந்த தங்க விலை 09-09-2014 பதிவாகியுள்ளது.
கடந்த 6 மாதங்களில் உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 89 அமெரிக்க டொலரினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக வர்த்தகத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
2012ஆம் ஆண்டு உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1800 அமெரிக்க டொலர் வரை உயர்வடைந்திருந்தது.
2013ஆம் ஆண்டில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1200 அமெரிக்க டொலர் வரை வீழ்ச்சியடைந்துள்ளது.
இந்த ஆண்டின் முதல் 6 மாத காலத்திற்குள் உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1400 அமெரிக்க டொலர் வரை வீழ்ச்சியடைந்துள்ளதுடன் கடந்த மாதத்தில் மாத்திரம் 55 அமெரிக்க டொலர் வரை வீழ்ச்சி
கண்டுள்ளது.
உலக சந்தையில் தங்கத்தின் விலை குறைவடைந்துள்ள விதத்திலேயே இலங்கையிலும் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.
கடந்த வருடம் 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 58 ஆயிரம் ரூபாவாக அமைந்ததென அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
jaffnamuslim
0 comments:
Post a Comment