ஜெயலலிதா குற்றவாளி; அதிரடி தீர்ப்பு
இதனையடுத்து தனக்கு உடல் நலம் சரியில்லாததால் குறைந்தபட்ச தண்டனை வழங்குமாறு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நீதிபதி குன்ஹாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேரும் குற்றவாளிகள் என்று பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஜெயலலிதா, இந்த வழக்கு என்னை அரசியலில் இருந்தே ஒழித்துக் கட்ட செய்யப்பட்ட கூட்டு சதி. மேலும் எனக்கு உடல் நிலை சரியில்லை. அதனால் எனக்கு குறைந்தபட்ச தண்டனை அளியுங்கள் என்று நீதிபதியிடம் கூறியுள்ளார்.
குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட உடன் ஜெயலலிதாவை பெங்களூர் பொலிஸார் தங்கள் பொறுப்பில் எடுத்துள்ளனர். இதனால் ஜெயலலிதா முதல்வர் பதவியை இழப்பதுடன் அவர் 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது எனவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
.......................
Breaking News
சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளியாக காணப்பட்ட ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் இந்திய ரூபாய் 100 கோடி அபராதமும் விதித்து பெங்களூர் நீதிமன்றம் தீரப்பளித்துள்ளது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா குற்றவாளி என்று பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் இன்று சனிக்கிழமை(27) தீர்ப்பளித்துள்ளது.

0 comments:
Post a Comment