கடந்த டிசம்பர் மாதத்தில் நடைபெற்ற கல
்விப் பொதுத்தராதர சாதாரனதரப்பரீட்சைக்குத் கஹட்டோவிட அல் பத்ரியா மஹாவித்தியாலயத்திலிருந்து தோற்றிய மாணவ, மாணவிகளின் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன . இவர்களுல் ஒரு மாணவி சிறந்த பெறு பேறாக 9 A யையும். மேலும் இரண்டு மாணவிகள் 8A, B யும். மற்றும் இரண்ட மாணவிகள் 7A, 2C போன்ற சிறப்பான பெறுபேறுகளை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. வழமை போன்று ஆண் மாணவாகள் எவரும் சிறந்த பெறுபேறுகளை எடுக்காமை மாணவர்களின் கல்வியின் மீதான நம்பிக்கையை குறைத்துள்ளதாக பலரும் கருத்துத் தெரிவிக்கின்றனர். எது எப்படியிருப்பினும் மாணவர்களை கல்வியின்பால் ஊக்கப்படுத்தவதற்கான ஒரு செயற்திட்டத்தை புத்திஜீவிகளும் ஆசிரியர்களும் பெற்றோர்களும் உருவாக்க முயற்சிப்பது காலத்தின் தேவையாகும்
0 comments:
Post a Comment