கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

எமது ஊரில் அடங்கப்பட்டிருக்கும் பாதீப் மௌலானா அவர்களின் வரலாறு

யெமன் தேசம் முகாவா எனும் பிரதேசத்தில் வாழும் பாதீப் எனும் பிரபலமான குடும்பத்தில் பிறந்தவர்களே அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் பின் உமர் பாதீப் அல் யமானி (ரஹ்மதுல்லாஹி அலைஹி) ஆரம்ப கல்வியை தன் சொந்த ஊரில் பெற்றுக்கொண்ட பாதீப் மௌலானா அவர்கள் உயர்கல்விக்காக எகிப்து நாட்டில் 1000 ஆண்டுகளுக்கு மேலான பழமை மிக்க அல் அஸ்ஹர் சர்வகலாசாலைக்கு சென்றார்கள். தங்கள் பட்டப்படிப்பை முடித்துக்கொண்ட அவர்கள் ஹஜ்ஜை நிறைவேற்றும் ஆவலோடு புனித மக்காவுக்கு சென்று ஹஜ்ஜை முடித்த பின் மதீனாவுக்கு சென்று நபிகளார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் ரவ்ளா ஷரீபை அடைந்து பெற்ற இன்பம் ஆன்மீக சுவை நிரம்பியதென அவர்கள் கூறுவார்கள்.

ஹஜ்ஜை முடித்த மௌலானா நாயகம் அவர்கள் மக்காவில் அப்போது வாழ்ந்த உஸ்மானுல் மிர்கனி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களிடம் ஞான தீட்சை பெற்று அத்துடன் கௌஸுல் அஃலம் முஹியத்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் காதிரியா தரீக்காவின் பைஅத்தையும் பெற்று புனித மக்காவில் இருந்தே தங்கள் தஃவா பணியை ஆரம்பித்தார்கள்.
அதன் பிறகு தன் ஊருக்கு சென்று மௌலானா நாயகம் அவர்கள் தங்கள் நிறைந்த செல்வம் சொத்து சுகங்கள் அனைத்தையும் தியாகம் செய்து விட்டு ஊரிலிருந்து புறப்பட்டார்கள். இந்தியாவில் சில காலம் வாழ்ந்த பின் எமது இலங்கை திருநாட்டுக்கு 19 ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் கொழும்பை வந்தடைந்த மௌலானா நாயகத்திற்கு கொழும்பு வாழ் மக்கள் பெரும் வரவேற்பளித்து உபசரித்தார்கள்.
இலங்கை முஸ்லிம்களின் கல்வி தொடர்பான பிரச்சினைகள் பற்றி அறிஞர் சித்தி லெப்பை அவர்கள் சிந்தித்துக் கொண்டிருந்த வேளையில் தான் மௌலானா நாயகம் அவர்களின் இலங்கை விஜயம் அமைந்து இருந்தது. பேரறிஞரான மௌலானா நாயகம் அவர்கள்பால் அறிஞர் சித்தி லெப்பை கவரப்பட்டார்கள். எனவே அறிஞர் சித்தி லெப்பை அவர்களின் முஸ்லிம்களின் கல்வி தொடர்பான முயற்சிகளுக்கு மௌலானா நாயகத்தின் தொடர்பு உந்து சக்தியாக அமைந்தது. இன்று ஸாஹிரா கல்லூரி என புகழோடு காணப்படும் இப்பாடசாலை மதரஸத்துல் ஸாஹிரா என்றே தொடங்கப்பட்டது. இந்தக் கல்லூரியை ஆரம்பிப்பதற்கு மௌலானா நாயகம் அவர்கள் சித்தி லெப்பைக்கு பேருதவியாக அமைந்தார்கள்.

நன்றி
பாதிபிய்யா இணையம் மற்றும் அனுப்பிய சகோதர்...

13 comments:

பழைய தக்கியாக்காரன் said...

உண்மையில் பாதிப் மௌலான அளப்பரிய சேவைகளை எமதூருக்கு ஆற்றியுள்ளார். அல்லாஹ் அவரது சேவைகளைப் பொருந்திக் கொள்ள வேண்டும். எனினும் எமதூரின் மார்க்க விளக்கமற்ற சில அறிவிலிகள் அவரின் பெயரால் பல அனாச்சாரங்களை கட்டவிழ்த்து விட்டுள்ளார்கள். கடந்த சில நாட்களாக அந்தப் பள்ளிவாசலை நல்லூர் கந்நத சுவாமியின் கோயிலைப் போல் மாற்றி திருவிழாவும் கொண்டாடி விட்டார்க்ள. தேர் மட்டும்தான் இழுக்க வில்லை. எதிர்காலத்தில் இழுப்பார்கள் போலும்....

Unknown said...

jazakallahukairen
when i was in child i spend much activitees for this purpose.
insallah i will support for badib moulana thakkiya refreshing for next generation

AntiSaif said...

Mr. Saif, what support do you give for badib moulana? If you like to give any support to Badib moulana, just you must follow Quran and Sunnah. May be Badib moulana way also same.. if not same, we could not decide who would be paradise or well, Allah know the best.

தர்ஹா? said...

தர்ஹா கட்டுவது கூடாது!

ஷாஃபி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் : (இறைவனால்) படைக்கப்பட்டவரின் கப்ர் வணங்குமிடமாக ஆக்கப்படும் அளவிற்கு அது மதிக்கப்படுவதை நான் வெறுக்கிறேன். இவ்வாறு செய்பவனும், அவனுக்குப் பின்னால் வரும் மக்களும் குழப்பத்தில் சென்று விடுவார்கள் என்று (நான்) அஞ்சுவதே இதற்குக் காரணமாகும்.
(ஷாஃபி மத்ஹப் நூல் : அல் முஹத்தப் பாகம் : 1 பக்கம் : 138)

கட்டப்பட்ட தர்ஹாக்களை இடிக்க வேண்டும்!
கப்ரை பூசுவதும் , அதன் மீது கட்டிடம் எழுப்புவதும் , அதன்மீது அமர்வதும் , எழுதுவதும் வெறுப்பிற்குரியதாகும்.
(ஷாஃபி மத்ஹப் நூல் : அல்முஹத்தப் பாகம் : 1 பக்கம் : 138)

சாபியி said...

மாசாஅல்லாஹ். இன்று ஷாபி மத்ஹபைப் பின்பற்றுவதாகக் கூறும் நமதூரின் தரீக்காவாதிகள் ஷாபி இமாமின் கருத்துக்கு நோ்மாற்றமானவர்கள் என்பதை தர்ஹா என்ற பெயரில் கொமென் எழுதியுள்ளவர் குறிப்பிட்டுக் காட்டினார். இது மட்டுமின்றி ஷாபி மத்ஹபின் பிரதான பிக்ஹ் கிதாபான உம்தாவை சரியாகப் படித்தால் நமதூரின் சாபிக்களுக்கும் சாபி மத்ஹபுக்கும் மலைக்கும் மடுவுக்கமுள்ள வித்தியாசத்தை அறியலாம். சாபி இமாமின் கருத்துப்படி மரணித்தவர்களுக்காக குர்ஆனை ஓதி சேர்பிக்க முடியாது என்பதை உம்தாவில் படிக்கலாம். ஆனால் நமகுதூரின் சாபி மத்ஹபி்ன் ஹஸரத் மாரோ கத்தச் சாப்பாடிலேயே காலத்தை ஓட்டுகிறார்கள். அல்லாஹ் நமக்கு நோ்வழிகாட்டுவானாக!

Anonymous said...

poda keriyanukala, puthusha markatha kondu wandhathu neenukalthaan. naanga ippadiththaan iruppom. neenukal evvalavu kaththinaalum ondum seyyela. pongada pokkaththa payalukala.

Anonymous said...

we are going to air conditioning the badib moulana darga. so, we are expecting donation from all public who loves badib moulana.
contact our committee.

முஹம்மது ஸாபிர் said...

புனித அல்குர்ஆனுடைய கருத்துக்களையே மாற்றி எழுதும், பேசும் இந்ந வஹ்ஹாபிகளுக்கு சாபிஈ இமாமின் கருத்துக்களை மாற்றி எழுதுவது, பேசுவது என்ன பெரிய வேளையா?
பாதீப் மெளலானா நாயகம் பற்றியோ, சாபீஈ இமாம் பற்றிப் பேசவோ முன்னர் தங்களது ஈமான்களை சரி செய்துகொள்ளட்டும்.
அல்லாஹ்வையே தன்னைப் போன்றவன், சடப்பொருள் என்று ஒருவன் பேச, அதைப் பார்த்துக் கொண்டிருந்த, மேலும் அவனை ஆதரிக்கும் இவர்களுக்கு பாதீப் மெளலானாங்களைப் பற்றியோ, சாபிஈ இமாம் பற்றியோ பேச என்ன அருகதை உள்ளது.

அப்துல் said...

குர்ஆனை புனிதப்படுத்துவது என்பது அதனை தலையனையில் வைத்து கண்ணும் கருத்துமாக பாதுகாப்பதோ? அல்லது ஒரு சில செல்லாக்காசுக்காக ஓதி விப்பதோ அல்லது உங்களைப்போன்று ஒரு கூட்டம் இது அவ்லியாக்களுக்கு மாத்திரம் தான் விளங்கமுடியும் என்பதுவே அல்ல.. அப்படியிருந்தால் இந்த மொரிஸ் புகைல், மல்கம் எக்ஸ், கீத்மோர், யுஸூப் இஸ்லாம் போன்றோர் இன்னும் உங்களைப்போன்று வழிதவரியவர் கூட்டத்தில் தான் இருப்பார்கள்.

brother said...

கம்மோன், கம்மோன் எல்லாம் சும்மா பெச்சுக்குமட்டும் தான் இந்த தௌஹீத், தரீக்க எல்லாம் ஒவ்வோத்தண்டேம் தனிப்பட்டவாள்கைய்யினை எடுத்துப்பாத்தல் விளங்கும்

குரான் ஹதீஸ் என்பவற்றை பின்பற்றக்கூடியவன் ஒருத்தன் கூட இல்லை என்னையும் சேர்த்துத்தான் நான் சொல்ற. ஆனால் நாம் அனைவரும் இறைவனிடம் பாவமன்னிப்புத்தேடவேண்டியவர்களாக இருக்கிறோம்.


எல்லாம் சும்மா ஆஹு என்ற கச்சாளுக்குமட்டும் போவானுகள்

தொழுகையில் பொடுபோக்கு, கொடுத்தவாக்கை நிறைவேற்றாமை, வாங்கின கடனை திருப்பிக்கொடுக்காமை எமது ஊர் கடைகளில் போய் கேட்டுப்பார்த்தால் தெரியும் , சும்மா அவதூறு பேஷித்திரிதல் , வங்கியிலே கணக்கு அதுவும் தொவ்ஹீட்வாதிகள்நாம் என்று சொல்பவர்கள்கூட கோடி கோடியா வங்கியில் வைப்பு செய்கிறார்கள் (ஏனையயோர் பிரச்சினை இல்லை அவர்களுக்கு பதுவா கொடுக்க ஆள் உண்டு.),அடுத்தவீட்டுக்காரனோட சண்டை, சொந்தக்காரனுன்கூட காணிச்சண்டை, வியாபாரத்தில் மோசடி

பார்க்கப்போனா எல்லானும் ஒண்டு எல்லாம் சும்மா மார்க்கத்தை பேசத்தான் நல்லம் ஒருத்தனும் நடைமுறையில் இல்லை.

பழைய தக்கியாக்காரன் said...

சகோதரர் ஸாபிரிற்கு. வஹ்ஹாபிகள் சாபி இமாமின் கருத்தை மாற்றிச் சொல்லியதாக குறிப்பிட்டுள்ளீர்கள். நீங்கள் சாபி இமாமின் மேற்குறிப்பிட்ட கிதாபுகளை பக்கச் சார்பின்றி வாசித்தால் இது புரியும். உம்தா கிதாபையும், அல் முஹத்தப் கிதாபையும் பக்கத்துடன் சொல்லியிருக்க அது உண்மையா பொய்யா என நீங்கள் உரசிப்பார்த்து முடிவெடுத்து விட்டு பிழையாயின் இது சம்பந்தமாக இமாம் ஷாபியின் நிலைப்பாடு என்ன என்பதையே தெளிவு படுத்துவதே அறிவுடைமையாகும். இதை விட்டுவிட்டு வஹ்ஹாபிகள் அதைத் திரிக்கிறார்கள் இதைத்திரிக்கிறார்கள் என்று கத்தச் சோத்துக்கு வக்காளத்து வாங்குவது அறிவீனமாகும்.

Anonymous said...

பரதரின் ஆதங்கம் புரிகிறது. என்ன செய்ய..? எல்லாத்தையும் பிடித்து ஒரு 3 நாள் அனுப்பினா சரி..

புதிய வஹ்ஹாபி said...

ஷாபிஈ இமாம் சொன்னது எப்படிப் போனாலும் நபி (ஸல்) அவர்களின் பின் வரும் ஹதீஸையும் நோக்கிப் பார்ப்பது நல்லது. "எனது கப்ரை விழாக்கள் கொண்டாடும் இடமாக ஆக்கிக்கொள்ள வேண்டாம்" என்பதுதான் அந்த ஹதீஸ். உண்மையில் எமதூர் தக்கியாவில் வருடாந்தம் நடைபெறுவது விழா என்பதையும் தாண்டி திருவிழாவாகவும் திருப்பலி நடைபெறும் இடமாகவும் மாறி வருவது வேதனை தருகிறது. அகீதா கோட்பாடுகளையே சிதைத்து சின்னாபின்னமாக்கும் இவர்கள் தான் ..............இன் தலைமையில் வஹ்ஹாபிகளை உருவ வழிபாட்டுக்காரர்கள் எனக் குறிப்பிடுகின்றார். இப்போது மக்களுக்குப் புரியும் உருவ வழிபாட்டையும் ஷிர்க்கையும் மேற்கொள்பவர்கள் யார் என்று.

பள்ளத் தக்கியாவில் கோப்பைச் சோறின் போது இடம்பெறுவது உருவ வழிபாட்டுக்கு அப்பால் 'ரூஹ்' வழிபாடாகும். பெரியார் அப்துல் காதரின் ஆவியை வழிபடும் ......யிஸத்தை பின்பற்றும் இப்பிரிவினரை எப்பெயர் கொண்டு அழைப்பது?

.......இன் பார்வையில் வஹ்ஹாபிகள் உருவ வழிபாட்டுக்காரர்கள் என்றால் ......உம் அவரைச் சார்ந்தோரும் அவரைவிடப் படு நிச்சயமாக ரூஹ் அல்லது ஆவி வழிபாட்டுக்காரர்கள் எனக் குறிப்பிடுவதே பொருத்தமானதாகும்.

ஆசிரியர் குறிப்பு
தயவு செய்து தனிப்பிட்ட நபர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு கருத்துக்கள் எழுதும்போது சிறந்த வார்த்தைப் பிரயோகங்களைக் கையாளவும்.

Post a Comment