கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

1000 பாடசாலை அபிவிருத்தித் திட்டம். எமதூர் மாணவ மாணவிகளின் கல்வியைப் பாதிக்குமா?

சகல மாணவ மாணவிகளும் எல்லா வசதிகளுடனும் கல்வி பயில வேண்டும் என்ற அடிப்படையில் 1000 பாடசாலைகளைத் தெரிவு செய்து அபிவிருத்தி செய்யும் ஒரு திட்டத்தை அரசாங்கம் மேற்கொள்ளவுள்ளது. இத்திட்டத்தின் அடிப்படையில் 6ஆம் ஆண்டிற்கு மேற்பட்ட மாணவர்கள் அனைவரும் தெரிவு செய்யப்படும் இந்த 1000 பாடசாலைகளில் ஏதாவது ஒன்றில் படிக்கவேண்டி வருவதுடன் இன மத வேறுபாடுகளின்றி சிங்களம் தமிழ் முஸ்லிம் மாணவர்கள் அனைவரும் ஒன்றாகப் படிக்கின்ற ஒரு சூழல் உருவாக இருக்கின்றது. அரசின் இத்திட்டத்தைப் பற்றி பலரும் பல கருத்துக்களைத் தெரிவிக்கின்றன.

இத்திட்டத்தின் அடிப்படையில் எமதூரின் பாடசாலை முதலாம் ஆண்டு தொடக்கம் ஐந்தாம் ஆண்டு வரையான ஆரம்பப் பாடசாலையாக மாற்றப்படுமா என்ற வினாவிற்கு இதுவரை விடை கிடைக்கவில்லை. எமதூரிற்குப்பக்கத்து ஊரிலுள்ள இரண்டு சிறிய பாடசாலைகள் அதே பிரதேசத்திலுள்ள ஒரு பெரிய பாடசாலையுடன் இணைக்கப்படவுள்ளதாக தகவல்கள் கிடைக்கின்றன. இது சம்பந்தமான ஒரு விளிப்புணர்வை அவ்வூர் ;மக்களிற்கு வழங்கியதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

எது எப்படியிருப்பினும் எமது மாணவ மாணவிகள் எதிர்காலத்தில் ஒழுக்க சூழலில் கல்வி கற்க கிடைக்குமா என்பது அனைவரும் தற்போது கேற்கும் ஒரு கேள்வியாகும்.

1 comments:

Anonymous said...

எனக்கும் இந்தவிடயம் ஒரு சில நபர்களின் வாய்ப்பேச்சுக்கள் மூலமாக காதுக்கு எட்டியது என்றாலும் சரியாக, தெளிவாக என்னவென்று புரியவில்லை. முடியுமென்றால் விளக்கமாக இந்தவிடயங்களை பகிர்ந்துகொள்வது எல்லோறுக்கும் பிரயோசனமாக இருக்கும். பக்கத்தல் உள்ள ஊர் ஒன்று உடுகொடயாக இருக்கும் அடுத்த ஊர் எது??

Post a Comment