கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

தீமைகளிற்குப் பன்னீர் தெளிக்கும் பெருநாள் கொண்டாட்டம்




30 நாட்கள் நோன்பு நோற்ற நாம் அதன் பயனை அடைந்து விட்டோமா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டியவிதமாக பல நிகழ்வுகள் நடந்து வருவதை காணக் கூடியதாக உள்ளது. நோன்பின் நோக்கமே இறையச்சம்தான் என்று அல்லாஹ் திருமறையில் குறிப்பிடுகிறான். இவ்விறையச்சம் பெருநாள் தினத்துடன் செல்லுபடியற்றியதாக மாறிய துரதிஷ்ட நிகழ்வொன்றை நாம் கண்டும் காணாத்துபோல் இருக்க முடியாது. வளர்ந்து வரும் வாலிபர்கள்தான் எமது அடுத்த தலைமுறையின் தலைவர்கள். இவர்கள் மார்க்க உணர்வுடன் வழிநடாத்தப்பட்டால்தான் எதிர்காலம் இஸ்லாம் வாழும் ஒரு இடமாக இருக்கும்.

பெருநாள் விளையாட்டுப் போட்டி எனும் பெயரில் முழு நாளும் ஊரை அதிரவைக்கும் சினிமாப் பாடல்கள். இடைக்கிடையில் குர்ஆனை அவமதிக்கும் வித்த்தில் கிராத் ஒலிபரப்பும் அடுத்து மீன்டும் சினிமாப் பாடல்....... இப்படி நடைபெற்று முடிந்த்து ஒரு விளையாட்டுப் போட்டி.

இவ்விளையாட்டுப் போட்டியை வெறுமனே விமர்சிப்பது எமது நோக்கமல்ல.இன்றைய இளைஞர்கள் மார்க்க விதிகளிலிருந்து நெறிதவறிச்செல்வதை யாரிடம் சொல்ல்லாம் என்ற ஆதங்கத்தில் எழுதுகிறோம். ஊரையும் இளைஞர்களையும் வழி நடாத்த வேண்டிய தலைமைகள் அமைதியாக இருப்பது எந்த வகையில் நியாயம்?

எல்லாம் நடந்து முடிந்தபின்னர் ஒரு செற்பொழிவில் அல்லது குத்பாவில் இரண்டு வார்த்தை ஏசுவதனால் தமது கடமை முடிந்துவிட்டதாக தவராக புரிந்து வைத்துள்ளனர் சிலர். இரண்டுநாள் அரங்கேற்றிய தீமையை பொறுமையாக பார்த்துக்கொண்டு இருந்துவிட்டு இரண்டுவார்த்தையைக் கூறித் தப்பித்துக்கொள்ளும் இவர்களை என்னவென்று கூறுவது.

வரட்டு கௌரவங்களை விட்டுவிட்டு சமூகத்தின் நலனுக்காக மாத்திரம் இது போன்ற விடயங்களில் ஒன்று படுங்கள். பள்ளி வாசல்களின் சம்மேளனம், அண்மையில் அணி திரண்ட இளைஞர் அமைப்புக்கள் மற்றும் பள்ளி வாசல்களின் நிர்வாகங்கள் அனைத்தும் இதுபோன்ற விடயத்தில் கவனம் செலுத்துங்கள். இல்லையேல் பக்கத்துக் கிராமங்களில் நடைபெறும் சங்கீத நிகழ்ச்சி கூட எமது ஊரில் நடைபெறும் என்பது ஆச்சிரியமில்லை!

13 comments:

Anonymous said...

பள்ளிவாசல்கள் தங்களது பிக்ஹுப் பிரச்சினைகளை சற்று ஒதுக்கிவிட்டு இதுமாதிரியான விடயங்களைக் கவனமெடுத்தால் நல்லம். மேலும் இரகசியமாக தஃவா செய்யும் இரண்டு இயக்கங்களும் பகிரங்கமாக தீமையைத் தடுக்க பள்ளிவாசல்களோடு இணைந்து செயற்படல் வேண்டும்.

Anonymous said...

who are those rahashiya iyakkams??
Any how according to anonymous thou is not rahashiya iyakkam is it?
ok, tell them to be public in eradicating those sins.!!!!!
They are always figting against shillarais let them be against moththam/.

Anonymous said...

I think one is DA and the other one is Jamathe Islami. Still they are hiding behind the curtains. Am I ok?

Anonymous said...

நீங்களாவது இந்தவிடயத்தை தொட்டுக்காட்ட முன்வந்ததற்கு ஜதாகுமுல்லாஹ். அல்லாஹ்வின் தன்டனை எமது கிராமத்துக்கு விரைவாக இரங்குவதற்கு இந்த கேடுகெட்ட சினிமாப் பித்தன்களும் ஒருகாரணமாக இருக்கும் என்பதனை நாங்கள் மனதில் நிருத்திக்கொள்வோம்..

Anonymous said...

Nauzoobillah enna Kuran vashanttodu cinemappadala.. Allah evarhali allah kaappanaha..

ஊஊராரான்ன் said...

ரகசிய இயக்கங்களைப் பற்றி ஏனைய்யா அலட்டிக்கொள்ளவேண்டும். உமது பணியை நீர் செய்யவேண்டியதுதானே. எந்த நாளுமே எப்போதுமே அடுத்தவர்களை விமர்சிப்பதுதான் உமது முக்கிய பணியா? இஸ்லாம் பற்றி அதிகம் அல்அலட்டிக்கொள்கின்ற நீர், மாற்றானை விமர்சித்து மாமிசம் புசிக்கின்ற நிலை குறித்தான இஸ்லாத்தின் நிலைப்பாடு பற்றியும் அதிகம் அலட்டிக்கொள்ள வேண்டுமே. இன்றிலிருந்தாவது விமர்சனத் தொழிலை விட்டுவிட்டு தீமையைத் தடுக்கின்ற பணியை நீர் மட்டுமாவது செய்யப் பாரும்! ஹலோ, ரகசியமாய் இயங்குவது பற்றி குறிப்பிடும் நீரும் ரகசியமாய்த்தானே கொமன்ட் அடித்துள்ளீர்? உமக்கொரு நியாயம், அடுத்தவருக்குப் பிறிதொரு நியாயமா? என்னய்யா இந்த நியாயம்?
குத்பாக்களில் பிக்ஹ் மஸலாக்களைத் தவிர்ப்பது சாலவும் சிறந்தது. கடந்த ஒரு தசாப்தத்துக்கும் மேலாக இதைத்தானே செய்து வருகிறோம். காலத்துக்குப் பொருத்தமான கருத்தியலை குத்பாக்களில் முன்வைப்பது நல்லது. இனிமேலாவது விமர்சனங்களைத் தவிர்த்து வாழப் பழகுவோம்.

Anonymous said...

தயக்கமின்றி உள்ளதை உள்ளபடி எடுத்தியம்பியது பாராட்டத்தக்கது.



















Anonymous said...

தயக்கமின்றி உள்ளதை உள்ளபடி எடுத்தியம்பியது பாராட்டத்தக்கது.



















Anonymous said...

கட்டுரையிலே சொல்லியிருப்பது உண்மையில் வருத்தத்துக்குரிய விடயம் தான். அதோடு எமது ஊரிலே இயங்குகின்ற சில பகிரங்கமான ஷீ டி கடைகளில் மார்க்க சொட்போளிவுகளை பெரிதாகப்போட்டுக்கொண்டு ஆங்கில ஹோலிவூட் திரைப்படம், ரச்ச்லீன் சி டி கலை விட்பனைசைவதும் மிகவும் வருத்தத்துக்குரியவிடயம். இவைகளெல்லாம் நவீனமயமாக்கப்பட்ட இஸ்லாம் என்ற மூளை சலவைகளின் பிரதிபலன்கள்.

எமது ஊர் மக்கள் அனைவரும் இது தொடர்பாக ஒருமைப்பாட்டுடனான ஒரு திட்டத்தின் மூலமே தீர்வுகளை காணமுடியும்.

சமூகப் பிரியன் said...

பள்ளிவாசல்கள், ஊரிலுள்ள வெளிப்படையாக மறைமுகமாக இயங்கி வருகின்ற இயக்கங்கள், கொள்கைகள் முன்மாதிரியான போட்டி நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து காட்டவேண்டும். அல்லது அவ்விளைஞர்களுக்கு வழிகாட்டல்களையாவது வழங்க வேண்டும். இஸ்லாம் என்பது பள்ளிவாசலுக்குள்ளால் மாத்திரம் பின்னபற்றக் கூடிய மார்க்கமல்லவே!
பொறுத்தமான இளைஞர் குழு அல்லது பொறுத்தமான வழிகாட்டல்கள் இல்லாத போது வெற்றிடங்களை நிரப்புவதற்கு பொறுத்தமற்ற ஒரு பிரிவினர் அந்த இடத்தைக் காவுகொள்வார்கள்.
இளைஞர்களைப் பொறுத்தவரையில் பெருநாள் தினத்தில் ஏதாவது விளையாட்டுப் போட்டிகள் இருக்க வேண்டுமே என்றுதான் விரும்புவார்கள்.
ஆகவே.... இது தொடர்பாக அனைவரும் சிந்திப்போம்!!! சிறந்த முடிவுகள் எடுப்போம்!!!

Anonymous said...

இரகசிய இயக்கங்களை நாம் அலட்டிக் கொள்ளவில்லை. இது போன்ற தீமையைத் தடுக்கும் வேலைகளில் அனைவரும் ஒன்று படல் வேண்டும். எமது பள்ளிவாசல்கள் ஒரு வேலையைச் செய்ய முற்படும்போது இந்த இயக்கங்கள் ஆதரவு தருவதில்லை. சிலர் ஆதரவு தருவதுபோல் நடிக்கிறார்கள். சிலர் தமது இயக்கத்தின் பெயர் வரவேண்டும் என்று சிந்திக்கிறார்கள். எமது இளைஞர்களை வழிநடாத்திக் கொண்டிருந்த Federation என்ற அமைப்பு சிதைந்து போனதற்கும் எமது ஊரின் ஒரு இயக்க உறுப்பினர்கள்தான் காரணம்..!

சமூகப் பிரியன் said...

நாம் பேசியது போதும்....
தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் தீமைகளை நிறுத்துவதற்கு உடனடியாக முயற்சிகளை எடுப்போம்.
தற்போது சில ஹோட்டல்களில் கேபல் டீவி மற்றும் பெரிய திரையில் சினிமா பாடல்கள், படங்கள் காண்பிக்கப்படுகின்றன. இரவு வேளையில் சில இளைஞர்களின் வீடே அவ்விடம்தான். இதனை தடுப்பதற்கு ஏதாவது முயற்சிகளை எடுப்பேமே!
குறைந்த பட்சம் குறித்த கடையின் உரிமையாளர் எந்த இயக்கம் அல்லது தக்கியாவுக்கு அல்லது பள்ளிக்கு கட்டுப்பட்டுள்ளாரோ அவர்களாவது இது பற்றி சிந்திக்க வேண்டும்.

ஊர்ப் பரியன் said...

சமூகப் பிரியன் சொல்வது உண்மைதான். இன்று ஊரில் கஞ்சா விற்பனை ஆபாச சீடி விற்பனை என்பன சில கடைகளை மையமாக வைத்து நடைபெறுகிறது. பள்ளிகள் கத்தம் ஓதுவதிலும் கந்தூரி கொடுப்பதிலும் பிக்ஹீ மஸ்அலாக்களிலும் காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறது. இன்னும் சில சகோதரத்துவவாதிகள் தங்களுக்குள் மாத்திரிம் குசுகுசுத்துக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் அனைவரும் பகிரங்கமாக களமிறங்கினால் தீமைகளைத் தடுக்க ஒரு இளைய தலைமுறை தயாராக உள்ளது. முதியவர்களின் வழிகாட்டல் இல்லாததால் இவர்கள் தயங்குகிறார்கள.

Post a Comment