கஹட்டோவிட முஸ்லிம் லேடிஸ் ஸ்டடி ஸேக்கிளின் கருத்துக் கணிப்பீடு
எமதூரிலுள்ள பெண்களின் கல்வி, மற்றும் திறன் விருத்தி என்பவற்றை நோக்காகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட கஹட்டோவிட முஸ்லிம் லேடிஸ் ஸ்டடி ஸேக்கில் என்ற அமைப்பு தனது ஐந்தாவது வயதில் பல முன்னேற்ற ப்படிகளைக் கடந்து கொண்டுள்ளது. தான் கடந்த வந்த பாதையை திரும்பிப் பார்த்து மீளாய்வு செய்து தனது எதிர்கால பயணத்தைத் திட்டமிடும் நோக்கில் ஒரு கலந்துரையாடலை நடாத்தப் போவதாகத் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. இந்நிகழ்வில் இந்நிலையத்தில் பயிற்சி பெற்ற பலரையும் ஒன்று கூட்டி எதிர்கால நடவடிக்கைகள் சம்பந்தமாக ஆலோசனைகளையும் பெறவிருப்பதாக அறியக் கிடைத்துள்ளது.
பெண்கள் முன்னேற்றத்தில் அக்கறையுள்ள இந்நிலையம் இன்னும் சிறந்த வழிகாட்டல்களை வழங்கி சிறப்பாக மிளிர வேண்டும் என நாம் பிராhத்திக்கின்றோம்!
2 comments:
ஸ்டடி ஸேகிளின் முயற்சிகளைப் பாராட்டத்தான் வேண்டும். தன்னலம் கருதாது, எந்த முகாமையும் சாராது ஊரென்ற வகையில் இந்த நிறுவனம் மேற்கொண்டுவரும் செயற்றிட்டங்கள் எமதூரின் முன்னணி முகாம்கள் எனத் தம்பட்டம் அடித்துக்கொள்ளூம் அமைப்புக்களுக்கு முன்மாதிரிகளாக (மொடல்ஸ்) அமையட்டும்!
வாழ்க ஸ்டடி ஸேகிள்!
What ar those pionr camps which boast of itelf as mentiond?
Post a Comment