இலங்கையில் இடம்பெற்ற மோசமான விமான விபத்து: இன்றுடன் 41 வருடங்கள்
1974.12.04ம் திகதி மக்காவுக்கு சென்று கொண்டிருந்த ஒல்லாந்தைச் சேர்ந்த மார்டின் எயார் டி.சி 8 என்ற விமானம் இந்தோனேசியாவின் சுரவெயார் விமான நிலையத்தில் இருந்து யாத்ரீகர்கள் 182 மற்றும் விமான ஊழியர்கள் ஒன்பது பேருடன் பயணித்துக்கொண்டிருந்துள்ளது.
இந்நாட்டு நேரப்படி இரவு 10.10 க்கு அக்கரபத்தனை , நோவுட் காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு மேலாக பறக்கும் போது சுவப்தகண்ய மலையில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் அதில் பயணித்த 191 பேரும் உயிரிழந்திருந்தனர். இதில் ஒரு பெண்ணின் சடலத்தை தவிர அனைத்தும் அந்த மலைக்கு கீழேயே புதைக்கப்பட்டுள்ளன.
மேலும் பணிப்பெண்ணாக இருந்த பெண்ணொருவரின் சடலத்தை அவரது காதலர் , இந்தோனேசியாவில் இருந்து ஹெலிகொப்டரில் வந்து அவரது சொந்த நாட்டுக்கு எடுத்துச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இதன்போது விமானத்தில் இருந்த பயணிகளின் பெருந்தொகையான பணத்தை மக்கள் எடுத்துச் சென்றுள்ளனர்.
நெதர்லாந்து நாட்டு விமானியொருவரே விமானத்தை செலுத்தியுள்ளார். தொழில்நுட்பக் கோளாறே விபத்துக்கான காரணமென பின்னர் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment