TSUNAMI 2004 -DEC - 26
கடந்த 2004 டிசம்பர் 26ம் நாள் ஞாயிறு காலையில் கிருஸ்தவ மக்கள் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்த மகிழ்ச்சிகரமான வேலையில் இந்தோனேஷியா சுமத்ரா தீவில் ஏற்பட்ட கடலுக்கடியிலான நிலநடுக்கம் சுனாமி ஆழி பேரலையாக இலங்கை உட்பட பல நாடுகளையும் அதிரச் செய்த நிகழ்வு பல இலட்ச மனித உயிர்களை பறித்தும் பல்லாயிரம் கோடிகளுக்கு பொருளாதார பேரிழப்பு ஏற்பட்டதையும் நாம் கண்ணீர் சிந்தியதையும் மறந்திட முடியாது
ஒரு சில நிமிடங்களில் ஆசியா கண்டத்தின் 10 நாடுகளில் அவற்றை ஒட்டியுள்ள தீவுகளில் மூன்று லட்சம் வரையான மக்கள் அழிந்தனர் ! ஆசியா தன் வரைபடத்தில் சில கிராமங்களை இழந்து விட்டிருந்தது . அவற்றில் பல மனிதர்களால் நிரந்தரமாக கைவிடப்பட்ட கிராமங்களாக போய்விட்டது
சுனாமி சுட்டு 11 வருடங்கள்
சுமத்ரா தீவுப் பகுதியில் ஏற்பட்ட பூகம்பம் 8.9 ரிக்டர் அளவு பதிவாகியுள்ளது. கடற்பரப்பில் ஏற்பட்ட இதேவேக நிலநடுக்கம் தரைப் பகுதியில் ஏற்பட்டிருந்தால் ஆசியாசின் பல நாடுகள் தரை மட்டமாகியிருக்கும். இதன் பாதிப்பு பல ஆயிரம் அணுகுண்டுகள் வெடித்ததற்குச் சமமாக இருக்கும் என்று புவியமைப்பியல் வல்லுநர்கள் தெரிவித்தனர்.
ما اصابك من حسنة فمن الله وما اصابك من سيئة فمن نفسك
(மனிதனே!) உனக்கு ஏதேனும் ஒரு நன்மை ஏற்பட்டால் (அது) அல்லாஹ்வின் புறத்தில் நின்றும் கிடைத்ததாகும். உன்னை ஏதும் தீங்கு பிடித்தால் (அது) உன்னிலிருந்தே ஏற்பட்டதாகும். 4:79.
(மனிதனே!) உனக்கு ஏதேனும் ஒரு நன்மை ஏற்பட்டால் (அது) அல்லாஹ்வின் புறத்தில் நின்றும் கிடைத்ததாகும். உன்னை ஏதும் தீங்கு பிடித்தால் (அது) உன்னிலிருந்தே ஏற்பட்டதாகும். 4:79.
واتبعوا احسن ما انزل اليكم من ربكم من قبل ان يأتيكم العذاب بغتة وانتم لا تشعرون 39:55
நீங்கள் அறிந்துக் கொள்ளாத நிலையில் திடீரென வேதனை உங்களை வந்தடைவதற்கு முன்னர் உங்கள் ரப்பிடமிருந்து உங்களுக்கு இறக்கி வைக்கப்பட்ட மிக அழகானவற்றை பின்பற்றுங்கள்.39:55
நீங்கள் அறிந்துக் கொள்ளாத நிலையில் திடீரென வேதனை உங்களை வந்தடைவதற்கு முன்னர் உங்கள் ரப்பிடமிருந்து உங்களுக்கு இறக்கி வைக்கப்பட்ட மிக அழகானவற்றை பின்பற்றுங்கள்.39:55
உலகத்தின் மீதுள்ள பற்றும் மரணத்தை பற்றிய பயமும் மனிதனை அல்லாஹ் ஏவியுள்ள கட்டளைகள் அனைத்திலிருந்தும் வேறான ஒரு பாதையில் இட்டுசெல்கின்றது இபாதத்துகள் வெறும் சம்பிரதாயங்களாக மட்டும் எம்மில் எஞ்சியுள்ளது இஸ்லாம் போதிக்கும் தனிநபர் நடத்தை, சமூக நடத்தை எதுவும் எமது சமுகத்தில் பெரிய அளவிலான தாகங்களை பெற்று எம்மை வழிநடத்த நாம் எம்மை தயார் படுத்துவதில்லை இறைவன் எமக்கு தொடர்ந்தும் அவகாசம் தருகின்றார் அவன் எமக்கு வழங்கியுள்ள அவகாசத்தை சரியாக பயன்படுத்துவதில் இருந்து தொடர்ந்தும் நாம் தவரிவருகின்றோம்.
அதற்கு பிரதான காரணமாக உலகத்தின் மீதுள்ள பற்றும் மரணத்தை பற்றிய பயமும் எம்மை ஆட்கொண்டுள்ளது என்பதுதான், சுனாமி போன்ற தாக்கங்களை நாம் எதிர்கொண்ட போது உலகத்தின் மீதுள்ள பற்று காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக ஆயுள் முழுவதையும் செலவு செய்து சேகரித்து கொண்ட பொருட்கள் சில நொடிகளில் அழிந்தி போய்யின அதேபோன்று மரணத்திலிருந்தும் எம்மால் தப்ப முடியாது போனது என்பது எமக்கு முன்னுள்ள படிப்பினையாகும்
மனிதன் இவ்வுலகில் வாழப் பிறந்தவன். இவ்வுலக வாழ்வின் மூலம் அவன் மறுமைக்கு தயாராகிறான். இவ்வுலகில் மனிதன் தன் வாழ்க்கையை எப்படியும் வாழலாம் என்பதை மனிதனை படைத்த இறைவன் ஏற்றுக்கொள்ளவில்லை. மனித வாழ்க்கை வரையறுக்கப்பட்டது. இறை கட்டளைகளுக்குட்பட்டது.
எனவே இவ்வுலக வாழ்வில் பூமியில் குழப்பத்தை ஏற்படுத்தாதீர்கள். வரம்பு மீறாதீர்கள் இடப்பட்ட கட்டளைகளை வாழ்வின் இலக்குகளாக கொண்டு செயல்படுங்கள் என இறைவன் எச்சரித்துள்ளான். அவற்றை உணர்ந்துக் கொண்டே மனித இனம் மீறும் போது சில நேரம் இயற்கை நிகழ்வுகள் மூலம் மனித இனத்தை எச்சரித்து படிப்பினைக் கற்பிக்கின்றான் இறைவன்.
உலகில் சுனாமி, பூகம்பம், ,புயல், மழை, வெள்ளம், எரிமலை வெடிப்புக்கள் என பல நடந்து கொண்டேயிருக்கின்றது. கடந்த 100 வருடங்களில் மிகவும் மனித இனத்தை பாதித்த சம்பவங்களாக
1923-ம் ஆண்டு ஜப்பானில் ஏற்பட்ட பூகம்பத்தில் ஒரு லட்சத்து நாற்பதாயிரம் பேர் இறந்தனர்.
1935ல் இந்தியாவின் குவெட்டாவில் 50,000 பேரும்,
1939ல் சிலியில் 28,000 பேரும், அதே ஆண்டு துருக்கியில் 33,000 பேரும்,
1960ல் மொரோக்காவில் 12,000 பேரும்,
1976ல் சீனாவில் இரண்டு லட்சத்து நாற்பதாயிரம் பேரும், அதே ஆண்டு கவுதமாலாவில் 23,000 பேரும்,
1978ல் ஈரானில் 25,000 பேரும்,
1985ல் மெக்ஸிகோவில் 9,500 பேரும்,
1988ல் ஆர்மீனியாவில் 25,000 பேரும்,
1990ல் ஈரானில் 50,000 பேரும்,
1993ல் இந்தியாவின் லட்டூரில் 10,000 பேரும்,
1995ல் ஜப்பானில் 6,000 பேரும்,
1998ல் ஆப்கானிஸ்தான் மற்றும் தாஜிஸ்தானில் 5,000 பேரும்,
1999ல் துருக்கில் 17,000 பேரும்,
2001ல் குஜராத்தில் 13,000 பேரும்,
2003ல் ஈரானில் 41,000 பேரும்
பூகம்பத்தால் கொல்லப்பட்டுள்ளனர். இவை பேரழிவு ஏற்படுத்திய பூகம்பங்களின் பட்டியல். இவை தவிர சில ஆயிரக்கணக்கில் பலி கொண்ட பூகம்பங்களும் உண்டு. இவை மனித இனத்தை பெரிதும் பாதித்தாலும் மிருக இனங்கள் பெரிதும் தப்பிகொள்வதாக ஆய்வுகள் சுட்டிகாட்டுகின்றது
فلما رأوه عارضا مستقبل اوديتهم قالوا هذا عارض ممطرنا بل هو ما استعجلتم به ريح فيها عذاب اليم تدمر كل شيئ بامر ربها فاصبحوا لا يرى الا مسكنهم كذلك نجزى القوم المجرمين 46:24.25
ஆகவே (தண்டனையாகிய) அதனை தங்களது பள்ளத்தாக்குகளை முன்னோக்கிவரும் மேகக் (கூட்டமாக) கண்ட போது இது நமக்கு மழையை பொழிய வைக்கும் மேகமாகும், என்று அவர்கள் கூறிக் கொண்டனர். அல்ல. எதனை நீங்கள் விரைவாக தேடினீர்களோ அந்த ஒன்றாகும். (அது) ஒரு புயற்காற்று,அதில் நோவினை தரும் வேதனை இருக்கிறது (என்று கூறப்பட்டது).46:24.25
ஆகவே (தண்டனையாகிய) அதனை தங்களது பள்ளத்தாக்குகளை முன்னோக்கிவரும் மேகக் (கூட்டமாக) கண்ட போது இது நமக்கு மழையை பொழிய வைக்கும் மேகமாகும், என்று அவர்கள் கூறிக் கொண்டனர். அல்ல. எதனை நீங்கள் விரைவாக தேடினீர்களோ அந்த ஒன்றாகும். (அது) ஒரு புயற்காற்று,அதில் நோவினை தரும் வேதனை இருக்கிறது (என்று கூறப்பட்டது).46:24.25
1 comments:
ஏன் இந்த பேரழிவுகள் ?
:::::::::::::::::::::::::::::::::::::
போரழிவுகள் நாளுக்கு நாள் இதன் வேகம் அதிகரித்து வருகிறது .அவற்றின் எண்ணிக்கையிலும் அதிகரிப்பு இருந்து வருகிறது .
பூமியின் தட்ப வெட்ப , சீதோஷ்ண நிலையிலுள்ள மாற்றங்கள் ,
மேலும் பல்வேறு மாற்றங்கள் காரணமாக இந்த நிகழ்வுக்கு காரணமாக கூறப்படுகிறது .ஆனால் இன்னொன்றையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் . .உலகிற்கு இதுபற்றி கூற வேண்டிய தேவை இப்போது ஏற்பட்டிருக்கின்றது. அதாவது நூறு வருடங்களுக்கு முன்னர் ஒருவர் வாதம் செய்தார்.என்னை இறைவன் உலகைசீர்திருத்துவதற்காக அனுப்பியுள்ளான் என்பதே அவரது வாதம்.
"எனக்கு ஆதரவாக அல்லாஹ் விண்ணிலும் மண்ணிலும் அடையாளங்களைக் காட்டுவான் . பூகம்பங்கள் நிகழும் பேரழிவுகள் ஏற்படும் .மக்கள் எனது குரலின் பக்கம் கவனம் செலுத்தவில்லையென்றால் பெரும் பெரும் ஆபத்துகள் அவர்களை சூழ்ந்து கொள்ளும் " என அவர்கள் கூறினார்கள் . இப்போது அவர்கள் கூறிய விஷயங்கள் உண்மையானவை என்பது தெறிய வருகிறது.
Jumma kudba
23-- 11-- 2007
Post a Comment