நெஸ்டமோல்ட் அனுசரணையுடன் நடைபெற்ற சைக்கிள் ஓட்டப்போட்டியில் எமது ஊா் மைந்தன் முதலிடம்.
நெஸ்டமோல்ட் அனுசரணையுடன் Kurawalana Young Society இனால் ஏற்பாடு செய்யப்பட்ட சைக்கிள் ஓட்டப்போட்டியில் கஹட்டோவிட்டவைச் சேர்ந்த இளம் சைக்கிள் ஓட்ட வீரர் சகோதரர் பஸ்மில் முஸம்மில் அவர்கள் முதலாமிடத்தைப் பெற்றுக்கொண்டார்.
இப்போட்டியில் 30 இற்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
எமது இணையம் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். கிரிகட், புட்போல், போன்ற விளையாட்டுக்களுடன் ஒன்றியிருக்கும் எமது விளையாட்டு வீரர்களுக்கு, சகோதரர் பஸமில் அவர்களுடைய முன்மாதிறி, இதுபோன்ற இன்னும் பல விளையாட்டுகளோடு எமது விளையாட்டு வீரர்கள் ஈடுபடவேண்டும், வெற்றிகளைக் ஈட்டவேண்டும் என ஏக இறைவனிடம் பிரார்த்திக்கின்றோம்.
0 comments:
Post a Comment