கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

ஓய்வு பெற்ற ஆசிரியர் ஜமால்தீன் அவர்களின் இருதய சத்திர சிகிச்சைக்கான உதவி கோரல்

கஹட்டோவிட்ட இலக்கம் 33/B/1 இல் வசிக்கும்
ஓய்வு பெற்ற கணிதப்பாட ஆசிரியர் ஜனாப். ஜமால்தீன் அவர்கள் இருதய நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். அண்மையில் தனது கண்பார்வை குறைபாடு காரணமாக ஒரு கண்ணில் சத்திர சிகிச்சை செய்த போது, வைத்தியரின் தவறு காரணமாக அக்கண்ணில் பார்வையை இழக்க வேண்டி ஏற்பட்டது. அதனைச் சரிசெய்வதற்காக கண்டி அரசாங்க பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மயக்கிச் செய்ய வேண்டிய கட்டத்தின் போது, பரிசீலனைகளில் அவருக்கு இதய நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
jamaldeen sir
அதனை உறுதி செய்தவற்காக நவலோக்க தனியார் மருத்துவமனையில் டாக்டர்.நரேந்திரன், டாக்டர் வஜிர சேனாரத்ன போன்றோரால் பல பரீட்சைகள் மேற்கொள்ளப்பட்டு, இறுதியாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில்  NGEO Gramme Test மூலம் இதயத்தில் 4 அடைப்புகள் இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டது. உடனடியாக அறுவைச் சிகிச்சை (By Pass) மேற்கொள்ள டாக்டர் மஹேந்திர முனசிங்க அவர்களால் ஆலோசனை வழங்கப்பட்ட நிலையில், தேசிய வைத்திய சாலையில் நீண்ட காலம் காத்திருக்க வேண்டும் எனவும், கூறப்பட்டுள்ளது.

தனியார் வைத்தியசாலையில் இதனை மேற்கொள்வதற்கு சுமார் 08 இலட்சம் ரூ.800,000 இற்கு மேற்பட்ட தொகை தேவைப்படுகின்றது. தனது ஓய்வூதியத்தை மாத்திரமே கொண்டு வாழும் எமது ஆசிரியர் அவர்கள், தனது இந்த இக்கட்டான நிலையில் எமது ஊர் மக்கள், மாணவர் சமூகத்தை அன்போடு வேண்டி நிற்கின்றார்.

1977.05.12 ஆம் திகதி தனது ஆசிரியர் சேவையை ஆரம்பித்த இவர், முதல் நியமனப் பாடசாலையாக மட்/நடுவோடை முஸ்லிம் வித்தியாலயத்திலும், அதனைத் தொடர்ந்து மட்/பெரிய புல்லு மலை றோமன் கத்தோலிக்கப் பாடசாலை, கம்/கஹட்டோவிட்ட அல் பத்ரியா ம.வி, களு/முஸ்லிம் வித்தியாலயம், கம்/திஹாரிய அல் அஸ்ஹர் ம.ம.வி, கம்/குமாரிமுல்ல மு.வி, கம்/முஸ்லிம் பாலிகா வித்தியாலயம் ஆகியவற்றில் ஏறக்குறைய 38 ஆண்டுகள் கடமையாற்றிய பின் அண்மையில் தனது சுகயீனம் காரணமாக ஓய்வு பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இவரது சேவைக்காலத்தில் எமது ஊர்ப்பாடசாலையான கஹட்டோவிட்ட அல் பத்ரியா ம.வி. இல் மாத்திரம் சுமார் 25 வருடங்களும், முஸ்லிம் பாலிகா வித்தியாலயத்தில் சுமார் 3 ஆண்டுகளும் கடமையாற்றி, எமது பிரதேசத்தைச் சேர்ந்த பல கல்விமான்களையும், பல்துறைசார் அரச. தனியார் உத்தியோகத்தர்களையும், நல் ஒழுக்கப்பிரஜைகளையும் உருவாக்கியதில் தனக்கென்றொரு தனியான இடத்தை பலரின் அன்பு உள்ளங்களில் தக்கவைத்துக்கொண்ட ஒரு அருமை ஆசான் இவராவார்.

எமது சமூகத்தின் மேம்பாட்டுக்காக அரும்பாடுபட்ட ஆசிரியருக்கு எம்மால் முடிந்த உதவிகளைச் செய்து மேலான ஒரு ‘ஸதகா’வின் நன்மைகளைப் பெற்றுக்கொள்வோம்.

உங்களது உதவுதொகைகளை கீழ்வரும் வங்கிக் கணக்கிற்கு வைப்புச் செய்ய முடியும்.

Name: M.Jamaldeen
Acc. No: 8650056814
Commercial Bank – Nittambuwa Branch

Or

Name: M.Jamaldeen
Acc.No: 3157276
Branch: BOC – Nittambuwa

தொடர்புகொள்ளவேண்டி இருப்பின்
0772287377
0777032599

தங்களால் முடிந்த உதவியை கொடுத்து இறை திருப்தியைப் பெற்றுக் கொள்ளுமாறு எமது இணையம் சார்பாக வேண்டுகிறோம்.
கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:

பேரீச்சப் பழத்தின் சிறு துண்டையேனும் (தர்மம் செய்து) நரகத்திலிருந்து (உங்களைப்) பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

அதீ பின் ஹாத்திம் (ரலியல்லாஹு அன்ஹு) புகாரி 1417

12946954_1081978548515189_980806190_o
12948543_1081978575181853_1049431434_o
12953117_1081978615181849_1342683032_o
12959324_1081978571848520_846135417_o


0 comments:

Post a Comment