கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

கட்டாரில் இயங்கி வரும்கஹட்டோவிட்ட கல்வி அபிவிருத்தி நலன்புரிச்சங்கம் மூலம் போட்டோகொபி இயந்திரம் அன்பளிப்பு.

அல் ஹம்துலில்லாஹ் கஹட்டோவிட்ட அல்பத்ரியா ம.வித்தியாலயத்துக்கு கட்டாரில் இயங்கி வரும்கஹட்டோவிட்ட கல்வி அபிவிருத்தி நலன்புரிச்சங்கம் மூலம் போட்டோகொபி இயந்திரம் அன்பளிப்பு.
மேற்படி நிகழ்வு இன்று 28.03.2016 திங்கட்கிழமை பாடசாலை காலைக்கூட்டத்தில் வைத்து கட்டாரில் இயங்கி வருகின்ற KESQ சங்கத்தின் அங்கத்தவர்களால் வழங்கிவைக்கப்பட்டது இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய பூ நானா அவர்கள் இந்த சங்கத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த அல்ஹாஜ் ஜிப்ரி,அல் ஹாஜ் வபா போன்றவர்களை நன்றியுடன் நினைவு கூர்ந்ததோடு இந்த அன்பளிப்பு கட்டாரில் வசிக்கும் கஹட்டோவிட்ட வாழ் மக்களின் ஒன்றிணைந்த நன்கொடையாகும் இது இவர்களின் சிந்தனையில் இருந்த நீண்ட கால திட்டமாகும் எனவும் குறிப்பிட்டதோடு அந்த சங்கத்தின் கணக்காளராக பணிபுரிந்த அல் ஹாஜ் அன்ஸர் அவர்களுக்கும் இது செவ்வனே வந்தடைய உதவிய அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்து கொள்வதுடன் அல்லாஹ் அனைவருக்கும் நல்லருள் புரியவேண்டும் எனவும் பிரார்த்தித்து கொண்டதுடன். இந்த போட்டோகொபி இயந்திரத்தை உபயோகிப்பதில் சில விதிமுறைகளையும் ஒழுங்குமுறைகளையும் கடைப்பிடித்து மாணவர்களும் ஆசிரியர்களும் பயன்படும் வண்ணம் உபயோகிக்குமாறும் அறிவுரை கூறுகிறோம் என்றும் தனதுரையில் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மற்றும் பாடசாலை நலன்புரி சங்க அங்கத்தவர்கள் மற்றும் ஊர்பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.

குறிப்பு
ஏற்கனவே அல்பத்ரியா ம.வி அவசரமாக தேவைப்படும் வேலைகளை நாம் பட்டியலிட்டு உங்களுக்கு அறியத்தந்தோம் அந்த தேவைபட்டியலில் 8.ஆவது தேவையில் ஒன்றாகிய போட்டோகொபி் இயந்திரத்தினை கட்டார் கல்வி முன்னேற்ற சங்கத்தின் மூலம் நிறைவேற்றி கொடுக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியான செய்தியாகும் இது போல இன்னும் குறிப்பிட்ட தேவைகளை செய்துகொடுத்தால் அதுவே உங்கள் பாடசாலைக்கு நீங்கள் செய்யும் பேருபகாரமாகவும்,கல்வி மேம்பாட்டுக்கு பங்களிப்பு செய்தவர்களாகவும் மாற முடியும். ஆகவே உங்களால் முடிந்த உதவிகளை செய்து கொடுக்க இன்றே முயற்சிசெய்யுங்கள் நிச்சயம் அது வீண்போகாது.
எமது பாடசாலை அதை நாமே வளப்படுத்துவோம்.

0 comments:

Post a Comment