News Break : மெதுவாக..அடி மேல் அடி வைத்து…நாமலை நெருங்கிய C.I.D. – தாஜுதீன் கேசில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட நாமல்..அடுத்து வரும் தினங்களில் கைது
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புதல்வரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச அடுத்த வாரமளவில் கைதுசெய்யப்படுவதற்கான சாத்தியங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்களப் பத்திரிகை ஒன்று இந்த தகவலை இன்று சனிக்கிழமை வெளியிட்டுள்ளது.
பிரபல ரக்பீ வீரர் வசீம் தாஜுடீனின் படுகொலை தொடர்பான விசாரணைகள் பூர்த்தியடைந்திருக்கும் நிலையில் இந்த விவகாரத்தில் நாமல் ராஜபக்ச முக்கிய சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டு கைதுசெய்யப்படவிருப்பதாக கூறப்பட்டுள்ளது.
தாஜுடீன் கொலையுடன் சம்பந்தப்பட்ட பல தொலைபேசி கலந்துரையாடல்களை ஆய்வுசெய்திருக்கும் நிபுணர்கள் சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றத்தில் சாட்சியங்கள் பலவற்றை சமர்ப்பித்திருப்பதாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கைதுசெய்யப்படாமல் அதனை தடுப்பதற்காக சட்ட உதவிகளை பெறுவதற்கு நாமல் ராஜபக்ச தனது சட்டத்தரணிகள் ஊடாக முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக மற்றுமொரு தகவல் குறிப்பிடுகின்றது.
Puttalam today
0 comments:
Post a Comment