கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

பூசாரியிடம் சிகிச்சைக்கு சென்ற பெண் மரணம்

பூசாரி ஒருவரிடம் சிகிச்சை பெற சென்ற பெண்ணொருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று அனுராதபுரம் கடுகெலியாவ பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது.
%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D++%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D.....
இவ்வாறு உயிரிழந்தது அனுராத புரம் - நெல்லிகுளம் பிரதேசத்தை சேர்ந்த 36 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயாவார்.

இவர் தனது கணவனுடன் நேற்று குறித்த பூசாரியிடம் சிகிச்சை பெற்றுக்கொள்வதற்காக கடுகெலிய பிரதேசத்தில் அமைந்துள்ள பூசாரியின் வீட்டிற்கு சென்றிருந்தார்.

அங்கு பூஜைகள் நடத்தப்பட்டு சிகிச்சையளிக்கும் போது அவருக்கு மிகுந்த கஷ்டங்கள் ஏற்படுத்தப்பட்டதாக அவரது கணவர் தெரிவித்திருந்தார்.

அதனை தொடர்ந்து குறித்த பெண்ணிற்கு தேசிக்காய் ஒன்றை விழுங்க வைத்துள்ள நிலையில் , இதன் போது அந்த பெண் மயக்கமுற்றுள்ளார் .

மயக்கமுற்றவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முற்பட்டுள்ள போது அதனை குறித்த பூசாரி தடுத்துள்ளதாக அவரது கணவர் தெரிவித்தார்.

எனினும் , இன்று காலை குறித்த கணவரால் அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . எவ்வாறாயினும் மருத்துவமனையில் அனுமதிக்கும் முன்னரே குறித்த பெண் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் குறித்த பூசாரி மற்றும் மேலுமொரு பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை அனுராதபுரம் காவற்துறையினர் மேற்கொள்கின்றனர்.

0 comments:

Post a Comment