கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

நாமல் ராஜபக்சவின் சொற்படி நடக்க அமைச்சர் சியம்பலாபிட்டியவிற்கு ஜனாதிபதி ஆணை!

டெலிகொம் நிறுவனத்திற்கு ஆட்சேர்ப்பிற்காக அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய 60 நபர்களின் பெயர்களை சிபாரிசு செய்திருந்த போதும் அதில் 40 நபர்களின் பெயர் நாமல் ராஜபக்சவினால் நீக்கப்பட்டுள்ளது.
இதை அறிந்த அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய ஜனாதிபதி கவனத்திற்கு இந்த விடயத்தை கொண்ட சென்ற போது ஜனாதிபதியோ பா.உறுப்பினர் நாமல் சொல்கின்ற படி நடந்து கொள்ளுமாறும் அறிவித்துள்ளார்.
இதன் பின் அமைச்சரோ மிகுதியாக உள்ள 20 நபர்களின் பெயர்களையும் திரும்பப் பெற்றுக் கொண்டதாகவும், கேகாலை மாவட்ட அரச ஆதரவாளர்களிடையே இந்தப் பிரச்சினை பெரும் புயலை கிளப்பியுள்ளதோடு அமைச்சரும் வேண்டா வெறுப்புடன் இருப்பதாக தெரியவருகின்றது.
tamilwin

கண்டியில் மைத்திரியின் கூட்டத்தில் இலட்சத்தை தாண்டிய மக்கள்வெள்ளம் (Photo)

கண்டியில் மைத்திரிபாலவை ஆதரித்து இடம்பெறும் கூட்டத்தில் மக்கள் வெள்ளம் அலைமோதியதாகவும், கண்டியில் இதுகால வரை இடம்பெற்ற அரசியல் கூட்டங்களுடன் ஒப்பிடும் போது இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கும் மக்கள் எண்ணிக்கை மிக அதிகமாக காணப்பட்டதாக தகவல்கள் சொல்லுகின்றன.

இந்தக் கூட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான முஸ்லிம்களை காண முடிவதாகவும் அத்துடன் மலையகத் தமிழ் மக்களும் பெருமளவில் திரண்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் குறிப்பிடுகின்றார்.
.
சுமார் 03 இலட்சம் வரையான மக்கள் திரண்டிருக்கலாம் என  செய்தியாளர் விஷேடமாக சுட்டிக் காட்டியுள்ளனர்.








ஒரு ஜனாதிபதி வேட்பாளராக மைத்ரிபாலவின் முன்மாதிரி நடவடிக்கைகள்!

ஜனாதிபதி வேட்பாளர் என்பதை விட தான் ஒரு சாதாரண குடிமகன் எனும எண்ணப்போக்கை தொடர்ந்து வெளிப்படுத்தி வருவதுடன் மக்களின் நண்பனாக அனைத்தையும் வெளிப்படையாக பேசி வரும் பொது வேட்பாளர் மைத்ரிபால சிறிசேன நேற்றைய தினம் தனது வேட்பு மனுத்தாக்கலின் போது முழுமையான சொத்து விபரத்தை வெளியிட்டதோடு பொது மக்களில் யார் வேண்டுமானாலும் அதன் பிரதியைப் பெற்று பார்வையிடலாம் எனவும் அறிவித்துள்ளார்.

அத்தோடு நின்றுவிடாமல் தனது வருடாந்த எரிபொருள் செலவுக்காக ஒதுக்கப்பட்டிருந்த தொகையில் எஞ்சியிருந்த 1 மில்லியன் ரூபாயை மீண்டும் அரசிடமே திருப்பிக் கொடுத்துள்ளதோடு ஏற்கனவே பொருந்தியபடி கட் அவுட்கள், பதாதைகளுக்காக வழங்கப்பட்ட பணத்தைக் கொண்டு மக்கள் வங்கியில் பிரத்யேகமான வங்கிக் கணக்கொன்றையும் ஆரம்பித்து சிறுநீரக சிகிச்சைக்கான நிதியத்தையும் செயற்படுத்த ஆரம்பித்துள்ளார்.

தேர்தலுக்கு முன்பாகவே இவரது குறித்த செயற்பாடுகள் மூத்த அரசியல்வாதிகளையும் பெரிதும் கவர்ந்திருப்பதோடு பலரும் அவருக்கு பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளதாகவும், இருப்பினும் தமது இயல்பான நடவடிக்கைகளை அவர் தொடர்வதாகவும் தேர்தல் பிரச்சாரக் குழுவைச் சேர்ந்த ஏற்பாட்டாளர் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

sonakar

மஹிந்தவின் தூக்கத்தை கெடுக்கும் சந்திரிக்கா..!

மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்குள் இருந்து மைத்திரிபால சிறிசேனவை வெளியே கொண்டு வந்து, எதிரணியின் பொதுவேட்பாளராக நிறுத்திய இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தனது போரை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியுள்ளார். 
நேற்று அத்தனகலவில் நடந்த கூட்டம் ஒன்றில், முன்னாள் துடுப்பாட்ட வீரரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அர்ஜுன ரணதுங்கவை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அத்தனகல தொகுதி அமைப்பாளராக நியமிப்பதாக சந்திரிகா அறிவித்துள்ளார

அத்தனகல தொகுதி பண்டாரநாயக்க குடும்பத்தின் சொந்த தொகுதியாகும். இந்த தொகுதி அமைப்பாளராக அர்ஜீன ரணதுங்கவை நியமிப்பதாக அறிவித்துள்ள சந்திரிகா, இந்தப் பதவிக்கு அவரைவிடப் பொருத்தமானவர் வேறெவரும் இருக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.

போரில் ஈட்டிய வெற்றியை வைத்து தற்போதைய அரசாங்கம் மிகப் பெரியளவில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் சந்திரிகா குற்றம்சாட்டியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அத்தனகல அமைப்பாளராக அர்ஜுன ரணதுங்கவை சந்திரிகா அறிவித்துள்ளதன் மூலம், அவர் கட்சியை மீண்டும் கைப்பற்றுவதற்கான போரைத் தொடங்கியுள்ளார் என்று கருதப்படுகிறது.

ஏற்கனவே மைத்திரிபால சிறிசேனவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக்கும் வரை ஓய மாட்டேன் என்று சந்திரிகா பகிரங்கமாக எச்சரிக்கை வீடுத்திருந்தார்.

இதற்கிடையே, அர்ஜுன ரணதுங்கவை அத்தனகல தொகுதி அமைப்பாளராக நியமிக்கும் அதிகாரம், சந்திரிகா குமாரதுங்கவுக்கு கிடையாது என்று, சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலர் அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்துள்ளார்.

jaffnamuslim

தாஸீம் நானா அவர்கள் காலமானார்.


கஹடோவிடாவைச் சோ்ந்த  தாஸீம் நானா அவர்கள் காலமானார்.  இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.  அன்னார் சகோதரி சித்தி ஆய்ஷா அவர்களின் கனவரும், சகோதரர் அஸீம்(CTB),  ஜெமீலா, முனீரா (தபால் நிலைய உத்தியோகித்தர் Kahatowita Post Office), பாஸில் ஆகியோரின்   தந்தையும் ஆவார். அனனாரின் ஜனாஸா நல்லடக்கம் நாளை ( 08.12.2014)  முகியத்தீன் ஜும்ஆப் பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்


. اَللَّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَعَافِهِ وَاعْفُ عَنْهُ، وَأَكْرِمْ نُزُلَهُ، وَوَسِّعْ مَدْخَلَهُ، وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ، وَنَقِّهِ مِنَ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ اْلأَبْيَضَ مِنَ الدَّنَسِ، وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِنْ دَارِهِ، وَأَهْلاً خَيْرًا مِنْ أَهْلِهِ، وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْجِهِ، وَأَدْخِلْهُ الْجَنَّةَ، وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْرِ [وَعَذَابِ النَّار


இறைவா! இவரை மன்னிப்பாயாக! இவருக்கு அருள்புரிவாயாக! இவருக்கு சுகம் அளிப்பாயாக! இவரது தவறுகளை அலட்சியப்படுத்துவாயாக! இவரது தங்குமிடத்தை மதிப்புமிக்கதாக ஆக்குவாயாக! மேலும் விசாலமானதாக இவரது நுழைவிடத்தை ஆக்குவாயாக! வெண்மையான ஆடை அழுக்குகளிலிருந்து தூய்மைப்படுத்துவதுபோல் இவரை இவரது தவறுகளிலிருந்து தண்ணீராலும் ஆலங்கட்டி நீராலும் பனிக்கட்டியாலும் தூய்மையாக்குவாயாக! இவரது இல்லத்தை விட சிறந்த இல்லத்தை (மறுமையில்) அளிப்பாயாக! இவரது துணையைவிட சிறந்த துணையை இவருக்கு ஏற்படுத்துவாயாக! இவரைச் சுவனத்தில் நுழையச் செய்து கப்ருடைய வேதனை, நரகவேதனை ஆகியவற்றிலிருந்து காப்பாற்றுவாயாக!

பொதுபல சேனா மீதான, சிங்கள சகோதரர்களின் ஆதரவில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி..!

இலங்கை திரு நாட்டில் பலரும் பொறாமைப்பட்ட ஒரு இயக்கதித்தின்  வளர்ச்சி என்றால் அது பொது பல சேனாவின் வளர்ச்சி தான். பாமர பௌத்தர்களும் ஏன் படித்த பௌத்தர்களும் கூட அவர்களை சரி கண்டதை மறுக்க முடியாது. ஹலால் பிரச்சினை முதல் நானும் இவர்களின் பதிவுகளை தவறாமல் படித்து வருகிறேன். முக்கியமாக முகநூல் பதிவுகளையும் அவற்றிற்கு இடும் பின்நூட்டல்களையும் ஒன்று விடாமல் படிப்பேன். சில இஸ்லாமிய சகோதரர்கள் மிகக்கேவலமான வார்த்தைகளை (இஸ்லாத்துக்கு இழுக்கு சேர்க்கும் வகையில்) பின்நூட்டல் இடுவதையும் ஆங்காங்கே கண்டதுண்டு. ஆனால் 90 வீதமான (ஏன் சில பதிவுகளில் 100 வீதமான என்று கூட கூறலாம்) பெரும்பான்மை சகோதரர்களின் பின்நூட்டல் இவ்வியக்கத்தை ஆதரிப்பதும் போற்றிப் புகழ்வதுமாகவே இருந்தது. அவற்றை வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் பொது பல சேனா அனைத்து பெரும்பான்மை உள்ளங்களையும் வென்று நாட்டையே புரட்டிப் போடப்பார்க்கிறார்கள் என்று தான் எண்ணத் தோன்றியது. அந்த அளவுக்கு அவர்களின் பின்நூட்டல்கள் பொது பல சேனா மீதான கண்மூடித்தனமான நம்பிக்கையை பாறைசாற்றுவதாகவும் ஆக்ரோஷத்தை கக்குவதாககவுமே இருந்தது.
எனினும் ஜனாதிபதித் தேர்தல் களம் நாட்டில் பல மாற்றங்களை ஏற்படுத்தி வரும் இந்த நேரத்தில் பொது பல சேனா மீதான பெரும்பான்மை சகோதரர்களின் ஆதரவில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி ஒரு முக்கியமான மாற்றம் தான். சிறுபான்மையினருக்கு இது நிம்மதியை தரும் செய்தியாகவே தெரிகிறது. சென்ற மாதம் 27ம் திகதி பொது பல சேனா அரசாங்கத்துக்கான ஆதரவை பகிர்ங்கப் படுத்தியத்தை தொடர்ந்து பொது பல சேனாவை போற்றி பாராட்டியவர்களே தூற்ற ஆரம்பித்து விட்டார்கள்.

“காட்டிக் கொடுத்து விட்டீர்கள். ஏமாற்றி விட்டீர்கள். உங்கள் உண்மை முகம் தெறிந்து விட்டது. இனியும் எம்மை ஏமாற்ற முடியாது. சிங்களவர்களிடம் இனியும் வர வேண்டாம். உங்கள் துர்க்குணம் வெளிப்பட்டுவிட்டது. நாங்கள் என்றும் உங்களை மன்னிக்க மாட்டோம். விரைவில் அழிந்து விடுவீர்கள். உங்களது முடிவு மிக தொலைவில் இல்லை.” போன்ற பல கருதத்துக்கள் போற்றி புகழ்ந்தவர்களாலேயே வெளிப்படுத்தப்படுகிறது. இது அவர்களின் ஆதங்கத்தை வெளிக்காட்டுகிறது.  காலம் செல்ல செல்ல அவர்களின் ஆதிக்கம் இல்லாமலே போகும் என்பதை எதிர்பார்க்கலாம். எது நடந்தாலும் முஸ்லிம் சமூகம் விழிப்புடனேயே இருக்க வேண்டும். 

‘அவர்களும் சூழ்ச்சி செய்தார்கள். இறைவனும் சூழ்ச்சி செய்தான்; சூழ்ச்சி செய்பவர்களிலெல்லாம் சிறந்த சூழ்ச்சி செய்பவன் இறைவனேயாவான்’ (அல்-குர்ஆன் 3:54)

 தஸ்னீம் ஜம்பி எஹலியகொட-

முன்னால் ஜனாதிபதி சந்திரிக்காவும், பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க கஹடோவிடாவில் (photos)

இன்று நண்பகல் 12.30 மணியளவில் எமது கிராமத்தில் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த  கூட்டமொன்றில் முன்னால் ஜனாதிபதி சந்திரிக்காவும், பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க, மாகாண சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

IMG_20141207_122607_0
இங்கு கருத்துதெரிவித்த சந்திரிக்கா அம்மையார் நாட்டில் அபிவிருத்தி எனும் பெயரில் பாரிய சுரண்டல் இடம்பெறுகின்றதாகவும். இந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்திலே வரலாற்றில் என்றும் இல்லாதவாறு முஸ்லிம்களுக்கு எதிராக பாரிய வன்முறைச் சம்பவங்கள் பதிந்திருப்பதாகவும் சுட்டிக்காட்டினார். மேலும், யுத்தம் இல்லாதபோதும், இன்று மக்களுடைய வாழ்க்கைச் சுமை அதிகரித்துள்ளதாகவும் நாம் ஒரு ராத்தல் பானை 3.50 ரூபாவுக்கு  கொடுத்தோம் ஆனால் இப்போது அது 60 ரூபாவுக்கு உயா்தப்பட்டிருப்பதாகவும் அவர் கருத்துக்கூறினார்.

ஊழல் மோசடிகளை இல்லாதொழிக்ககவும் மக்களின் வாழ்க்கைச் சுமையைக் குறைக்கவும், சிதைந்துபோயுள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சியைக் கட்டியெழுப்பவும் தாம் இம்முறை அரசியல் களத்தில் காலடி எடுத்துவைக்க தேவையேட்பட்டதாகவும். பொதுவேற்பாளர் மைத்திரிபால சிரிசேன அவர்கள் போட்டியிடும் ”அன்னம்” சின்னத்திற்கு உங்களது வாக்கை வளங்குமாறும் வேண்டிக்கொண்டார்.
IMG_20141207_124004_0
IMG_20141207_124037_0
IMG_20141207_122735_0


இம்முறை 1993 ஆண்டு O/L மாணவர்களின் ஒன்றுகூடல் சற்று வித்தியாசமாக நடாத்தப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் 93ம் ஆண்டு சாதாரண தர மாணவர்கள் தொடர்ந்தும் 2ஆவது முறையாக ஒன்றுகூடியிருந்தார்கள். ஆனால் இந்த ஒன்றுகூடல் சற்று வித்தியாமாகவும், அவா்களுடைய ஆரம்பகால பாடசாலை வாழ்கையை நினைவுகூறத்தக்கதாகவும் அமைந்திருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது. சிறப்பம்சம் என்னவென்றால் அன்றைய கால அல்பத்ரியா மகாவித்தியாலயத்தின் கல்வி தரத்தில் திருப்புமுனையாக செயல்பட்ட ஆசான்களை அழைத்து கௌரவித்துள்ளார்கள். விசேடமாக அல்பத்ரியாவின் வரலாற்றில் மரைக்கவோ மறுக்கவோ முடியாத அதிபராக கால்பதித்த முன்னால் அதிபர் ஜப்பார் அவர்களையும் அழைந்து வந்திருந்தமை அனைவரையும் சந்தோசத்தில் ஆழ்தியிருந்தது.

இதற்கு சான்றாக  அல்பத்ரியாவின் பழைய மாணவா்  பூஸரி ஆசிரியர் அவர்களின் முகநுால் பக்கத்தில் இருந்து

அதிபர் திலகம் ஜப்பார் ஸேர் அவர்களை தற்செயலாக இன்று சகோ. ஸில்மி வீட்டில் சந்திக்கக் கிடைத்தது. அவரது காலத்தில்தான் முதன்முதலில் உயர் தர வர்த்தகப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டது. இக்காலப்பிரிவில் இருந்த கலை மற்றும் வர்த்தகப் பிரிவு இரண்டுக்கும் நான் மட்டுமே ஓர் ஏக மாணவனாக இருந்தேன். இவரது காலத்தில் சிரேஷ்ட மாணவ தலைவனாக இருக்கும் பாக்கியமும் எனக்கே கிடைத்தது. விடுகை வருடத்தில் நான் வேறு பாடசாலைக்குச் சென்றபோதும், எனது வகுப்பில் இருந்த அத்தனைபேரும் (நான் உட்பட) பல்கலைக்கழகம் தெரிவாகினர். அந்த அத்தனைபேரும் இன்று பல பாடசாலைகளில் ஆசிரியர்களாகக் கடமை புரிந்து வருகின்றனர். இது, ஜப்பார் ஸேர் சாதித்த சாதனைகளுள் மிகப் பெரிய சாதனையாகும். இவர் ஓர் அதிபர் மாத்திரமல்ல; இன்றைய அதிபர்களுக்கு முன்மாதிரியான ஒருவரும்தான். இறைவா, அவரது தவறுகளை மன்னித்து அவருக்கு நீண்ட ஆயுளையும் நல்ல தேகாரோக்கியத்தையும் வழங்குவாயாக!”

மற்றும் அசிரியர்களாகிய இல்யாஸ் மாஸ்டர், ஸகரியா டீச்சர், பரீதா டிச்சர், லதீப் மாஸ்டர், ...... இன்னும் பல ஆசிரியர்களும் கலந்த சிறப்பித்திருந்தார்கள்.

இன்று கல்வியைப் போதிக்கின்ற ஆசான்களே மதிக்காப்படாத காலகட்டத்தில் இப்படியொரு முன்மாதிரியை முன்வைத்து 93ம் ஆண்டு மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த ஒன்றுகூடல் பாரட்டப்படவேண்டியதே!

இறைவா எமக்கு கல்வி புகட்டிய ஆசான்களின் தவறுகளை மன்னித்து அவர்களுக்கு நீண்ட ஆயுளையும் நல்ல தேகாரோக்கியத்தையும் வழங்குவாயாக!”