கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

இம்முறை 1993 ஆண்டு O/L மாணவர்களின் ஒன்றுகூடல் சற்று வித்தியாசமாக நடாத்தப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் 93ம் ஆண்டு சாதாரண தர மாணவர்கள் தொடர்ந்தும் 2ஆவது முறையாக ஒன்றுகூடியிருந்தார்கள். ஆனால் இந்த ஒன்றுகூடல் சற்று வித்தியாமாகவும், அவா்களுடைய ஆரம்பகால பாடசாலை வாழ்கையை நினைவுகூறத்தக்கதாகவும் அமைந்திருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது. சிறப்பம்சம் என்னவென்றால் அன்றைய கால அல்பத்ரியா மகாவித்தியாலயத்தின் கல்வி தரத்தில் திருப்புமுனையாக செயல்பட்ட ஆசான்களை அழைத்து கௌரவித்துள்ளார்கள். விசேடமாக அல்பத்ரியாவின் வரலாற்றில் மரைக்கவோ மறுக்கவோ முடியாத அதிபராக கால்பதித்த முன்னால் அதிபர் ஜப்பார் அவர்களையும் அழைந்து வந்திருந்தமை அனைவரையும் சந்தோசத்தில் ஆழ்தியிருந்தது.

இதற்கு சான்றாக  அல்பத்ரியாவின் பழைய மாணவா்  பூஸரி ஆசிரியர் அவர்களின் முகநுால் பக்கத்தில் இருந்து

அதிபர் திலகம் ஜப்பார் ஸேர் அவர்களை தற்செயலாக இன்று சகோ. ஸில்மி வீட்டில் சந்திக்கக் கிடைத்தது. அவரது காலத்தில்தான் முதன்முதலில் உயர் தர வர்த்தகப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டது. இக்காலப்பிரிவில் இருந்த கலை மற்றும் வர்த்தகப் பிரிவு இரண்டுக்கும் நான் மட்டுமே ஓர் ஏக மாணவனாக இருந்தேன். இவரது காலத்தில் சிரேஷ்ட மாணவ தலைவனாக இருக்கும் பாக்கியமும் எனக்கே கிடைத்தது. விடுகை வருடத்தில் நான் வேறு பாடசாலைக்குச் சென்றபோதும், எனது வகுப்பில் இருந்த அத்தனைபேரும் (நான் உட்பட) பல்கலைக்கழகம் தெரிவாகினர். அந்த அத்தனைபேரும் இன்று பல பாடசாலைகளில் ஆசிரியர்களாகக் கடமை புரிந்து வருகின்றனர். இது, ஜப்பார் ஸேர் சாதித்த சாதனைகளுள் மிகப் பெரிய சாதனையாகும். இவர் ஓர் அதிபர் மாத்திரமல்ல; இன்றைய அதிபர்களுக்கு முன்மாதிரியான ஒருவரும்தான். இறைவா, அவரது தவறுகளை மன்னித்து அவருக்கு நீண்ட ஆயுளையும் நல்ல தேகாரோக்கியத்தையும் வழங்குவாயாக!”

மற்றும் அசிரியர்களாகிய இல்யாஸ் மாஸ்டர், ஸகரியா டீச்சர், பரீதா டிச்சர், லதீப் மாஸ்டர், ...... இன்னும் பல ஆசிரியர்களும் கலந்த சிறப்பித்திருந்தார்கள்.

இன்று கல்வியைப் போதிக்கின்ற ஆசான்களே மதிக்காப்படாத காலகட்டத்தில் இப்படியொரு முன்மாதிரியை முன்வைத்து 93ம் ஆண்டு மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த ஒன்றுகூடல் பாரட்டப்படவேண்டியதே!

இறைவா எமக்கு கல்வி புகட்டிய ஆசான்களின் தவறுகளை மன்னித்து அவர்களுக்கு நீண்ட ஆயுளையும் நல்ல தேகாரோக்கியத்தையும் வழங்குவாயாக!”

0 comments:

Post a Comment