ஜெக்கட், கையுறைகள் அணிந்து கொழும்பிற்கு வந்த ஹரீன் : ஊவாவில் கடும் குளிர் என கேளிக்கை..!
ஐக்கிய தேசியகட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிற்கு வருகை தந்த ஊவா மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் ஹரீன் பெர்னாண்டோ, கடும் குளிருக்கு அணியும் ஜெக்கட், காதுக்கு அணியும் பாதுகாப்பு கவர் மற்றும் கையுறைகள் ஆகியவற்றை அணிந்து வந்ததோடு ஊவா மாகாணத்தில் கடும் குளிர் என சிரித்துக்கொண்டே கூறினார்.
ஊவா மாகாணத்தில் கடும் குளிர் நிலவுகின்றமையால் சபை அமர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. அதனால் தான் நானும் இந்த உடைகளை அணிந்துகொண்டு இங்கு வந்தேன் என கேலிக்கையாக தெரிவித்தார். குளிர் காரணமாக சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டால் இதன் மூலம் தெளிவாகின்றது மக்களை எவ்வாறு பிரதிநிதித்துவம் படுத்துகின்றனர் என. மேலும் ஊவா மாகாணத்தில் உள்ள மக்கள் மற்றும் மாணவர்களுக்கும் குளிரில் பாதுகாப்பாக இருப்பதற்கு ஜெக்கட், கையுறைகள் போன்றன ஊவாமாகாண முதலமைச்சர் பெற்றுகொடுக்க வேண்டும்.
இதேவேளை இன்னும் சில மாகாணங்களில் கடும் வெப்பநிலை நிலவுகின்றது என கூறி சபை அமர்வுகளை அரசாங்கம் ஒத்திவைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்றார்.
0 comments:
Post a Comment