கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

அரசாங்கத்தை விட்டு வெளியேறுகின்றது மு.கா...!!!





மு.கா அரசை விட்டு வெளியேறுமா? இல்லையா? என்ற கருத்து மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அக்கட்சி அரசை விட்டு வெளியேற தீர்மானம் எடுத்துள்ளதாக நம்பகரமாக தெரியவருகின்றது.

முகா வின் உயர் பீடக் கூட்டம் நாளை கொழும்பில் இடம்பெறவுள்ளது. இதன்போது அரசிலிருந்து வெளியேறுவது என்பது தொடர்பில் இறுதி முடிவெடுக்கப்பட்டு வேட்பு மனுவுக்கு பின்னர் அது தொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவிப்பை கட்சி வெளியிடத் தீர்மானித்துள்ளதாகவும் அறியவருகின்றது.

முகா வின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 08 பேரும் முகாவின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் 04வரும் உட்பட உயர் பீட உறுப்பினர்கள் நாளைய கூட்டத்தின் போது ஒருமித்த நிலையில் அரசை விட்டு வெளியேறுமாறு வலியுறுத்தி கூற தீர்மானித்துள்ளனர்.

அரசை விட்டு வெளியேறுவதில்லை என ஏற்கனவே ரவூப் ஹக்கீம் தீர்மானித்து அது தொடர்பில் ஜனாதிபதி மகிந்தவுக்கு உத்தரவாதமும் வழங்கிவிட்டு உம்ராவுக்குச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையிலேயே இந்த அதிரடி மாற்றம் முகா வுக்குள் ஏற்பட்டுள்ளது என தெரியவருகின்றது.

மாற்றத்திற்கான பின்னணி

கட்சிக்கும் தலைமைத்துவத்திற்கும் ,நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் மற்றும் உயர்பீடத்தினது அனுமதியின்றியும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் 03 பேர் திரைமறைவில் அரசுடன் நடத்தி வந்த பேரப் பேச்சுக்களும் காய்நகர்த்தல்களும் அம்பலத்திற்கு வந்ததை அடுத்தே – கட்சியை பாதுகாக்கும் நோக்கில் இந்த அதிரடி மாற்றத்திற்கு முகா வரக்காரணம் என கட்சித் தகவல்களிலிருந்து தெரியவருகின்றது.

மகிந்தவுக்கு ஆதரவளிப்பதென்றால் மேலும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி தரவேண்டும் என முகா அரசுக்கு நிபந்தனை விதித்திருந்தாக செய்திகள் வெளிவந்திருந்தன.

இந்தச் செய்தியை அவதானித்த தலைவர் ரவூப் ஹக்கீமுக்கும் கட்சிக்கும் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

ஏனெனில் கட்சிக்கும் தலைவர் ஹக்கீமுக்கும் தெரியாமலேயே தான் குறித்த எம்பிப் பதவி தொடர்பிலான பேரப் பேச்சு இடம்பெற்றுள்ளது.

கிழக்கு மாகாண சபை அமைச்சர்களான ஹாபீஸ் நஸீர் அகமட் , மன்ஸூர் மற்றும் மாகாண சபை உறுப்பனர் ஜெமீல் ஆகியோரே குறித்த பேரப் பேச்சில் சம்மந்தப்பட்டுள்ளனர்.

இதன் படி அரசு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்கும் பட்சத்தில் அந்தப் பதவிக்கு மன்ஸூரை நியமித்து, ஜெமீல் கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை பொறுப்பேற்பதென்றும் அவ்வாறின்றேல் ஜெமீல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பொறுப்பெடுத்து மன்ஸூரை நாடாளுமன்ற உறுப்பினராக நியமிப்பது என்ற ரீதியிலேயே குறித்த எம்பிப் பதவி கோரப்பட்டுள்ளது.

இப்பேச்சு குறித்து அரசின் உயர் மட்ட பிரமுகர் ஒருவர் ஹக்கீமுக்கு எடுத்துரைத்ததன் பிற்பாடே இது தொடர்பில் ஹக்கீமுக்கு அறியக்கிடைத்துள்ளது.

இது ஹக்கீமின் தனிப்பட்ட கௌரவத்திற்கு பெரும் சவாலை ஏற்படுத்தியதுடன் கட்சியை துண்டாடி சமுகத்தின் மனோநிலைக்கு மாற்றமாக முகா வை இட்டுச்செல்ல மேற்கொள்ளப்பட்ட மறைமுக நடவடிக்கை என்ற ரீதியில் இப்பேரப்பேச்சை கடுமையாக நோக்கினார் தலைவர் ரவூப் ஹக்கீம்.

இதன் பிற்பாடே கட்சியை பாதுகாக்கும் நோக்கிலும் முஸ்லிம் சமுகத்தின் உணர்வுக்கு மதிப்பளிக்கும் வகையிலும் மேற்சொன்னவாறு அரசை விட்டு வெளியேறும் முடிவுக்கு முகா வரக் காரணம் என கட்சியின் சிரேஸ்ட உயர்பீட உறுப்பினர்கள் எமது இணையத்தளத்திற்கு பிரத்தியேகமாக சுட்டிக்காட்டினர்.

அது மாத்திரமன்றி முகா வின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் முஸ்லிம் சமுகத்தினர் மத்தியில் உள்ள மைத்தரி அலையை கருத்திற் கொண்டு மைத்திரிப் பக்கம் பூரணமாக சாய்ந்தவாறு அறிக்கைகளை விட்டும் மக்கள் மத்தியில் கருத்துக்களை கூறி வந்ததுடன் அரசில் தொடர்ந்து இருப்பதற்கு இதுவரை எடுத்த தீர்மானம் ரவூப் ஹக்கீமின் தனிப்பட்ட தீர்மானம் என்ற ரீதியில் மேற்படி எம்பிக்கள் கருத்து வெளிப்படுத்தியதையும் முகா இவ்வாறு அரசிலிருந்து வெளியேறுவதற்கு கூறப்படும் மற்றுமொரு காரணமாகும்.

கொழும்பில் கடந்த 23ஆம் திகதி முகா வின் எம்பிக்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களை சந்தித்து ரவூப் ஹக்கீம் தேர்தல் தொடர்பில் கருத்தறிந்தார்.

இக்கலந்துரையாடலின் பிற்பாடு கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான அமைச்சர் ஹாபீஸ் நஸீர், அமைச்சர் மன்ஸூர் ,ஜெமீல் மற்றும் நஸீர் ஆகியோர் மிக இரகசியமாக அன்று மாலை 5.30 மணியளவில் அலரிமாளிகைக்கு சென்ற விடயமும் ரவூப் ஹக்கீமுக்கு பெரும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளதாக தெரியவருகின்றது.

குறித்த தினம் மேற்படி நால்வரும் அலரிமாளிகைக்கு சென்ற விடயம் நம்பகரமான தரப்பொன்றிலிருந்து அந்த நிமிடமே எமது இணையத்திற்கு கிடைக்கப்பெற்றிருந்த போதிலும் கட்சியினதும் சமுகத்தினதும் ஒற்றுமை ,நலன் கருதி அதனை நாம் பிரசுரம்; செய்யவில்லை.
ஏனெனில், முகா தற்போது எடுத்துள்ள அதிரடி மாற்றத்திற்கு அந்த நால்வரினதும் அலரி மாளிகை விஜயம் ஒரு தடைக்கல்லாக அமைந்து விடக்கூடாது என்பதற்காகவே அந்த செய்தியை அன்று நாம் பிரசுரம் செய்யவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான ஒரு சூழ்நிலையில்தான் கட்சியை பாதுகாக்கும் நோக்கிலும் சமுகத்தின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் முகா அரசை விட்டு வெளியேற முடிவெடுப்பதற்கு காரணம் என உயர்பீட உறுப்பினர்கள் மேலும் குறிப்பிட்டுக் காட்டினர்.

முகா வின் 08 எம்பிக்களும் அரசை விட்டு வெளியேற வேண்டும் என்ற உறுதிப்பாட்டை மனப்பூர்வமாக எடுத்துள்ளதாகவும் அது தொடர்பில் நாளை கூடவுள்ள உயர்பீடக் கூட்டத்தின் போது மேற்படி எம்பிக்கள் தலைவர் ஹக்கீமிடம் உறுதியாக எடுத்துரைக்கவுள்ளதாகவும் கட்சி வட்டாரத் தகவல்களிலிருந்து தெரியவருகின்றது.

இந்த நிலையில் முகாவின் வெளியேற்றத்தை அடுத்து கிழக்கு மாகாண சபையில் ஏற்படும் தளம்பல் நிலையையும் அதன் மூலம் எதிர்க்கட்சிகள் ஆட்சியை கைப்பற்றக்கூடும் என்ற எதார்த்தத்தையும் அறிந்து கொண்டுள்ள அரசு உடன் மாகாண சபையை கலைக்க தீர்மானித்துள்ளதாக அரசின் மிக முக்கிய பிரமுகர் ஒருவர் எமது இணையத்தளத்திற்கு சுட்டிக்காட்டினார்.

முகா அரசிலிருந்து வேட்பு மனு தாக்கலின் பின்னர் வெளியேறலாம் என தெரியவரும் நிலையில் கிழக்கு மாகாண சபை கலைக்கப்படுவது என்பதும் பெரும்பாலும் அடுத்த வாரமளவில் இடம்பெறலாம் என்றும் அரச தரப்பு தகவல்களிலிருந்து நம்பகரமாக தெரியவருகின்றது.

இது இவ்வாறிருக்க ,முகா அரசிலிருந்து வெளியேறும் தகவல் ஊர்ஜிதமாகியுள்ளதை அடுத்து கிழக்கில் உள்ள கட்சியின் போராளிகளும் முஸ்லிம்களும் பொத்துவில் தொடக்கம் பெரியநீலாவனை வரை பாரிய ஊர்வலம் ஒன்றை நடாத்த திட்டமிட்டு வருவதாகவும் எமது இணையத்தள கிழக்கு செய்தியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

முஸ்லிம்களின் தீர்மானத்தை முன்னிறுத்தி அரசிலிருந்து வெளியேறும் முகா எம்பிக்களை வரவழைத்து இந்த ஊர்வலத்தை நடாத்தவும் திட்டமிடட்பட்டு வருவதாகவும் எமது செய்தியாளர்கள் மேலும் தெரிவித்தனர்.

இவ்வாறான நிலையில் அரசிலிருந்து முகா வெளியேறும் பட்சத்தில் மேற்சொன்ன மூன்று மாகாண சபை உறுப்பினர்களும் பெரும் திரிசங்கு நிலைக்குள் தள்ளப்படுவார்கள் என அறியவருகின்றது.

இது ஒரு புறம் இருக்கத்தக்கதாக – கட்சிக்குத் தெரியாமல் ஐ.தே.கவுடன் இணைவது குறித்து ரகசிய பேரப்பேச்சில் ஈடுபட்டு வந்த கட்சி மாறி மாகாண சபை உறுப்பினராகிய முகா புதியவர் – இந்த முகாவின் அதிரடி மாற்றத்தினால் பெரும் ஏமாற்றத்தையும் நெருக்கடியையும் சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமைச்சர் அதாவுல்லா – மகிந்தவுக்கு பகிரங்கமாக ஆதரவளித்து வருவதால் அமைச்சரின் சொந்த ஊரில் அவருக்கு பலத்த எதிர்ப்பு இத்தேர்தலில் கிளம்பியுள்ளது. இதனைச் சாட்டாகக் கொண்டு இலகுவான முறையில் எம்பியாகிக் கொள்ளும் வகையில் குறித்த முகா புதிய உறுப்பினர் தலைவர் ஹக்கீமின் விசுவாசியாக காட்டிக் கொண்டு ஐதேகவுடன் பேச்சு நடத்தி வந்தமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

இதே வேளை அரசை விட்டு முகா வெளியேறினாலும் அரசுடன் ஒட்டிக்கொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட அமைச்சர் பஷீர் சேகுதாவுத் முகா வின் ஏனைய எம்பிக்களுன் இணைந்து அரசை விட்டு வெளியேறும் முடிவுக்கு மனப்பூர்வமாக வந்துள்ளதாக முகா பிரமுகர் ஒருவர் குறிப்பிட்டுக் காட்டினார்.

Sri Lanka Muslim

0 comments:

Post a Comment