மண்டபம் நிறைந்து காணப்பட்ட மண்டபத்தில் முஸ்லிம்களுடன் மைத்திரி
எதிர்க்கட்சி பொதுவேற்பாளர் மைத்திரிபால சிறிசேனாவுக்கு முதன் முதலாக முஸ்லீம் கட்சி என்ற வகையில் நல்லாட்சிக்கான தேசிய முன்ணனி இன்று தலைநகரில் கொழும்பு மாநகர புதிய நகர மண்டபத்தில் முஸ்லீம் மக்கள் சந்திப்பொன்றை நடாத்தியது. மண்டபம் நிறைந்து முஸ்லிம்கள் காணப்பட்டனர்.
இந் நிகழ்வு நல்லாட்சி கட்சியின் தலைவர் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது. இங்கு எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, மாதுலுவாவே சோபித்த தேரர், முன்னாள் அமைச்சர் ராஜித்த சோனாரத்தின, பாரளுமன்ற உறுப்பிணர் ஹூனைஸ் பாருக், மாகாணசபை உறுப்பினர் பைருஸ் ஹாஜி, முஜிபுரஹ்மான், மனோ கனேசன், ஜனாதிபதி சட்டத்தரணி சுகையிர், எம்.டி.எஸ் குணவர்ததன ஆகியோறும் பிரசன்னமாகியிருந்தனர்.
இங்கு உரையாற்றிய ராஜித்த சோனாரத்தின – அளுத்கமவுக்கு காரணமான பொதுபலசேனா இப்பொழுது எங்கு இருக்கின்றது. அதனை இயக்கியவர்கள் யார் யாரின் நிகழ்ச்சி நிரளுக்கு அது இயங்கியது. என்றும் அதற்கு பின்னாள் உள்ளவர்கள் யாரெண்றும் இப்ப நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள், தர்காநகர் அளுத்கமவுக்கு தாக்குதலில் நான் குரல் கொடுத்ததால் பொதுபலசேனா என்னை எப்படியெல்லாம் சேறுபூசியது.
0 comments:
Post a Comment