கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

ஒரு ஜனாதிபதி வேட்பாளராக மைத்ரிபாலவின் முன்மாதிரி நடவடிக்கைகள்!

ஜனாதிபதி வேட்பாளர் என்பதை விட தான் ஒரு சாதாரண குடிமகன் எனும எண்ணப்போக்கை தொடர்ந்து வெளிப்படுத்தி வருவதுடன் மக்களின் நண்பனாக அனைத்தையும் வெளிப்படையாக பேசி வரும் பொது வேட்பாளர் மைத்ரிபால சிறிசேன நேற்றைய தினம் தனது வேட்பு மனுத்தாக்கலின் போது முழுமையான சொத்து விபரத்தை வெளியிட்டதோடு பொது மக்களில் யார் வேண்டுமானாலும் அதன் பிரதியைப் பெற்று பார்வையிடலாம் எனவும் அறிவித்துள்ளார்.

அத்தோடு நின்றுவிடாமல் தனது வருடாந்த எரிபொருள் செலவுக்காக ஒதுக்கப்பட்டிருந்த தொகையில் எஞ்சியிருந்த 1 மில்லியன் ரூபாயை மீண்டும் அரசிடமே திருப்பிக் கொடுத்துள்ளதோடு ஏற்கனவே பொருந்தியபடி கட் அவுட்கள், பதாதைகளுக்காக வழங்கப்பட்ட பணத்தைக் கொண்டு மக்கள் வங்கியில் பிரத்யேகமான வங்கிக் கணக்கொன்றையும் ஆரம்பித்து சிறுநீரக சிகிச்சைக்கான நிதியத்தையும் செயற்படுத்த ஆரம்பித்துள்ளார்.

தேர்தலுக்கு முன்பாகவே இவரது குறித்த செயற்பாடுகள் மூத்த அரசியல்வாதிகளையும் பெரிதும் கவர்ந்திருப்பதோடு பலரும் அவருக்கு பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளதாகவும், இருப்பினும் தமது இயல்பான நடவடிக்கைகளை அவர் தொடர்வதாகவும் தேர்தல் பிரச்சாரக் குழுவைச் சேர்ந்த ஏற்பாட்டாளர் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

sonakar

0 comments:

Post a Comment