கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

கஹட்டோவிடாவில் டெங்கு அதிகாரிகளால் சுற்றுப்புற சூழல் மேற்பார்வை

இன்று கஹட்டோவிட கிராமத்தில் டெங்கு நோய்த் தடுப்பு அதிகாரிகளால் சுற்றுப்புற சூழல் டெங்கு நோயைப் பரப்பும் விதமாக உள்ளதா என்று மேற்பார்வை செய்யப்பட்ன. சுமார் 50 பேர்களடங்கிய இக்குழுவினர் பல சிறிய குழுக்களாகப் பிரிந்து ஒவ்வொரு வீடு விடாககச் சென்று வீட்டுச் சூழலைப் பரிசோதித்துள்ளனர். பல வீடுகளின் சூழல் சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலாகவும் டெங்கு நுளம்புகள் பரவக் கூடிய பொலிதீன் பைகள் மற்றும் யோகட் பாத்திரங்கள் உள்ளனவாகவும் காணப்பட்டதாக தகவல்கள் கிடைக்கின்றன. இவ்வாறான வீடுகளிற்கு வீட்டுச் சூழலை சுத்தமாக வைப்பதற்கான அறிவுறைகளை வழங்கியதுடன் அடுத்த முறை பரிசோதனையின் போது இவ்வாறான தவறை செய்தால் சட்ட நடவடிக்கை  எடுப்பதாகவும் வந்த அதிகாரிகள் கூறியுள்ளனர்.

எது எப்படியிருப்பினும் முஸ்லிம் ஊர் என்ற வகையில் சுத்தமாக இருப்பது எமது மார்க்கக் கடமைகளில் ஒன்றாகும். ஏனெனில் சுத்தம் ஈமானின் பாதியாகும் என்பது ஹதீஸாகும். எனவே சுத்தமில்லாமலிருப்பது ஈமானின் அரைவாசியை இழந்த நிலைக்குச் சமனாகும். மார்க்க விடயத்தில் அதிக அக்கறை செலுத்தும் எமதூரின் பள்ளி வாசல்கள் இதுவிடயத்திலும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக தமது உரைகளை அமைத்துக் கொள்வது காலத்தின் தேவையாகும்.

0 comments:

Post a Comment