ஜனாஸா அறிவித்தல்
அன்னாரின் ஜனாஸா இன்று (2010.10.30) சனிக்கிழமை இரவு 10.00 மணியளவில் முஹியித்தீன் ஜூம்ஆப்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அல்லாஹ் அன்னாரின் பாவங்களை மன்னித்து பர்ஸஹவுடைய வாழ்வை சிறந்ததாக ஆக்கி வைப்பானாக!
Contact: kahatow@gmail.com
சென்னை : காஷ்மீர் விவகாரத்தில் அருந்ததி ராய் பேசியதில் எந்தக் குற்றமும் இல்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காஷ்மீர் விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை தெரிவித்த உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர் அருந்ததி ராயின் குரலை நெறிக்க முயற்சி செய்யும் மத்திய அரசின் செயல்பாட்டை வன்மையாக கண்டிக்கிறோம்.பாஜகவை திருப்திப்படுத்துவதற்காக காங்கிரஸ் அரசு இப்படி செயல்படுவது வெட்கக் கேடு. காஷ்மீர் மக்கள் விடுதலையை விரும்புகின்றனர் என்பது எல்லாரும் அறிந்த உண்மை.அங்கு 2 இஸ்லாமிய பெண்கள் கற்பழிக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு பிறகுதான் அவர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
காஷ்மீர் விவகாரத்தில் அருந்ததி ராய் பேசியதில் குற்றம் எதுவுமில்லை. யாரையும் தூண்டுவது போலவும் அவர் பேசவில்லை. காஷ்மீர் மக்கள் மற்றும் ஜனநாயக நாட்டமுள்ளவர்களின் எண்ணத்தின் எதிரொலிதான் அவரது கருத்தில் பிரதிபலிக்கிறது.காஷ்மீர் விவகாரத்தில் இருந்த மெளனத்தை உடைத்த அருந்ததி ராயை நான் பாராட்டுகிறேன். அவருக்கு இந்த விவகாரத்தில் முழு ஆதரவு அளிக்கிறோம்.ஜனநாயக அமைப்புகள், தலைவர்கள், அவருக்கு உறுதுணையாக இருந்து பேச்சுரிமையை காப்பாற்ற முன்வர வேண்டும் என்று கூறியுள்ளார்.

நாட்டின் சகல அரசாங்க ஆஸ்பத்திரிக ளிலும் வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவுகளை 24 மணி நேரமும் திறந்து சேவை வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை வழங்கியுள்ளார்.
சுகாதார அமைச்சின் செயலாளருக்கு இந்தப் பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.
வாரத்தின் ஏழு நாட்களும் வெளிநோயா ளர் பிரிவுகளில் 24 மணி நேர சேவை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
வெளிநோயாளர் பிரிவுகளுக்கு தினந்தோறும் பெருமளவு மக்கள் சிகிச்சைக்காக வருகை தருகின்ற நிலையில் ஆஸ்பத்திரிகளில் நிலவும் நெருக்கடிகளைத் தவிர்ப்பதற்கு மேற்படி நடவடிக்கை உதவுமென குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி; இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தெளிவுபடுத்தி விரைவாக இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறும் பணிப்புரை விடுத்துள்ளார்.
வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சைக்காக வரும் நோயாளிகளு க்குத் தேவையான சிகிச்சைகள், பரிசோத னைகள் அவர்களுக்கான ஆலோசனைகளை வழங்குவதில் கூடிய கவனம் செலுத்த வேண்டுமென குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி, தொற்றுநோய் உட்பட சகல நோய்களுக்கும் உடனடி சிகிச்சைகளை வழங்குவதற்கும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டு ள்ளார். இது தொடர்பில் சகல ஆஸ்பத்திரிகளின் அதிகாரிகளுக்கும் தெளிவுபடுத்த வேண்டுமெனவும் பணித்துள்ளார்.
நாட்டின் சுகாதாரத்துறை மேம்பாட்டிற் கான முக்கிய நடவடிக்கையாக இத்திட்டம் அமைவதுடன் பல்வேறு நோய்களினால் அவஸ்தைப்படும் நோயாளிகளுக்கு இது பெரும் வரப்பிரசாதமாகவும் அமையும்.
அத்துடன் நாட்டு மக்களின் ஆரோக்கியமான வாழ்க்கையை இதன் மூலம் உறுதிப்படுத்தவும் முடியும்.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த சுகாதார, அமைச்சின் செயலாளர் 24 மணித்தியாலமும் வெளி நோயாளர் பிரிவை திறந்து வைத்து சேவைகளை வழங்கும் யோசனை ஏற்கனவே இருந்ததாக குறிப்பிட்டார்.
ஜனாதிபதியின் பணிப்புரை மற்றும் வழிகாட்டல்களுக்கமைய இத்திட்டத்தை செயற்படுத்துவதுடன் ஆரம்பத்தில் முக்கிய பெரியாஸ்பத்திரிகளில் இதனை நடைமுறைப்படுத்தவும் அடுத்த கட்டமாக அதனை சகல ஆஸ்பத்திரிகளுக்கும் விரிவுபடுத்த உத்தேசித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் டொக்டர்கள், மருந்தக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட சகல தரப்பினருடனும் கலந்துரையாடி விரைவில் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன வெளிநாட்டு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளதால் அவர் நாடு திரும்பியதும் இந்நடவடிக்கைகள் முனைப்புப் பெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது. (ஸ)
தென்னாபிரிக்காவில் நடந்து முடிந்த உலகக் கோப்பைக் காற்பந்தாட்டப் போட்டிகளில், ஆர்ஜென்டினா அணி தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, எழுந்த சர்ச்சசைகளினால், அந்த அணியின் பயிற்சியாளராக இருந்த முன்னாள் காற்பந்தாட்டச் சாம்பியன் மாராடோனா நீக்கப்பட்டிருந்தார்.
இவ்வாறு அவர் நீக்கபட்டதற்கு அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியும் எதிர்ப்பும் கிளம்பியிருந்ததது குறிப்பிடத்தக்கது.
ஈரானுக்கு சில நாட்கள் சென்றிருந்த டோனி பிளேயர் மனைவியின் தங்கை இஸ்லாம் மாதத்தில் கொண்ட ஈடுபாடுகளின் காரணமாக மதம் மாறி விட்டார் எனத் தெரிய வந்துள்ளது. ஊடகவியலாளராகவும் ஒளிபரப்பாளராகவும் பணியாற்றி வரும் 43 வயதான லாரன பூத் செர்ரி பிளேயரின் தங்கை.
இவர் தற்போது வெளியில் செல்லும் போது பர்தா அணியாமல் செலவதில்லையாம். தினமும் 5 முறை மறக்காமல் இறை வழிபாடும் செய்து வருகிறாராம்.
தற்போது ஈரானில் இருக்கும் அவர் 6 வாரங்களுக்கு முன்னர் கோம் நகரில் உள்ள பாத்திமா அல்-மாஸுமெஹ் என்ற புண்ணிய தலத்திற்கு சென்றிருந்த போது அங்கு சிறிது நேரம் உட்கார்ந்திருக்கையில் ஏதோ ஒரு தெய்வீக ஒளி தன் மீது பரவியதை உணர்ந்தாராம்.
அதன் பின்னரே இந்த முடிவுக்கு வந்துள்ளதாக பிரிட்டன் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். தற்போது இவர் பன்றிக்கறி சாப்பிடுவதில்லையாம். 45 நாட்களாக மது பானங்கள் ஏதும் அருந்தவில்லையாம்.
வாழ்க்கையிலேயே இதுவரை அப்படி இருந்ததில்லை என்றும் கூறுகிறார். தினமும் குரான் படிக்கிறாராம். பிரிட்டன் வந்த உடன் முதல் வேலை மதம் மாறுவது தான் என்கிறார் லாரன பூத்.
லண்டனில் இருக்கும் பிரபல நட்சத்திர ஹோட்டலில் ஒன்று " தி லேண்ட்மார்க் ". இந்த ஹோட்டலில் தனது பணியாளர் ஒருவருடன் கடந்த பெப்ரவரி மாதம் வந்து தங்கினார் சவுதி இளவரசர் சவுத் அப்துல்ஆசிஸ் பின் நசிர் அல் சவுத். சவூதி மன்னரின் கொள்ளுப் பேரன் இவர்.
சில நாட்களுக்கு முன்னர் இளவரசர் ஹோட்டல் லிப்ட்டில் தன்னுடன் வந்த பணியாளரை அடித்த காட்சிகள் சி.சி.டி.வி கேமராவில் எடுக்கப்பட்ட படங்கள் மூலம் வெளியிடப்பட்டு இவர் மீது வழக்கு தொடரப்பட்டது. விசாரணையில் உடன் வந்த பணியாளரும் இவரும் ஓரினச் சேர்க்கையாளர்கள் என்பதும் பாலியல் ரீதியான விடயங்களுக்காகவே அவரை அடித்துக் கொன்றுள்ளர்ர் எனபதும் தெரிய வந்தது.
கடந்த வாரம் இந்த வழக்கில் திடீர் திருப்பம் ஒன்று ஏற்பட்டது. அடித்துக் கொல்லப்பட்ட பணியாளரின் கனனத்தில் கடித்த தடங்கள் இருப்பதாகவும் , இது வரையிலும் அது சரியாக கவனிக்கப்படவில்லை என்பதும் இன்று நீதிமன்றத்தில் கூறப்பட்டது. இதையடுத்து மருத்துவ நிபுணர்களின் உதவியை நீதிமன்றம் நாடிய போது மூர்க்கத்தனமான பாலியல் உறவில் ஈடுபட்டிருந்தால் இது போன்று நடந்திருக்கலாம் என Dr.மார்ட்டின் நீதிமன்றத்தில் கூறினார்.
ஆனால் இந்த குற்றச்சாட்டுக்களை இளவரசர் மறுத்து வந்தார். இன்று மீண்டும் வழக்கு விசாரிக்கப்பட்ட போது காதலர் தினத்தன்று இளவரசர் பணியாளருடன் கடற்கரையில் உறவில் இருந்தது அம்பலமானது. இன்று அண்ணளவாக ஒன்றரை மணி நேரம் நடந்த விசாரணைக்குப் பிறகு இளவரசர் மீதான அனைத்து குற்றச்சாட்டுக்களும் உண்மையே என்பதை நீதிபதி அறிவித்தார்.
இந்த வழக்கில் சவுதி இளவரசருக்கு நீண்ட காலத்திற்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் இதன் மூலம் இளவரசரின் சொகுசு வாழக்கை முடிவுக்கு வருமென்றும் நம்பப்படுகிறது. சவுதி இளவரசர் மீண்டும் சொந்த நாட்டிற்கு திரும்பும் பட்சத்தில் அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கொலை செய்த குற்றத்திற்காக அல்ல.
ஓரினச் சேர்க்கை இஸ்லாமிய விதிமுறைகளின் படி தவறாகக் கருதப்படுவதால் நாடு திரும்பினால் மரண தண்டனை கிடைப்பது அநேகமாக நிச்சயமாகி விட்டது. சட்டத்தின் பிடியில் இருந்து எவ்வளவு பெரிய ஆளானாலும் தப்ப முடியாது என்பதையே சவுதி இளவரசர் வழக்கு காட்டுவதாக நிபுணர்கள் கருத்துக் கூறுகின்றனர்.
அயோத்தியில் பாபரி பள்ளிவாசலை தகர்க்கப்பட்ட இடத்திலேயே மஸ்ஜித் கட்டித்தருவதைத் தவிர வேறு எந்த சமரசத் தீர்வையும் ஏற்க மாட்டோம் என்று டெல்லி ஜும்ஆ மஸ்ஜித் தலைமை இமாம் சையத் அஹமத் புஹாரி தெரிவித்திருக்கிறார். டெல்லி மற்றும் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த நாற்பதுக்கும் மேற்பட்ட மார்க்க அறிஞர்கள் டெல்லியில் கூடி அலகாபாத் உயர்நீதிமன் றத் தீர்ப்பு குறித்து விரிவாக விவாதித்தனர்.
அலகாபாத் உயர் நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பை முழுதாக நிராகரிப்பதாகவும் மஸ்ஜித் கட்டுவது தொடர்பாக எந்தவித சமரசத் தீர்வையும் ஏற்பதற்கு தாங்கள் தயாராக இல்லை என்றும் அவர்கள் தீர்மானம் நிறைவேற்றினர்.
"அலகாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்பை நாங்கள் நிராகரிக் கிறோம்; இந்தத் தீர்ப்பு தொடர் பாகத் தன்னுடைய நிலை என்ன என்பதை மத்திய அரசும், காங்கிரஸ் கட்சியும் தெளிவாக விளக்க வேண்டும் என்று எதிர் பார்க்கிறோம்.
இந்த விவகாரம் தொடர்பாகப் பிரதமர் மன்மோகன் சிங்குக்குக் கடிதம் எழுதி அவரைச் சந்திக்க நேரம் ஒதுக்குமாறு கேட்டிருக்கிறோம்.
மஸ்ஜிதிற்கு எதிரான அத்தனை நடவடிக்கைகளுக்கும் காங்கிரஸ் கட்சிதான் நேரடியான காரணம் என்று நாங்கள் கருதுகிறோம். பாபரி பள்ளிவாசல் பிரச்னை தொடங்கியது முதல் அலகாபாத் உயர் நீதிமன்றம் இப்போது அளித்துள்ள தீர்ப்புவரை அனைத் துமே காங்கிரஸ் கட்சியின் நடவடிக்கைகளால் அமைந்தவை தான்" என்றும் அவர் கடுமையாக சாடினார்.
முஸ்லிம்களுக்கு உற்ற நண்பனைப் போல பேசியே ஏமாற்றிக் கொண்டு, வகுப்புவாத சக்திகளுக் குத்தான் காங்கிரஸ் துணைபோய்க் கொண்டிருக்கிறது.
முஸ்லிம்களில் சிலர் சமரசத் தீர்வு காண்பதாகக் கூறிக்கொண்டு கொல்லைப்புற வழியாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதை நாங்கள் விரும்பவும் இல்லை, ஆதரிக்கவும் இல்லை. எந்த மாதிரி யான சமரசத் தீர்வை அவர் கள் காணப் போகிறார்கள்? இடிக்கப் பட்ட இடத்திலேயே மஸ்ஜிதை அமைப்பதைத் தவிர வேறு எதையும் முஸ்லிம்களால் ஏற்க முடியாது. இந்த விஷயத்தில் முஸ்லிம் சமூகத்தை ஆதரிக்கும் எவருடைய ஆதரவையும் நாங்கள் வரவேற்கிறோம். வழக்கு தொடர் பாக உச்சநீதி மன்றத்தில் மனுத் தாக்கல் செய்வோம் என்றார்.
இணையத்தளம் மூலம் பொலிஸ் முறைப்பாடுகள் பொலிஸில் முறைப்பாடு செய்ய விரும்பும் பொதுமக்கள் இணையத்தளம் மூலம் முறைப்பாடுகளை செய்வதற்கான திட்டமொன்றை பொலிஸ் திணைக்களம் அறிமுகப்படுத்தவுள்ளது.
www.police.lk என்ற இணையத்தளம் மூலம் ஒக்டோபர் 18 ஆம் திகதியிலிருந்து இம்முறைப்பாடுகளை மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இணையத்தளத்தில் telligp@police.lk என்ற மின்னஞ்சலை தெரிவுசெய்து பொலிஸ் மா அதிபருக்கு முறைப்பாடுகளை தெரிவிக்க முடியும்.
பொதுமக்கள் தமது பிரதேசங்களில் உள்ள பிரச்சினைகள் குறித்தும் பொலிஸ் நிலையங்களில் விசாரணைகளில் ஏற்படும் தாமதம் குறித்தும் அறிவிக்கலாம் என பொலிஸ்மா அதிபர் மஹிந்த பாலசூரிய தெரிவித்துள்ளார்.
இம்முறைப்பாடுகள் தொடர்பாக இரு வாரங்களுக்குள் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர்கூறியுள்ளார்.
கஹட்டோவிட அல்பத்ரியா மஹாவித்தியாலயத்திற்கு 10கணினிகள் கொழும்பைச் சோ்ந்த ஒரு தனவந்தரால் அன்பளிப்புச் செய்யப்பட்டது. ஆசிரியர்கள் சிலரின் அயராத முயற்சியின் விளைவாக இக்கணினிகளி் பாடசாலைக்குக் கிடைக்கப் பெற்றுள்ளன. தகவல் தொழிநுட்பம் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் ஒரு பாடமாக அங்கீகரி்க்கப்பட்டதை அடுத்து பல பாடசாலைகளில் இப்பாடம் போதிக்கப்படுகிறது. எமது பாடசாலையிலும் தற்போது தகவல் தொழிநுட்பத்தைப் போதிக்கப் பற்றாக் குறையாக இருந்த கணினிப் பிரச்சினை ஓரளவு தீர்ந்துள்ளது எனலாம். பாலிகாவித்தியாலயத்திற்கும் கணினிகளைப் பெற்றுக்கொள்வதற்காக குறிப்பிட்ட தனவந்தருடன் பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. எது எப்படியிருப்பினும் மாணவர்கள் தமக்குக் கிடைக்கின்ற இவ்வாறான வசதிகளை உரிய முறையில் பயன்படுத்தி தமது கற்றல் நடவடிக்கைகளைச் சிறப்பாக செய்வது கட்டாயமானது.முப்பது வருடங்களின் பின்னர் யாழ்ப்பாணத்தில் மீளக்குடியமர்வதற்கென 180 சிங்களக் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 500 பேர் வருகை தந்துள்ளனர். நகரில் உள்ள ரயில் நிலையத்திலும் வேறுபல இடங்களிலும் தற்காலிக மாகத் தங்கி உள்ள இவர்கள் தம்மை நிரந்தர இடம் ஒன்றில் குடியமர்த்துமாறு அரச அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். நிரந்தரமாகக் குடியேறாமல் திரும்பப் போவதில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
1980ஆம் ஆண்டுக்கு முன்னர் இந்தக் குடும்பத்தினர் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த போதும், அவர்களுக்கான நிரந்தர இருப்பிடங்கள் எவையும் இருக்கவில்லை. வாடகை வீடுகளிலேயே தங்கி இருந்துள்ளனர். இவர்களை மீளக்குடியமர்த்துவது தொடர்பில் தம்மிடம் உடனடித் திட்டங்கள் எவையும் இல்லை என்று யாழ். அரச அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்தார். இவர்களது வருகை குறித்துத் தமக்கு எதுவும் தெரியாது என வடமாகாண ஆளுநரும் தெரிவித்துள்ளார்.
இந்தக் குடும்பங்களைச் சேர்ந்த உறுப்பினர்களில் பலருக்கு தமிழர்களுடன் திருமண பந்தம் இருக்கின்றது. அத்துடன் அவர்களில் பலருக்கு நன்றாகத் தமிழும் பேசத் தெரிந்திருக்கிறது. அனுராத புரம், மிகிந்தலை, மாத்தளை, குருநாகல் ஆகிய இடங்களில் வாழ்ந்து வந்த இவர்கள், போர் முடிந்து நிலைமை ஓரளவு சீராகி உள்ளதால் மீளக்குடியமரும் நோக்கத்தோடு யாழ்ப்பாணம் வந்துள்ளனர்.
இவர்களில் 54 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் யாழ். ரயில் நிலையத்திலும் ஏனையவர்கள் உறவினர்களின் வீடுகள் மற்றும் விடுதிகளில் தங்கியிருக்கின்றனர்.யாழ். ரயில் நிலையத்தில் தங்கியிருக்கும் சிங்களக் குடும்பங்களுக்கு பொலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
நேற்று யாழ். அரச அதிபரைச் சந்தித்த இவர்கள், தம்மை யாழ்ப்பாணத்தில் மீளக்குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்படி கேட்டு ஒரு மனுவைக் கொடுத்தனர். தாம் யாழ்ப்பாணத்தில் குடியேறுவதற்கு வசதியாகத் தமக்கு அரச காணிகளைத் தந்துதவுமாறும் அவர்கள் தமது மனுவில் கோரியுள்ளனர்.
""1980ஆம் ஆண்டுக்கு முன்பு யாழ்ப்பாணத்தில் தமிழ் சிங்கள் மக்கள் சமாதானமாகவும் ஒற்றுமையாகவும் வாழ்ந்தனர். இப்போதும் அவ்வாறே வாழ முடியும் என நாங்கள் நினைக்கிறோம். சிறிமாவோவின் ஆட்சிக் காலத்தில் எமக்கு திருநகர், திருநெல்வேலி, நாவற்குழி ஆகிய இடங்களில் அரச காணிகள் ஒதுக்கப்பட்டன. ஆனால், அவற்றில் நாங்கள் குடியமர்ந்திருக்கவில்லை. காணிகள் எமக்குத் தரப்பட்டதற்கான கடிதங்கள் எம்மிடம் உள்ளன. இப்போது அந்தக் காணிகளை நாம் கேட்கவில்ல்ல. எனினும் வேறு அரச காணிகளை எமக்கு ஒதுக்கித் தரவேண்டும்.'' என அந்த மனுவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தம்மை மீளக்குடியமர்த்துவது தொடர்பில் தீர்க்கமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் வரைக்கும் யாழ். ரயில் நிலையத்தைவிட்டு வெளியேறப்போவதில்லை என அவர்கள் உதயனுக்குத் தெரிவித்தனர்.இவர்கள் யாழ்ப்பாணம் வந்திருப்பது குறித்து தனக்கு எதுவும் தெரியாது எனக் கூறிய வடமாகாண ஆளுநர் சந்திரசிறி, சிங்கள மக்கள் வடக்கில் மீளக்குடியமர்வது பற்றித் தனக்கு எதுவும் அறிவிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
உதயன்
பாபரி மசூதி இடிக்கப்பட்ட பின்னர் இந்தியாவில் கொந்தளிப்பு ஏற்பட்டது. குறிப்பாக பத்திரிகைகள் நெருப்புச் சொல்லெடுத்து ஆவேசமான தலையங்கங்களை எழுதின. 'அவற்றை இப்போது நினைவூட்டுகின்றொம். இவை 1992 டிசம்பர் 6, மற்றும் 7 ஆம் தேதிகளில் வெளிவந்தவை. 
|
|
| இணைந்துகொள்ள Kahatowita Watch பக்கத்தை LIKE செய்து இணைந்து கொள்ளலாம் அல்லது உங்களுடைய ஈமையில் முகவரியை இங்கே பதிந்துகொள்ளலாம். |
| Email: |
| Visit this group |