கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

புதிய சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகமாக சரத் பொன்சேகாவின் பரம எதிரியான பராக்கிரம பன்னிப்பிட்டிய…?

மேஜர் ஜெனரல் பராக்கிரம பன்னிப்பிட்டியவை சிறைச்சாலைகள் ஆணையாளராக நியமிப்பது குறித்து ஜனாதிபதி ஆலோசி;த்து வருவதாக ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.


கிழக்கு மாகாணத்தை விடுவிக்கும் நடவடிக்கைகளுக்குத் தலைமை தாங்கிய மேஜர் ஜெனரல் பராக்கிரம பன்னிப்பிட்டிய, முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்காவின் பரம வைரியுமாவார்.

அதன் காரணமாக கிழக்கு மாகாணம் விடுவிக்கப்பட்டு குறுகிய காலத்துக்குள்ளாகவே பல்வேறு குற்றச்சாட்டுகளின் பேரில் பொன்சேக்கா அவரை இராணுவ நீதிமன்றில் நிறுத்தி தண்டித்திருந்தார். இராணுவ தர வரிசையில் அப்போதைய நிலையில் பொன்சேக்காவுக்கு அடுத்த ஸ்தானத்தில் இருந்தவர் பராக்கிரம பன்னிப்பிட்டிய என்பது குறிப்பிடத்தக்கது.

பராக்கிரமவை சிறையிலடைத்தன் மூலம் தனக்குப் பின் தனக்கு மிகவும் நம்பிக்கையான முன்னாள் வட மாகாண கட்டளைத் தளபதியும், தற்போதைய வட மாகாண ஆளுனருமான ஜீ.ஏ. சந்திரசிறியை அடுத்த இராணுவத் தளபதியாக்கும் திட்டத்துடன் பொன்சேக்கா செயல்பட்டிருந்தார்.

அதன் காரணமாக புலிகளுடன் தொடர்பு, சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்தமை, சட்ட விரோதமாக புதையல் தோண்டியமை என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளின் பேரில் மேஜர் ஜெனரல் பராக்கிரம பன்னிப்பிட்டிய தொடர்ச்சியாக தண்டனைக்குள்ளாக்கப்பட்டிருந்தார்.

அதன் காரணமாக சரத் பொன்சேக்காவுக்கு அடுத்ததாக இராணுவத் தளபதியை நியமிக்கும் போது மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறிக்கு ஆளுனர் பதவி வழங்கப்பட்டு, தற்போதைய இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.

பொன்சேக்காவினால் அநியாயமாகத் தண்டிக்கப்படாதிருந்தால் ஒரு வேளை பராக்கிரம பன்னிப்பிட்டிய இன்றைய இராணுவத் தளபதியாகக் கூட நியமிக்கப்பட்டிருக்கலாம். ஏனெனில் பொன்சேக்கா இராணுவத் தளபதி பதவியிலிருந்து அகற்றப்பட்ட காலகட்டத்துக்குச் சமாந்தரமாக மேஜர் ஜெனரல் பராக்கிரம பன்னிப்பிட்டிய மீது சுமத்தப்பட்டிருந்த அனைத்துக் குற்றச்சாட்டுகளிலும் அவரை விடுவித்த நீதிமன்றம், அவர் நிரபராதி எனத் தீர்ப்பளித்திருந்தது.

அதே வேளை பொன்சேக்கா இராணுவ சிறையிலடைக்கப்பட்ட வேளை அதற்கு ஆதரவாக முதன் முதலாக குரல் கொடுத்தவர் பராக்கிரம பன்னிப்பிட்டியவின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான பின்புலத்தில் மேஜர் ஜெனரல் பராக்கிரம பன்னிப்பிட்டியவை புதிய சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகமாக நியமிக்க ஜனாதிபதி உத்தேசித்திருப்பதானது, சரத் பொன்சேக்காவை மன உளைச்சலுக்குள்ளாக்கி மரணத்தை நோக்கித் தள்ளும் ஒரு உத்தியாகவும் இருக்கலாம் என்று கூறப்படுகின்றது.

ஏனெனில் தான் அநியாயமாகத் தண்டிக்கப்பட்டவன் என்ற வகையில் சரத் பொன்சேக்கா விடயத்தில் பராக்கிரம பன்னிப்பிட்டிய கடுமையாக நடந்து கொள்வதுடன், தன்னால் தண்டிக்கப்பட்ட ஒருவரின் கண்காணிப்பின் கீழ் அவரது உத்தரவுகளுக்கு அடிபணிந்து செயற்பட நேருகின்றமையானது சரத் பொன்சேக்காவைப் பொறுத்தவரை பெரும் மன உளைச்சலாகவே அமையும்.

அந்த வகையில் சரத் பொன்சேக்காவை மன உளைச்சலுக்குள்ளாக்கி மரணமடையச் செய்து அதன் மூலம் அந்த மரணத்தை இயற்கை மரணமாகக் காட்டும் முயற்சியில் அரசாங்கம் இறங்கக் கூடும் என்பதாக கடந்த வாரத்தில் அனோமா பொன்சேக்கா அச்சம் தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.

0 comments:

Post a Comment