பத்து வருடங்களிற்கு மேலாக சேவையாற்றிய ஆசிரியர்கள் இடமாற்றம்
அல்பத்ரியா மகா வித்தியாலயத்தில் பத்து ஆண்டுகளாக பணிபுரிந்த பத்திற்குட்பட்ட ஆசிரிய ஆசிரியைகள் வேறு பாடசாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. கணிதம் உள்ளிட்ட ஏனைய பாடங்களில் அனுபவம் வாய்ந்தவர்களே இவ்வாறு இடமாற்றம் செய்யப்படவிருப்பதாகாத் தெரிவிக்கப்படுகின்றது. பாடசாலையில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவும் இத்தருணத்தில் திடீரென்ற இவ்வாசிரிய இடமாற்றமானது எத்தகைய பாதிப்புக்களை ஏற்படுத்துமென்பதைப் பொருத்திருந்தே பார்க்க வேண்டும். என்றாலும் வரப்போகும் புதிய ஆசிரியர்கள் இக் குறைபாடுகளை நிவர்த்திசெய்வார்கள் என்றும் நம்பப்படுகின்றது.எவ்வாறாயினும் பாடசாலை நிர்வாகம் சமயோசிதமாகச் செயற்படும் போது மாற்றங்கள் நல்லதாக அமையலாம் என்பது கவனிக்கத்தக்கது. அவசியமற்ற வாதப்பிரதிவாதங்களையும் பரப்புரைகளையும் ஒருபுறமாய் வைத்துவிட்டு அனைவரும் ஒன்றினைந்து பாடசாலையின் கல்விமுன்னேற்றத்தைக் கருத்திற்கொண்டு கருமமாற்றுவதே காலத்தின் தேவையாகும்.
5 comments:
எமது சிந்தனையை இன்னும் விரிவுபடுத்தி, எமது சமுதாய கல்விக்கான வழியை பகிர்ந்து கொள்வோம்.
அரசியல்வாதிகள், பட்டதாரிகள், மார்க்க அறிஞர்கள், சிந்தனை செய்து செயற்படுவது வழக்கம். அதே போல, எமதூர் மக்கள் அனைவரும் இவ்விடயத்தில் ஈடு பட வேண்டுகிறேன்.
நன்றி
sheloo
அடுத்தவரின் கருத்தை திருடியது போதாதென்று
பெயரையும் திருட ஆரம்பித்துவிட்டார்கள் இந்த
ஏழரை(7 1/2)கள்.
சொந்தப்பெயரில் கமெண்ட் எழுத தைரியமற்றுப்போன
இவருக்கு புனைப்பெயரிலாவது எழுத வக்கில்லாமல்
போனதுதான் என்னவோ?
யாரும் என்னை தவறாக நினைக்க வேண்டாம் . நான் , என்னை பிரபலப்படுத்திக்கொள்ள இதை சொல்லவில்லை.
எனது பெயரில் தவறான கருத்துக்கள் வரக்கூடாது என்பதனாலேயே சொல்கிறேன்.
பாடசாலையில் புது மாற்றங்கள் புது முன்னேற்றங்களை கொண்டுவர வேண்டுமென்று பிரார்த்தனை செய்வோமாக. மேலும், தனிப்பட்டவர்கள் தங்கள் பிரச்சனைகளை இந்த தளத்தில் பரிமாறிக் கொள்வதை ' வலைப்பூ நிர்வாகிகள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பது என்னுடைய வேண்டுதல்.
புதிய மாற்றங்கள் நிகழ்வது சிறந்ததுதான். இவ்வளவு காலமாக கந்தூரி கொடுத்து சாப்பாட்டை வழங்கி வந்த தக்கியா கூட இம்முறை ஓ.எல் செமினார் வைத்துவிட்டார்கள். இப்படி காலம் கடந்தாவது ஞானம் பொறந்திருக்கிறது சிறந்த மாற்றம்தான்.
Post a Comment