கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

பர்தா அணிவதை அச்சுறுத்தலாக நினைப்பது தவறு " - செர்ரி பிளேயர்

இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிவதை அச்சுறுத்தலாக நினைப்பதும் அதற்கு தடை விதிப்பதும் தவறான செயல் என்ற தன் கருத்தை ஸ்பெயினிலிருந்து வெளியாகும் செய்தித்தாள் ஒன்றிடம் முன்னாள் பிரதமர் டோனி பிளேயரின் மனைவி செர்ரி பிளேயர் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொருவரும் எப்படி உடை அணிய வேண்டும் என்பதை அவர்களே தான் முடிவு செய்ய வேண்டும். அதில் பிறர் குறுக்கிடுவது மனித உரிமைகளை மீறிய செயல் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 சில நாட்களுக்கு முன்பு செர்ரி பிளேயரின் தங்கை இஸ்லாம் மதத்திற்கு மாறியது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியதால் அது குறித்த ஸ்பெயின் ஊடகத்தின் கேள்விக்கு எந்த மதத்தை பின்பற்ற வேண்டும் என்பது அவரவர் உரிமை எனவும் பதிலளித்துள்ளார்.

 பல ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் ஐரோப்பா முழுவதும் இருப்பதாகவும் அனைவரும் சகோதர உணர்வுடனே பழகி வருவதையும் குறிப்பிட்டுள்ள செர்ரி பிளேயர் அவரவர்களின் மத நெறிமுறைகளுக்கு ஏற்ப உடை அணிந்து கொள்வதை நாம் ஏன் அச்சுறுத்தலாக பார்க்க வேண்டும் எனவும் வினவியுள்ளார்.
 

0 comments:

Post a Comment