கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

'தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகளை விரைவில் விடுதலை செய்ய நடவடிக்கை' நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம்

தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகளை விரைவில் விடுதலை செய்வதற்குரிய நடவடிக்கை எடுக்கப்போவதாக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
நீதி அமைச்சில் இன்று திங்கட்கிழமை காலை கடமையை பெறுப்பேற்றுக்கொண்ட பின்னர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஊடகவியளாலர்கள் மத்தியில் கத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
"தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கும்படி நான் நீதியமைச்சராக கடமைகளை பொறுப்பேற்பதற்கு முன்னர் சட்ட மா அதிபர் மொஹான் பீரிஸிடம் தெரிவித்துள்ளேன்.
இவர்களின் விடுதலை தொடர்பில் பாதுகாப்பு செயலாளருடனும் நான் கலந்துரையாடவுள்ளேன்.
அத்துடன் வக்பு சபை, நல்லிணக்க சபை, நியாயாதிக்க சபை போன்றவற்றை திறம்பட செயற்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
இன்று முதல் நீதியமைச்சு சட்டத்தரணிகள் சங்கத்துடன் இணைந்து பணியற்றும்" என்றார்.
நீதியமைச்சராக ரவூப் ஹக்கீம் கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 8 பேருடன் சட்ட மா அதிபர் மொஹான் பீரிஸ், இலங்கை சட்டத்தரணிகள் சங்க தலைவர் சிப்லி அஸீஸ், நீதியமைச்சின் செயலாளர் சுஹத கே. கம்லத், முன்னாள் அமைச்சர்களான ஏ.ஆர்.எம்.மன்சூர், கே.என்.சொக்ஸி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மாகாண சபை உறுப்பினர்கள், அதியுயர் பீட உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் என பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது

0 comments:

Post a Comment