கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

கோத்தபாயவுக்கு நேரடிச் சவால் விட்ட முன்னாள் பிரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக்க

Prime Minister Ratnasiri Wickremanayakeபாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு நேரடியாகச் சவால் விடும் வகையில் இன்று கொழும்பில் முன்னாள் பிரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக்க நடந்து கொண்டுள்ளதாக எமது கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


சாதாரணமாக ஜனாதிபதியைத் தவிர வேறு எவரும் மீறத் துணியாத கோத்தபாய ராஜபக்ஷவின் வாகனத் தொடரணிப் பாதுகாப்பு ஏற்பாடுகளை அவர் மீறிச் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று காலை பாதுகாப்புச் செயலாளரின் பயணத்துக்காக கொழும்பு புல்லர்ஸ் பாதை மூடப்பட்டிருந்த வேளையில் அவ்வழியாக முன்னாள் பிரதமரும், தற்போதைய சிரேஷ்ட அமைச்சருமான ரட்னசிறி விக்கிரமநாயக்க வந்துள்ளார்.

பாதை மூடப்பட்டிருப்பதைக் கண்டு அவரே இறங்கி வந்து இராணுவத்தினரிடம் அது பற்றி விசாரித்துள்ளார்.

“சேர்.. செக்ரட்டரி வருகின்றார். அதுதான் பாதை மூடப்பட்டுள்ளது. அவர் போகும்வரை யாருக்கும் போக இடமளிக்க முடியாது சேர்..” என்று இராணுவத்தினர் பதிலிறுத்துள்ளனர்.

அதைக் கேட்டு வெகுண்ட அமைச்சர் விக்கிரமநாயக்க, “யோவ்.. நான் முன்னாள் பிரதமர்.. அவர் வெறும் செயலாளர். நான் இந்த வழியால் தான் போவேன்.. முடியுமாயின் சுடுங்கள் பார்க்கலாம்.” என்று சவால் விட்ட வண்ணம் மூடப்பட்டிருந்த பாதை வழியாக பயணித்துள்ளார்.

அரசாங்கத்தின் போக்குகளில் சிரேஷ்ட அமைச்சர்கள் கடுமையாக அதிருப்தி கொண்டுள்ளமையின் இன்னொரு வெளிப்பாடாகவே இதனை நோக்க முடியும்.

ஏனெனில் பாதுகாப்புச் செயலாளரின் வாகனத் தொடரணி செல்லும் பாதைகளில் இதுவரை காலமும் ஜனாதிபதியைத் தவிர பிரதமரே வந்தாலும் அனுமதிக்கப்படாத நிலையொன்றே காணப்பட்டிருந்தது.

ஆயினும் அதனை மீறி சிரேஷ்ட அமைச்சர் விக்கிரமநாயக்க பயணித்துள்ளமையானது, கோத்தபாய ராஜபக்ஷவின் ஆதிக்கத்துக்கு நேரடி சவால் விட்டதற்கு ஒப்பானதாகவே கணிக்கப்படுகின்றது.

0 comments:

Post a Comment