அப்துல் ரஸாக் அதிரடி; பாக். அணி புதிய சாதனையுடன் வெற்றி
நியூஸிலாந்துடனான 3 ஆவது 20 ஓவர் போட்டியில் பாகிஸ்தான் அணி 103 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது. பாகிஸ்தான் அணியின் சகலதுறை வீரர் அப்துல் ரஸாக் துடுப்பாட்டத்திலும் பந்துவீச்சிலும் பிரகாசித்தார்.
டெஸ்ட் அந்தஸ்துள்ள அணிகளுக்கிடையிலான ட்வென்டி20 சர்வதேச போட்டிகளில் ஓர் அணி பெற்ற மிகப்பெரிய வெற்றி இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
கிறைஸ்ட் சேர்ச் நகரில் இன்று நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்க 183 ஒட்டங்களைப் பெற்றது. ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் அஹமட் ஷெஹாட் 30 பந்துவீச்சுளில் 54 ஓட்டங்களைப் பெற்றார்.
சகலதுறை வீரர் அப்துல் ரஸாக் அதிரடியாகத் துடுப்பெடுத்தா 11 பந்துவீச்சுகளை மாத்திரே எதிர்கொண்டு 3 சிக்ஸர்கள் 3 பௌண்டரிகள் உட்பட 34 ஓட்டங்களைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது. மொஹமட் ஹாபிஸ் 23 பந்துவீச்சுகளில் 30 ஓட்டங்களைப் பெற்றார்.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 80 ஓட்டங்களுடன் சுருண்டது. அவ்வணி சார்பில் ஸ்கொட் ஸ்டைரிஸ் 34 பந்துவீச்சுகளில் 45 ஓட்டங்களைப் பெற்றார். வேறு எவரும் 10 ஓட்டங்களைக்கூட நெருங்கவில்லை.
அவ்வணி 3 ஓட்டங்களைப்பெற்றிருந்த நிலையில் 4 ஆவது விக்கெட்டையும் இழந்தது. முதல் நான்கு வீரர்களும் ஓட்டமெதுவுமின்றி ஆட்டமிழந்தனர்.
பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களில் சஹீட் அவ்ரிடி 14 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும் அப்துல் ரஸாக் 13 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். அப்துல் ரஸாக் இப்போட்டியின் சிறப்பாட்டக்காரராகத் தெரிவானார்.
இத்தொடரின் முதல் இரு போட்டிகளிலும் நியூஸிலாந்து அணி வெற்றி பெற்றதால் அவ்வணி இத்தொடரின் சம்பியனாகியுள்ளது.
1 comments:
edumaziri sports news kalaiyum podunggo appazan website nalla irukkum
Post a Comment