முகத்திரை அணிவதற்கு தடை விதிக்கும் ஃப்ரான்ஸ் அரசின் சட்டம் எதிர்வரும் ஏப்ரல் 11 முதல் நடைமுறைக்கு வருகிறது.
முகத்தை மறைக்கும் வகையில் முகத்திரை அணிவதற்கு தடை விதிக்கும் ஃப்ரான்ஸ் அரசின் சட்டம் எதிர்வரும் ஏப்ரல் 11 முதல் நடைமுறைக்கு வருகிறது. குறிப்பாக, இஸ்லாமியப் பெண்கள் மரபு காரணமாக அவ்வாறு அணிந்து வருவார்களானால், அருகிலுள்ள காவல் நிலையத்துக்கு வரும்படி கோரப்பட்டு, முகத்திரை நீக்கக் கோரப்படுவார்கள் அல்லது அபராதம் விதிக்கப்படும் என்று அந்தச் சட்டம் உள்ளதாம்.
"இது ஒரு குறியீடான சட்டம் தான், அதற்காக எல்லா முஸ்லிம் பெண்களையும் துன்புறுத்துவதாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்று ஃப்ரேஞ்ச் அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
"தேவையற்ற குழப்பத்தைத்தான் இது ஏற்படுத்தும்" என்று பாரிஸ் நகர இமாம் மூஸா நியாம்பில் கருத்துத் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு இச்சட்ட மசோதா விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, இது முஸ்லிம் பெண்களின் உரிமையைப் பறிக்கும் செயல் என்று கண்டனங்கள் எழுந்தது நினைவிருக்கலாம்.
முகத்தை மறைக்கும் எந்த ஆடை வகையையும், பொது இடங்களில், குறிப்பாக, வீதிகள், பொது போக்குவரத்து வாகனங்கள், கடைகள், பள்ளிகள், பொது அவைகள், அரச அலுவலகங்கள், மருத்துவமனைகளில் அணியக்கூடாது என்று இந்தச் சட்டம் சொல்கிறது. மீறுவோர் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு திரை நீக்கி தங்கள் அடையாளத்தை பதிவு செய்யப் பணிக்கப்படுவார்களாம். மறுத்தால் இருநூற்று எட்டு அமெரிக்க டாலர்கள் அபராதம் விதிக்கப்படும்.
4 comments:
கட்டாயம் பேஸ் கவர் பண்ணத்தான் வேண்டுமா இஸ்லாத்தில்? அல்லது பர்தா மட்டும் அணிந்தால் போதுமா ?
நம்முடைய்ய சௌதி மன்னர்கள் இப்போவாவது எழுந்து நிப்பர்களா எண்டு தான் தெரியவில்லை,
எமது அரபு நாடுகளுக்கு வரும் குரிஹ்த்த நாட்டைச்சேர்ந்த சுற்றுலாப்பயணிகளுக்கு இஸ்லாமிய ஆடை அணிய வேண்டும் என்று சட்டம் போட்டால்தான் சரி,
arabikal, onnaam nombar kaadenukal. summa netla thediparthaal awanukalappaththi nallaaka theriyawarum. awanukalawathu shattam poduwathawathu. hehehehe
that is true....
Those who are living in middle east country, include foreign employees 95% addicted to smoke, drug, drunk, prostitution.
As im working there, i have seen all these.
அல்ஜீரியா போன்ற வட ஆபிரிக்க நாடுகளை சுரண்டுவதற்காக போன பிரஞ்சுகாரர் அந்தந்த நாட்டு வழக்கப்படி உடைகள் அணிந்ததது கிடையாது. ஆனால் இப்போ பிரான்சில் இருக்கும் வட ஆபிரிக்க மக்கள் தமது வழக்கப்படி உடை அணிய முடியாதாம்.
இனி மேல் தேவாலயங்களில் கிறிஸ்தவ திருமணப் பெண்களை எல்லாம் பகிரங்க இடத்தில் முகத்தை மூடி திரை போட்டதற்காக பிரெஞ்சு போலீசார் கைது செய்யப் போகிறார்களே !!
- Nalliah Thayabharan
Post a Comment