அல்பத்ரியா மஹாவித்தியாலயத்தில் உயர்தர விஞ்ஞானப் பிரிவு ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடல்!
க.பொ.த. சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் பெற்றோர்களின் முயற்சியினால் எமது பாடசாலையில் உயர்தர வகுப்பு விஞ்ஞானப் பிரிவு ஆரம்பிப்பதற்கான ஆரம்பகட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் அறியக்கிடைக்கின்றன.
இவர்களின் இந்த முயற்சியின ஒருகட்டமாக கஹடோவிட மற்றும் ஓகொடபொலயைச் சேர்ந்த விஞ்ஞானத்துறையில் உயர்தர வகுப்பில் கல்வி கற்ற சகோதர, சகோதரிகளுடன் கலந்துரையாடலொன்றை ஏற்பாடு செய்துள்ளதாகவும். அதற்காக அழைப்பிதல் உரியவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அறியக்கிடைக்கின்றது. அழைப்பிதழின் பிரதியொன்று கிழே இணைக்கப்பட்டுள்ளது. இவர்களின் இந்த முயற்யின் வெற்றிக்கு எல்லாம் வல்ல அல்லாஹ்வை நாமும் பிரார்த்திப்போமாக..
5 comments:
சிறந்த முயற்சி...எனினும் க.பொ.த சாதாரண தரத்திற்கான முயற்சிகள் அதிகம் மேற்கொள்ளப்படல் வேண்டும்.
நல்ல முயற்சி, இந்த முயற்சியை பாடசாலை நிருவாகமோ அல்லது SDS ஓ, பெற்றோர்களின் கையில் விட்டு பரிசீளிப்பது முறையல்ல. ஏனெனில் பணத்தைவிட பிள்ளைகளின் எதிர்காலம் பெற்றோர்களுக்கு முக்கியமானதாகும். சாதக பாதகங்களை அறிந்த ஆசிரியர்கள் இதனை விளக்கினால் இன்னும் சிறப்பாக இருக்கும். தமிழில் எழுதுவதற்க சரியான பயம்...தமிழ் பிழைகள் இருந்தால் மண்ணிக்கவும்..... நன்றி
உண்மையில் மெச்சத்தக்க முயற்சியே. அதிபரும் உயர் மட்டத்தினரும் தப்பிப்பிழைக்க முயன்றிருப்பது வருந்தத்தக்கது மட்டுமல்ல; கண்டிக்கத்தக்கதுமாகும். ஏதுமறியாப் பெற்றோரினை முன்னிலைப்படுத்தாமல் துறை சார்ந்தவர்களும் பாடசாலை மட்டத்தினரும் முன்னின்று கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தால் அன்றைய ஒன்று கூடல் 20ஐத் தாண்டி 200ஆகியிருக்கும். கைர், வெற்றிக்கு வாழ்த்துக்கள்.
நிச்சயம் வரவேற்க்கத்தக்கது. ஆனால் இலகுவான விடயமன்று. பாரிய திட்டங்கள் போட்டு மாணவர்களிடம் தனியார் வகுப்புக்களை நம்ப வைத்து கழுத்தருக்காது நம்பிக்கையான தேர்ச்சி பெற்ற ஆசான்களின் வழிகாட்டலில் ஆரம்பியுங்கள். பாடசாலை வளர்ச்சி நிச்சயம் மாணவர்களின் உழைப்பிலும் ஆசான்களின் தரத்திலும்தான் உள்ளது.
நிச்சயம் வரவேற்க்கத்தக்கது. ஆனால் இலகுவான விடயமன்று. பாரிய திட்டங்கள் போட்டு மாணவர்களிடம் தனியார் வகுப்புக்களை நம்ப வைத்து கழுத்தருக்காது நம்பிக்கையான தேர்ச்சி பெற்ற ஆசான்களின் வழிகாட்டலில் ஆரம்பியுங்கள். பாடசாலை வளர்ச்சி நிச்சயம் மாணவர்களின் உழைப்பிலும் ஆசான்களின் தரத்திலும்தான் உள்ளது.
Post a Comment