நடு வானில் பறக்கும் போது முஸ்லிம் பெண்ணை இழிவுப்படுத்திய பணி பெண் -பேஸ்புக்கால் 24 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்டது நிர்வாகம்....!!
நடு வானில் பறக்கும் போது முஸ்லிம் பெண்ணுக்கு வயிற்று வலி : சோடா கேட்டதால் இழிவுப்படுத்திய பணி பெண் -ஃபேஸ்புக்கால் 24 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்டது நிர்வாகம்....!!
தாஹிரா அஹ்மத் என்ற முஸ்லிம் பெண்மணி நேற்று முன்தினம் (30-05-2015) அமெரிக்க விமானத்தில் பயணம் மேற்கொண்டுள்ளார்.
விமானம் 30,000 கிமீ உயரத்தில் பறந்த போது தாஹிராவுக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது, இதனால் பணிப்பெண்ணிடம் சோடா கேட்டுள்ளார்.
அப்போது அவருக்கு (மூடி திறக்கப்பட்ட நிலையில் வழங்கப்பட்ட) சோடாவில் கேஸ் இல்லையென்பதால், மூடி சீலிடப்பட்ட சோடா வழங்குமாறு கேட்ட தாஹிராவுக்கு அவ்வாறு சீலிடப்பட்ட எந்த பானங்களும் வழங்கமுடியாது என்று பணிப்பெண் தெரிவித்துள்ளார்.
சற்று நேரத்தில், அருகிலிருந்த ஒரு பயணிக்கு சீலிடப்பட்ட பீர் பாட்டில் வழங்கப்பட்டதைப் பார்த்த தாஹிரா, சீலிடப்பட்ட சோடா வழங்கப்படாதபோது சீலிடப்பட்ட பீர் வழங்கியது எப்படி எனக்கேட்டார்.
அதற்கு, விமானப் பணிப்பெண் அளித்த பதிலை கேட்டு அதிர்ந்துவிட்டார் தாஹிரா.
நாங்கள் சிலருக்கு சீலிடப்பட்ட பானங்களை வழங்க முடியாது, ஏனெனில் அவர்கள் அதனை ஆயுதமாக கையாளும் வாய்ப்புள்ளது என்றார்.
தரையிலிருந்து 30,000 கி.மீ. உயரத்தில், விமானத்தில் தனக்கு ஏற்பட்ட அவமானத்தை தட்டிக்கேட்க ஆளில்லாததை கண்டு மிகவும் வேதனையடைந்தார், தாஹிரா.
அருகிலிருந்த பயணி ஒருவர் ஒருபடி மேலே சென்று...
முஸ்லிம்கள் உங்களிடம் எப்படி நடந்துக் கொள்ளவேண்டும் என்பது விமான நிறுவனத்துக்கு நன்றாக தெரியும், நீங்கள் வாயைப் பொத்திக்கொண்டு பயணிக்கலாம் என்று மதவெறியை தூண்டும் விதமாக பேசி சண்டையிட்டுள்ளார்.
தனக்கேற்பட்ட இந்த அவமானத்தை, நேற்றைய தினம் பேஸ்புக்கில் பதிவு செய்த தாஹிராவுக்கு ஆறுதலும் - ஆதரவும் பெருகியது.
தாஹிராவை அவமானப்படுத்திய யுனைடெட் ஏர்லைன்ஸ்ஐ புறக்கணிப்போம் என முஸ்லிம்கள் பலர் பின்னூட்டமிட்டதுடன் பலருக்கும் ஷேர் செய்து பிரச்சார இயக்கம் நடத்தினர்.
இதையடுத்து, சிலமணி நேரங்களிலேயே யுனைடெட் ஏர்லைன்சின் செய்தி தொடர்பாளர் சார்லஸ் ஹூபர்ட் தாஹிராவை தொடர்பு கொண்டு மன்னிப்பு கேட்டுக்கொண்டதுடன் மேற்படி விமானப்பணிப்பெண் மற்றும் பயணி ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.
தகவல் உதவி : மறுப்பு (முகநூல் பக்கம்)
0 comments:
Post a Comment