இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் சகல நூடில்ஸ்களிலும் 0.3 மி.கிராம் ஈயம், விளம்பரங்களுக்கும் உடனடி தடை
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் சகல உடனடி நூடில்ஸ் வகைகளிலும் 0.3 மி.கிராமிற்கும் அதிகளவாக ஈயம் உள்ளமை இரசாயன ஆய்வின் மூலம் கண்டறியப்படுமாயின் அவற்றினை உடனடியாக சந்தையில் இருந்து நீக்குவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
அத்துடன் உடனடி நூடில்ஸ் தொடர்பில் தற்போதுள்ள நிலைமை மாறும்வரை சகல நூடில்ஸ் வகைகள் தொடர்பான விளம்பரங்கள் பிரசாரங்களை மறு அறிவித்தல் வரை தடை செய்யவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
கடந்த சில வாரங்களாக இந்தியாவில் உடனடி நூடில்ஸ் வகைகளில் ஈயமெனும் இரசாயனப் பதார்த்தம் அதிகளவில் உள்ளடக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஊடகங்களின் வாயிலாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இலங்கையிலும் சகல நூடில்ஸ்களையும் பரிசோதனைக்குட்படுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்திருந்தது.
இதற்கமைய நேற்று புதன்கிழமை அமைச்சில் அவசரமாகக்கூடியுள்ள விசேட உணவு ஆலோசனைக் குழுவினர் உடனடித் தீர்மானங்களையும் எடுத்துள்ளனர்.
இலங்கையில் உள்ள வெவ்வேறு உடனடி நூடில்ஸ் எங்கிருந்து கொண்டுவரப்படுகின்றது? எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகின்றது?எவ்வாறான இரசாயனப் பதார்த்தம் உள்ளடக்கப்பட்டுள்ளது? என்பது குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
இலங்கைக்கு இந்தியா உட்பட ஏனைய நாடுகளில் இருந்து உடனடி நூடில்ஸ்களையும் இறக்குமதி செய்வதை தடை விதித்துள்ளதுடன், மொனோ சோடியம் குளுட மேட் என்ற இரசாயனப் பதார்த்தத்தை தவிர ஏனையவை இலங்கையிலே உற்பத்தி செய்யப்படுவதை உறுதி செய்துள்ளனர்.
பிற நாடுகளில் உடனடி நூடில்ஸ்களில் எவ்வளவு ஈயம் அடங்கியிருக்க வேண்டுமென தெளிவாகக் குறிப்பிட்டுள்ள போதும் இலங்கையில் அதன் பெறுமானம் குறிப்பிடப்படவில்லை. இதன்படி இந்தியாவில் 2.5 மி.கி., மலேசியாவில் 2.0 மி.கி., சிங்கப்பூர் 2.0 மி.கி., அவுஸ்திரேலியாவில் டி.3 மி.கி. என்ற வகையில் நூடில்ஸ்களில் ஈயம் அடங்கியுள்ளது.
எனவே இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் சகல நூடில்ஸ்களும் நாட்டிற்குள் கொண்டு வருவதற்கு முன்பு ஈயம், இரசம், ஆசனிக் மற்றும் கட்மியம் பரிசோதனை செய்த பிறகே மக்கள் பாவனைக்கு விடப்படவுள்ளது. சந்தைகளில் உள்ள சகல நூடில்ஸ் வகைகளின் மாதிரிகளைப் பெற்று இரசாயனப் பரிசோதனைக்குட்படுத்தப்படவுள்ளது.
உற்பத்தியாளர்களையும் உணவுச் சட்டத்திற்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் ஊடாகவே செயற்படுத்தப்படவுள்ளது. ஆய்வுகளின்படி 0.3 மி.கி. ஈயத்தை விட அதிகமாக இருந்தால் உடனடியாக தடைசெய்யப்படும். அத்துடன் மறு அறிவித்தல் வரை நூடில்ஸ் தொடர்பிலான விளம்பரங்கள், பிரசாரத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
jaffnamuslim

0 comments:
Post a Comment