நாட்டில் உள்ள இஸ்லாமிய வங்கி முறைமைக்கு எதிராக பொது பல சேனா
இஸ்லாமிய மதரீதியான வங்கியியல் நடவடிக்கைகளை மத்திய வங்கி மற்றும் நாட்டில் உள்ள வர்த்தக வங்கிகள் ஊக்குவிப்பதாக கடும்போக்கு அமைப்பான பொதுபல சேனா மீண்டும் சர்ச்சையை எழுப்பியுள்ளது
இன்று இடம்பெற்ற அந்த அமைப்பின் ஊடக மாநாட்டிலேயே மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது , இலங்கையின் மத்திய வங்கியும் ஏனைய சில வணிக வங்கிகளும் மத ரீதியான வங்கியியல் நடவடிக்கைகளை ஊக்கப்படுத்தி வருவதாக பொதுபல சேனா இயக்கத்தின் தலைவர் கலபொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கியும் சில வணிக வங்கிகளும் மத ரீதியான வங்கியியல் நடவடிக்கைகளை அறிமுகம் செய்து வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். வங்கியியல் நடவடிக்கைகளில் மதக் கொள்கைகளை உட்படுத்துவது ஆரோக்கியமான விடயமாக அமையாது
வங்கி, காப்புறுதி, பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் போன்ற விடயங்களில் இஸ்லாமிய மத ரீதியான கொள்கைகள் உட்படுத்தப்பட்டால் அது நல்லிணக்கத்தையும் ஐக்கியத்தையும் பாதிக்கும் ஷரியா வங்கி, ஹலால் வங்கி போன்ற கொள்கைகள் இலங்கைக்கு பொருத்தமற்றது என அவர் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமிய வங்கி முறை நாட்டுக்கு ஆபத்தானது , என அந்த கடும்போக்கு பொது பல சேனா தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment