கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

பெளத்த ஆசிரமத்தில் வளர்ந்து உயிரிழந்த பாடசாலை மாணவனின் உடல் முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம்.(படங்கள்)

மீரிகம அம்பன மகா போதி சிறுவர் இல்லத்தில் இருந்து பாடசாலை சென்ற போது ரயிலில் மோதி இறந்த 11 வயது மாணவனின் உடல் இன்று சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் கலந்து கொண்டு கல்லெலிய முஸ்லிம் மையா வாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. 

சிறுவர் இல்லத்தில் பௌத்த சூழலில் வளர்ந்த 11 வயது முஹம்மத் அயாஷ் நேற்று முன்தினம் காலை பாடசாலை செல்லும் பொது மீரிகமையில் ரயிலில் மோதி அவ்விடத்திலேயே உயிரிளந்துள்ளான். பெற்றோரை கண்டு பிடிக்க முடியாமல் வத்துபிடிவல வைத்திய சாலையில் பிரேத பரிசோதனை நடை பெற்று முடிந்த நிலையில் வைக்கப்பட்டிருந்த ஜனாஸாவை முஸ்லிம் பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப் பட வேண்டுமென சிலர் கூறியதனால் பொலிஸ் மற்றும் சிறுவர் நலத் திணைக்களத்தின் அனுமதியோடு கல்லெலியா முஸ்லிம் மைய வாடியில் நலடக்கம் செய்யப்பட்டது,

ஜனாஸாவை பள்ளி வாசலுக்கு கொண்டு வந்த போது மீரிகம சாசன பீடாதிபதி மற்றும் பல பௌத்த மதத் தலைவர்கள் சிங்கள மற்றும் ஊர் முஸ்லிம் ஜமாத்தார்கள் கலந்து கொண்டு நல்லடக்கம் செய்யப்பட்டது,
முஹம்மத் அயாஷின் மறு உலக வாழ்வுக்காக நாமும் இந்த ரமலான் மாதத்தில் பிரார்த்திப்போம்.

சவுதியில் இருந்து எம். றிஸ்வான் காலித்

0 comments:

Post a Comment