யார் இந்த ஷீஆக்கள்? - பகுதி 01
~பதவிளக்கம்~
"""""""""""""""""""""""""""""""
பவ்ஸான் இப்னு மீரான்.
"""""""""""""""""""""""""""""""
ஷீஆ என்ற பதம் அரபு மொழியில் பின்பற்றுபவர்கள், உதவி செய்வோர் எனும் கருத்தில் பயன்படுத்தப்படுகின்றது. இவ்வாறு பயன்படுத்தப்பட்டாலும் அலி (ரலியல்லாஹு அன்ஹு) மற்றும் அவர்கள் குடும்பத்தில் வந்த சிலரை பின்பற்றுவதாக கூறிக்கொண்ட பிரிவினருக்கு உரித்தான பெயராக இது மாறிவிட்டது என்று மொழித்துறை அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.
இப்பதம் அல்குர்ஆனில் 12 இடங்களில் வந்துள்ளது. இமாம் இப்னுல் ஜவ்ஸி (ரஹ்மாஹுல்லாஹ்) அவர்கள், "தப்ஸீர் கலை அறிஞர்கள் ஷீஆ என்ற பதம் அல்குர்ஆனில் 4 கருத்துக்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது" என்று குறிப்பிடுகின்றனர்.
1) பிரிவுகள்
அவனிடமே மறைவானவற்றின் திறவு கோல்கள் இருக்கின்றன. அவற்றை அவனன்றி எவரும் அறியார். மேலும் கரையிலும் கடலிலும் உள்ளவற்றையெல்லாம் அவன் அறிவான்; அவன் அறியாமல் ஓர் இலையும் உதிர்வதில்லை. பூமியின் (ஆழத்தில் அடர்ந்த) இருள்களில் கிடக்கும் சிறு வித்தும், பசுமையானதும், உலர்ந்ததும் (எந்தப் பொருளும்) தெளிவான (அவனுடைய) பதிவேட்டில் இல்லாமலில்லை. <6:59>6:59>
(நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு முன்னால் முந்திய பல கூட்டத்தாருக்கும் நாம் (தூதர்களை) அனுப்பிவைத்தோம். <15:10>15:10>
நிச்சயமாக ஃபிர்அவ்ன் இப்பூமியில் பெருமையடித்துக் கொண்டு, அந்த பூமியிலுள்ளவர்களைப் (பல) பிரிவினர்களாக்கி, அவர்களிலிருந்து ஒரு கூட்டத்தாரை பலஹீனப்படுத்தினான்; அவர்களுடைய ஆண் குழந்தைகளை அறுத்(துக் கொலை செய்)து பெண் குழந்தைகளை உயிருடன் விட்டும் வைத்தான்; நிச்சயமாக அவன் குழப்பம் செய்வோரில் ஒருவனாக இருந்தான். <28:4>28:4>
எவர்கள் தங்கள் மார்க்கத்தில் பிரிவினைகளை உண்டாக்கி (பல) பிரிவுகளாகப் பிரிந்து விட்டனரோ; (அவர்களில் ஆகி விட வேண்டாம். அவ்வாறு பிரிந்த) ஒவ்வொரு கூட்டத்தாரும் தங்களிடமிருப்பதைக் கொண்டே மகிழ்வடைகிறார்கள். <30:32>30:32>
2) குடும்பம், பரம்பரை
(ஒரு நாள் மூஸா) மக்கள் அயர்ந்து (தூக்கத்தில் பராமுகமாக) இருந்த போது, நகரத்தில் நுழைந்தார்; அங்கு இரண்டு மனிதர்கள் சண்டையிட்டுக் கொண்டியிருந்ததைக் கண்டார்; ஒருவன் அவர் கூட்டத்தைச் சேர்ந்தவன்; மற்றொருவன் அவர் பகைவன் கூட்டத்தைச் சேர்ந்தவன்; பகைவனுக்கெதிராக உதவி செய்யுமாறு அவர் கூட்டத்தான் கோரினான் - மூஸா அ(ப் பகை)வனை ஒரு குத்துக் குத்தினார்; அவனை முடித்தார்; (இதைக் கண்ட மூஸா): “இது ஷைத்தானுடைய வேலை; நிச்சயமாக அவன் வழி கெடுக்கக்கூடிய பகிரங்கமான விரோதியாவான்” என்று கூறினார். <28:15>28:15>
3) ஒரு மதத்தை சார்ந்தவர்கள்.
பின்னர், நாம் ஒவ்வொரு கூட்டத்திலிருந்தும் அர்ரஹ்மானுக்கு மாறு செய்வதில் கடினமாக - தீவிரமாக - இருந்தவர்கள் யாவறையும் நிச்சயமாக வேறு பிரிப்போம். <19:69>19:69>
(நிராகரிப்போரே!) உங்களில் எத்தனையோ வகுப்பார்களை நாம், நிச்சயமாக அழித்திருக்கின்றோம், எனவே (இதிலிருந்து) நல்லுணர்வு பெறுவோர் உண்டா? <54:51>54:51>
மேலும், அவர்களுடைய கூட்டத்தாருக்கு முன்னர் செய்யப்பட்டது போல் அவர்களுக்கும் அவர்கள் இச்சித்து வந்தவற்றுக்கும் இடையே திரை போடப்படும்; நிச்சயமாக அவர்கள் ஆழ்ந்த சந்தேகத்திலேயே இருந்தார்கள். <34:54>34:54>
4) பல்வேறுபட்ட யோசனைகள்.
(நபியே!) நீர் கூறும்: “உங்கள் (தலைக்கு) மேலிருந்தோ அல்லது உங்களுடைய கால்களுக்குக் கீழிருந்தோ உங்களுக்குத் துன்பம் ஏற்படும்படி செய்யவும்; அல்லது உங்களைப் பல பிரிவுகளாக்கி உங்களில் சிலர் சிலருடைய கொடுமையை அனுபவிக்கும்படிச் செய்யவும் அவன் ஆற்றலுள்ளவனாக இருக்கின்றான்.” அவர்கள் விளங்கிக் கொள்வதற்காக (நம்)வசனங்களை எவ்வாறு (பலவகைகளில் தெளிவாக்கி) விவரிக்கின்றோம் என்பதை (நபியே!) நீர் கவனிப்பீராக. <6:65>6:65>
(நுஸ்ஹதுந்நாழிர்)
ஷீஆ என்ற வாசகம் பெரும்பாலும் அல்குர்ஆனிலே இழிவான கருத்தின் அடிப்படையிலே பயன்படுத்தப்பட்டுள்ளது என்று இமாம் இப்னுல் கையிம் (ரஹ்மாஹுல்லாஹ்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள். (பத்தாயிஉல் பவாயித்)
ஷீஆ என்ற பதத்திற்கு பரிபாசையில் பலரும் பலவிதமான வரைவிலக்கணங்களை வழங்கியுள்ளனர். இமாம் அஷ்அரி அவர்களின் கூற்று மிகவும் சுருக்கமானதாக உள்ளது.
அவர்கள் அலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களை சார்ந்திருந்தாலும் நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களின் தோழர்கள் எல்லோரிலும் அலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களை முற்படுத்தியதனாலுமே அவர்களுக்கு ஷீஆ என்று சொல்லப்பட்டது.
(மகாழாதுல் இஸ்லாமிய்யீன்)
இவ்வாறு சுருக்கமாக கூறப்பட்டாலும், ஷீஆக்களை பொருத்தவரை கொள்கை, வணக்கவழிபாடுகளில் முஸ்லிம்களுக்கு முற்றிலும் முரண்படுகின்ற பல கொள்கைகளை உருவாக்கிக் கொண்டனர். மேலும் எந்தவொரு சிறிய விடயமாக இருப்பினும் பெரிய விடயமாக இருப்பினும் மற்றவர்களுக்கு முரண்படுவது அவர்களின் மதத்தின்படி கடமையாகும். இவற்றையெல்லாம் அலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் பிள்ளைகள் சிலரின் பெயரால் செய்துவருகின்றனர். அவர்கள் இந்த ஷீஆக்களைவிட்டும் அவர்களின் கொள்கைகளை விட்டும் வானம் பூமியைவிட தூரமானவர்கள்.
தொடர்ந்து, "ஷீஆக்களின் தோற்றமும் வளர்ச்சியும்" என்பதை அடுத்த பதிவில் வாசிப்போம்.
இன் ஷா அல்லாஹ்!
பவ்ஸான் இப்னு மீரான்.
0 comments:
Post a Comment