தங்கத்திலான புத்தர் சிலையுடன் திஹாரியில் 4 பேர் கைது :
விலை மதிக்க முடியாத தங்கத்திலான புத்தர் சிலை ஒன்றை உருக்குவதற்கு தயாரான சந்தேக நபர்கள் நால்வர், அதற்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக நிட்டம்புவை பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாருக்கு கிடைந்த இரகசிய தகவலை தொடர்ந்து திஹாரிய மின்ஹாத் மாவத்தை பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றை சுற்றி வளைத்த போதே குறித்த புத்தர் சிலை மற்றும் அதனை உருக்குவதற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களுடன் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திஹாரியைச் சேர்ந்த இருவரும், உடுகொடை மற்றும் கல்-எலிய பிரதேசத்தை சேர்ந்த இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த தங்கத்திலான புத்தர் சிலை எங்கிருந்து கொண்டுவரப்பட்டது என்பது தொடர்பில் இதுவரை தகவல் கிடைக்கப்பெறவில்லை எனவும், சந்தேக நபர்கள் பாவித்த கையடக்கத் தொலைபேசிகள் சிலவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளதாகவும், புத்தர் சிலை எங்கிருந்து கொண்டுவரப்பட்டது என்பது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
சந்தேக நபர்கள் இன்றைய தினம் (19) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.
அத்தனகல்ல உதவிப் பொலிஸ் அத்தியட்சகரின் தலைமையில் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. (ஸ)
0 comments:
Post a Comment